என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 7 மாடலின் இந்திய விலை மற்றும் விறப்னை விவரங்கள் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 7 மாடல்களை ஐபோன் 13 சீரிஸ் உடன் அறிமுகம் செய்தது. ஐபோன் 13 சீரிஸ் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த நிலையில், இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு அக்டோபர் 8 ஆம் தேதியே துவங்குகிறது. இந்தியாவில் முன்பதிவு மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது.

     ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இந்திய விலை ரூ. 41,900 என துவங்குகிறது. கடந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 துவக்க விலை ரூ. 40,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்ட போல்ட் ஆடியோ நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.


    போல்ட் ஆடியோ நிறுவனம் தனது புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய சோல்பாட்ஸ் மாடலில் 10 மில்லிமீட்டர் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஆக்டிவ் நாய்ஸ் பில்ட்டரிங் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இயர்பட்களில் டச்பேட் உள்ளது. இதை கொண்டு வால்யூம், பாடல்களை மாற்றுவது போன்ற அம்சங்களை இயக்கலாம்.

     போல்ட் இயர்பட்ஸ்

    இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. போல்ட் ஆடியோ ஏர்பேஸ் சோல்பாட்ஸ் மாடல் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2499 ஆகும். விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

    உலகம் முழுக்க ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை குறிவைத்து புதிய மால்வேர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

    சுமார் ஒரு கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் புதிய மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான சிம்பெரியம் தெரிவித்துள்ளது. இந்த மால்வேர் க்ரிப்ட்ஹார்ஸ் என அழைக்கப்படுகிறது. இது உலகளாவிய ஆண்ட்ராய்டு பயனர்களை பாதித்து இருக்கிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் இந்த மால்வேர் பரவி இருக்கிறது. ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மால்வேர் பரப்பிய செயலிகள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    க்ரிப்ட்ஹார்ஸ் மால்வேர் செயலிகளின் குறியீடுகளில் நுழைந்து பயனர்களை தீங்கு விளைவிக்கும் இணைய முகவரிகளை க்ளிக் செய்ய வைக்கும். இந்த இணைய முகவரிகள் பயனர் பணத்தை திருடி ஹேக்கர்களின் அக்கவுண்ட்களுக்கு பரிமாற்றம் செய்கின்றன. 

    இந்த மால்வேர் பயனர் அனுமதியின்றி பிரீமியம் சேவைகளுக்கு சந்தாதாரர் ஆக மாற்ற வைக்கிறது. மால்வேர் கொண்டு உலகின் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பல கோடி பேரை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது. பயனர்களை ஏமாற்ற உள்ளூர் மொழியிலும் மால்வேர் செயல்பட வைக்கப்பட்டுள்ளது.
    நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கின்றன.


    ப்ளிப்கார்ட் தளத்தில் நோக்கியா ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டிவிக்கள் புல் ஹெச்டி, அல்ட்ரா ஹெச்டி மற்றும் கியூ.எல்.இ.டி. தரங்களில் கிடைக்கின்றன. இந்த டிவிகள் முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாக ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

    இவற்றில் ஹார்மன் ஆடியோ இ.எப்.எக்ஸ்., 60 வாட் ட்வின் ஸ்பீக்கர்கள், டால்பி விஷன், டால்பி அட்மோஸ், காமா என்ஜின் 2.2, டூயல் பேண்ட் வைபை, டேட்டா சேவர் போன்ற அம்சங்கள் உள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11, 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, வைபை, ப்ளூடூத் 4.2 வழங்கப்பட்டு இருக்கிறது.

     நோக்கியா ஸ்மார்ட் டிவி

    விலை விவரம்

    நோக்கியா 50 இன்ச் 4கே எல்.இ.டி. டிவி ரூ. 44,999
    நோக்கியா 55 இன்ச் 4கே எல்.இ.டி. டிவி ரூ. 49,999
    நோக்கியா 50 இன்ச் 4கே ஒ.எல்.இ.டி. டிவி ரூ. 49,999
    நோக்கியா 55 இன்ச் 4கே ஒ.எல்.இ.டி. டிவி ரூ. 54,999

    நோக்கியா 43 இன்ச் எப்.ஹெச்.டி. டிவி மற்றும் 4கே மாடல்கள் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவை அக்டோபர் 3, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் கிடைக்கின்றன.
    நோக்கியா நிறுவனத்தின் புதிய லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    நோக்கியா பியுர்புக் எஸ்14 லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய லேப்டாப் 14 இன்ச் புல் ஹெச்.டி. ஸ்கிரீன், இன்டெல் ஐ5 11-ம் தலைமுறை குவாட்கோர் பிராசஸர், 8 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது.

    இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, விண்டோஸ் 11, ஹெச்.டி. ஐ.ஆர். வெப்கேமரா, விண்டோஸ் ஹெல்லோ பேஸ் அன்லாக், பேக்லிட் கீபோர்டு, பிரெசிஷன் டச்பேட் மற்றும் ஜெஸ்ட்யூர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வைபை 6, ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. டைப் ஏ போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. உள்ளது.

     நோக்கியா பியுர்புக் எஸ்14

    இந்தியாவில் புதிய நோக்கியா பியுர்புக் எஸ்14 விலை ரூ. 56,990 என துவங்குகிறது. இதன் விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 
    நோக்கியா நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் ஒற்றை நிறத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டேப்லெட் மாடலுக்கான டீசர் நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    டீசரில் நோக்கியா டேப்லெட் விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த டேப்லெட் நோக்கியா டி20 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இத்துடன் மெல்லிய பிரேம், டார்க் பினிஷ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

     நோக்கியா டீசர்

    முன்னதாக இந்த டேப்லெட் விவரங்கள் மற்றும் விலை இணையத்தில் வெளியாகி இருந்தது. அதன்படி நோக்கியா டி20 வைபை விலை ஜி.பி.பி. 185 இந்திய மதிப்பில் ரூ. 18,600 என்றும் வைபை மற்றும் செல்லுலார் விலை ஜி.பி.பி. 202 இந்திய மதிப்பில் ரூ. 20,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    அம்சங்களை பொருத்தவரை நோக்கியா டி20 மாடலில் 10.36 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என்றும் இது புளூ நிறத்தில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
    கூகுள் நிறுவனத்தின் 23-வது பிறந்த நாளை அந்நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடுகிறது.


    உலகின் முன்னணி தேடுப்பொறி தளமான கூகுள் இன்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதற்கென கூகுள் பிரத்யேக டூடுல் ஒன்றை வடிவமைத்து இருக்கிறது. 

    அலங்கரிக்கப்பட்ட கூகுள் வார்த்தைகள், மெழுகுவர்த்தி, கேக் மற்றும் டோநட் கொண்டு டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 23 என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. 

     கூகுள் டூடுல்

    செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து துவங்கினர். தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது. 

    'ஒவ்வொரு நாளும் கூகுள் தளத்தில் பல கோடி தேடல்கள் நடக்கின்றன. உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது. லெகோ பிளாக்குகளால் உருவாக்கப்பட்ட சர்வரில் துவங்கி தற்போது உலகம் முழுக்க சுமார் 20-க்கும் அதிக டேட்டா செண்டர்களை கூகுள் கொண்டிருக்கிறது.' 

    'உலக விவரங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கூகுளின் நோக்கம் இன்றுவரை மாற்றப்படவே இல்லை,' என கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஹெச்.டி. ஸ்மார்ட் டிவி அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் ஹெச்.டி. டிவி மாடலை அறிமுகம் செய்தது. இதில் பெசல் லெஸ் டிசைன், குரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின், விவிட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த டிவியில் ஆண்ட்ராய்டு டிவி 9 மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி கொண்டிருக்கிறது.

     ரியல்மி ஸ்மார்ட் டிவி

    ரியல்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் அம்சங்கள்

    - 32 இன்ச் 1366×768 பிக்சல் ஹெச்டி டிஸ்ப்ளே
    - 7 டிஸ்ப்ளே மோட்கள்
    - குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 மீடியாடெக் பிராசஸர்
    - மாலி-470 எம்பி3 ஜிபியு
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி 
    - ஆண்ட்ராய்டு டிவி 9 
    - பில்ட்-இன் குரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ
    - வைபை, ப்ளூடூத் 5
    - 2 x ஹெச்.டி.எம்.ஐ., 1 x யு.எஸ்.பி., ஏ.வி., ஈத்தர்நெட்
    - 20 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ 

    ரியல்மி ஸ்மார்ட் டிவி நியோ 32 இன்ச் மாடல் விலை ரூ. 14,999 ஆகும். இது ப்ளிப்கார்ட், ரியல்மி மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் கிடைக்கும். 

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் பேண்ட் பெரிய கலர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் பேண்ட் 1.4 இன்ச் 167x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன், ப்ளூடூத் 5.1, 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம் ரிமைண்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் ஐ.பி.68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்போர்ட்ஸ் மோட், 18 எம்.எம். ரிஸ்ட் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார், 204 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. 

     ரியல்மி பேண்ட் 2

    ரியல்மி பேண்ட் 2 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட் பேண்ட் ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது. 

    டிசோ பிராண்டின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது லோ லேடென்சி கேமிங் மோட் கொண்டுள்ளது.


    ரியல்மி டெக்லைப் நிறுவனத்தின் டிசோ பிராண்டு இந்தியாவில் டிசோ பட்ஸ் இசட் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். 

    இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5, 10 எம்.எம். டிரைவர்கள், 88 எம்.எஸ். லோ லேடென்சி கேமிங் மோட், இ.என்.சி. போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் கேஸ் நேச்சுரல் லைட் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மீது விழும் வெளிச்சம் பல்வேறு நிறங்களை வெளிப்படுத்தும்.

     டிசோ பட்ஸ் இசட்

    டிசோ பட்ஸ் இசட் ஐ.பி.எக்ஸ்.4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதன் இயர்பட்கள் 43 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், கேஸ் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் கொண்டிருக்கின்றன. இவை முறையே 4.5 மணி நேரம் மற்றும் 16 மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளது.

    டிசோ பட்ஸ் இசட் ஆனிக்ஸ், லீப் மற்றும் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். எனினும் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த இயர்பட் ரூ. 1299 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ். கொண்டிருக்கின்றன.


    ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கின்றன. இரு மாடல்களிலும் முறையே ஹெச்டி மற்றும் எப்.ஹெச்.டி. ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் விவிட் பிக்சர் என்ஜின், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓ.எஸ்., பில்ட்-இன் குரோம்காஸ்ட், பிளே ஸ்டோர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் பேட்ச்வால் 4 உள்ளது. இது 30-க்கும் அதிக ஓ.டி.டி. தளங்களில் சர்ச் வசதி, 75-க்கும் அதிக இலவச சேனல்களுடன் அப்கிரேடு செய்யப்பட்டு இருக்கிறது. 

     ரெட்மி ஸ்மார்ட் டிவி

    இரு மாடல்களிலும் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி., டால்பி அட்மோஸ் வழங்கப்பட்டுள்ளன. ரெட்மி ஸ்மார்ட் டிவி 32 இன்ச் ஹெச்.டி. மாடல் விலை ரூ. 15,999 என்றும் 43 இன்ச் எப்.ஹெச்.டி. மாடல் விலை ரூ. 25,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளங்களுக்கு முக்கிய அப்டேட் வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ.ஓ.எஸ். 15, ஐபேட் ஓ.எஸ். 15 மற்றும் வாட்ச் ஓ.எஸ். 8 வெளியானது. புதிய ஓ.எஸ். இலவசமாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது. இவை ஐபோன், ஐபேட் மற்றும் வாட்ச் போன்ற சாதனங்களுக்கான புதிய ஓ.எஸ். ஆகும். 

    ஐ.ஓ.எஸ். 15:  

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுடன் கிடைக்கிறது. இவை தவிர ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11, ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6எஸ் சீரிஸ் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2021, 2020 வேரியண்ட்களுக்கு வழங்கப்படுகிறது.

    புதிய ஐ.ஓ.எஸ். 15 அளவில் 3 ஜிபியாக இருக்கிறது. புது ஓ.எஸ். அப்டேட் செய்ய பயனர்கள் ஐபோனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாப்ட்வேர் அப்டேட் போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். அப்டேட் செய்யும் முன் ஐபோன் அல்லது ஐபேட் குறைந்தபட்சம் 50 சதவீதம் சார்ஜ் செய்திருக்க வேண்டும்.

     ஐபேட் ஓ.எஸ். 15

    ஐபேட் ஓ.எஸ். 15:

    புதிய ஐபேட் ஓ.எஸ். 15 ஐபேட் ப்ரோ 12.9 இன்ச், ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் மற்றும் ஐபேட் ப்ரோ 9.7 இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இதே ஓ.எஸ். ஐபேட் 5, மினி 4, ஐபேட் 5 மற்றும் ஐபேட் 6-ம் தலைமுறை மாடல்கள் மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஐபேட் மினி ஐபேட் ஓ.எஸ். 15 உடன் வெளியிடப்படும். ஆப்பிள் ஐபேட் ஏர் 2-ம் தலைமுறை மாடல்களிலும் புது ஓ.எஸ். வழங்கப்படுகிறது.

    வாட்ச் ஓ.எஸ். 8:

    வாட்ச் ஓ.எஸ். 8 ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3 மற்றும் அதன்பின் வெளியான மாடல்களில் வழங்கப்படுகிறது. புதிய வாட்ச் சீரிஸ் 7 வாட்ச் ஓ.எஸ். 8 உடன் வெளியாகிறது. ஐபோன் 6எஸ், ஐ.ஓ.எஸ். 15 அல்லது அதன்பின் வெளியான ஐ.ஓ.எஸ். கொண்ட சாதனங்களில் வாட்ச் ஓ.எஸ். 8 பயன்படுத்தலாம். 

     ஐ.ஓ.எஸ். 15

    ஐ.ஓ.எஸ். 15 அம்சங்கள்:

    புதிய ஐ.ஓ.எஸ். 15 பதிப்பில் பேஸ் டைம், ஸ்பேஷியல் ஆடியோ, ஷேர்பிளே, போர்டிரெயிட் மோட், புதிய க்ரிட் மோட் மற்றும் வாய்ஸ் ஐசோலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பேஸ் டைம் அழைப்புகளை ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் சார்ந்த பிரவுசர்களிலும் பேஸ் டைம் பயன்படுத்தலாம்.

    இத்துடன் மெசேஜஸ் செயலியில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் அறியாதவர்கள், பரிமாற்றங்கள் மற்றும் விளம்பர குறுந்தகவல்களுக்கான நோட்டிபிகேஷன்களை ஆன், ஆப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் பிரைவசி சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    ஐ.ஓ.எஸ். 15 விரும்பாத பட்சத்தில் பயனர்கள் அதனை அன்-இன்ஸ்டால் செய்து ஐ.ஓ.எஸ். 14 தளத்தில் இருந்தபடி செக்யூரிட்டி அப்டேட்களை மட்டும் பெறும் வசதியை ஆப்பிள் வழங்குகிறது. 

    ×