search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள்
    X
    கூகுள்

    டூடுல் வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாடும் கூகுள்

    கூகுள் நிறுவனத்தின் 23-வது பிறந்த நாளை அந்நிறுவனம் சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடுகிறது.


    உலகின் முன்னணி தேடுப்பொறி தளமான கூகுள் இன்று தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதற்கென கூகுள் பிரத்யேக டூடுல் ஒன்றை வடிவமைத்து இருக்கிறது. 

    அலங்கரிக்கப்பட்ட கூகுள் வார்த்தைகள், மெழுகுவர்த்தி, கேக் மற்றும் டோநட் கொண்டு டூடுல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 23 என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. 

     கூகுள் டூடுல்

    செப்டம்பர் 27, 1988 அன்று கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டது. கூகுள் நிறுவனத்தை செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து துவங்கினர். தற்போது உலகம் முழுக்க பெரும்பாலானோர் பயன்படுத்தும் தேடுப்பொறியாக கூகுள் உயர்ந்து இருக்கிறது. 

    'ஒவ்வொரு நாளும் கூகுள் தளத்தில் பல கோடி தேடல்கள் நடக்கின்றன. உலகம் முழுக்க சுமார் 150-க்கும் அதிக மொழிகளில் கூகுள் தேடுப்பொறி இயங்கி வருகிறது. லெகோ பிளாக்குகளால் உருவாக்கப்பட்ட சர்வரில் துவங்கி தற்போது உலகம் முழுக்க சுமார் 20-க்கும் அதிக டேட்டா செண்டர்களை கூகுள் கொண்டிருக்கிறது.' 

    'உலக விவரங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கூகுளின் நோக்கம் இன்றுவரை மாற்றப்படவே இல்லை,' என கூகுள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

    Next Story
    ×