என் மலர்tooltip icon

    கணினி

    ரியல்மி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது.


    ரியல்மி நிறுவனம் ரியல்மி வாட்ச் டி1 ஸ்மார்ட்வாட்ச் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் வட்ட வடிவ 325பிபிஐ ஹெச்.டி. அமோலெட் ஸ்கிரீன், 110 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் ப்ளூடூத் காலிங், 4 ஜிபி மெமரி, 5ஏ.டி.எம். வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

     ரியல்மி வாட்ச் டி1

    இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 35 நிமிடங்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்துவிடும். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும். 

    ரியல்மி வாட்ச் டி1 வைப்ரண்ட் பிளாக் மற்றும் பிளாக் மிண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப், ஆலிவ் நிறத்தில் லெதர் போன்ற ஸ்டிராப் கொண்டிருக்கிறது. சீன சந்தையில் ரியல்மி வாட்ச் டி1 விலை 699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 8,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    ஆப்பிள் நிறுவனம் மேம்பட்ட மேக்புக் ப்ரோ மாடல்களை புதிய பிராசஸர்களுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் மேக்புக் ப்ரோ மாடல்களை 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மேஜிக் கீபோர்டு, ஹெட்போன் ஜாக், மேக்சேப் வசதி, ரெட்டினா டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேக்புக் ப்ரோ எம்1 மேக்ஸ் மற்றும் எம்1 ப்ரோ சிப்செட்களுடன் கிடைக்கின்றன. இவை மேக்புக் ப்ரோ மாடல்களில் இதுவரை இல்லாத வகையில் சிறப்பான செயல்திறன் வழங்குகின்றன. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடலில் 1080 பிக்சல் பேஸ்டைம் ஹெச்.டி. கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த வீடியோ, ஸ்மார்ட் ஹெச்.டி.ஆர். போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

     மேக்புக் ப்ரோ

    புதிய மேக்புக் ப்ரோ மாடலில் லிக்விட் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். டிஸ்ப்ளே, மினி எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேக் ஓ.எஸ். மான்டெரி மூலம் இயங்கும் புதிய மேக்புக் ப்ரோ அதிகபட்சம் 8 டிபி வரையிலான ஸ்டோரேஜ், அதிகபட்சம் 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மேக்புக் ப்ரோவில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 21 மணி நேர வீடியோ பிளேபேக் வழங்குகிறது.

    ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கும் புதிய மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடல் விலை 1999 டாலர்கள் என துவங்குகிறது. மேக்புக் ப்ரோ 16 இன்ச் மாடல் விலை 2499 டாலர்கள் என துவங்குகிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் மியூசிக் சார்ந்த அப்டேட்கள் அறிவிக்கப்பட்டன.


    ஆப்பிள் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் மியூசிக் சேவையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது அப்டேட்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி ஆப்பிள் மியூசிக் பிளேலிஸ்ட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இத்துடன் ஆப்பிள் வாய்ஸ் பெயரில் புதிய சந்தா முறை அறிவிக்கப்பட்டது. இதில் சிரியை கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை இயக்க முடியும். 

     ஹோம்பாட் மினி

    இத்துடன் ஹோம்பாட் மினி சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகின. அந்த வகையில் ஹோம்பாட் மினி கொண்டு ஆப்பிள் மியூசிக் சேவையை சிறப்பாக இயக்க முடியும். புதிய ஹோம்பாட் மினி விலை ரூ. 9,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.


    ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபோன்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை பின்னர் துவங்கும் என அறிவித்தது. அதன்படி நேற்று (அக்டோபர் 15) இதன் விற்பனை துவங்கியது.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 துவக்க விலை ரூ. 41,900 ஆகும். இந்த வாட்ச் ஐந்து விதமான அலுமினியம் கேஸ் பினிஷ் கொண்டிருக்கிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் மற்றும் ஸ்போர்ட் பேண்ட் கோல்டு, கிராபைட் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 69,900 ஆகும். 

     ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

    இதுதவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல் மற்றும் மிலனிஸ் லூப் விலை ரூ. 73,900 என்றும் டைட்டானியம் கேஸ் மற்றும் லெதர் கேஸ் விலை ரூ. 83,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆப்பிள் இந்தியா ஸ்டோரில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதன்படி கேஷ்பேக் தொகையை கழித்தால், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ரூ. 38,900 விலையில் கிடைக்கும்.
    ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. இந்த இயர்பட்சில் ஏ.என்.சி., 38 மணி நேர பேட்டரி பேக்கப், ப்ளூடூத் 5.2 மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இயர்பட்சில் அழைப்புகளை மேற்கொள்வது, ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்களை இயக்குவதற்கு மூன்று மைக்ரோபோன்கள் உள்ளது. ஏ.என்.சி. மட்டுமின்றி இந்த இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் 94 எம்.எஸ். லோ லேடென்சி மோட் கொண்டிருக்கிறது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 மாடல் 40 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 7 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 520 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது. இது 38 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். 

    சீன சந்தையில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 CNY499 (ரூ. 5840) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் டே வைட் மற்றும் நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது.


    ட்விட்டரில் பாளோவர்களை பிளாக் செய்யாமல் அவர்களை நீக்கும் புதிய அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வசதி ட்விட்டர் வெப் வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. கடந்த மாதம் இதே அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த அம்சம் வழங்கும் முன், பிளாக் செய்யப்பட்ட நபர் உங்களின் ப்ரோபைலை பார்க்க முற்பட்டால் நீங்கள் அவரை பிளாக் செய்துள்ளீர்கள் என ட்விட்டர் தெரிவிக்கும். ஆனால் புதிய அம்சம் கொண்டு பாளோவரை நீக்கினால், யார் உங்களின் ட்வீட்களை பார்க்கின்றனர் என்பதை நினைத்து பாதுகாப்பாக உணரலாம்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    புதிய அம்சத்தை ட்விட்டரில் குறிப்பிட்ட நபரின் ப்ரோபைலில் மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்து ரிமூவ் திஸ் பாளோவர் (remove this follower) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். புதிய அம்சம் கொண்டு ஒருவரை பிளாக் செய்யாமல், அவரிடம் இருந்து ட்விட்டரில் விலகி இருக்க முடியும். 
    ஹெச்.பி. நிறுவனத்தின் புதிய குரோம்புக் மாடலில் முதல்முறையாக ஏ.எம்.டி. பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.


    உலகளவில் குரோம் ஓ.எஸ். கொண்ட குரோம்புக் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ். மாடல்களைவிட இதன் விலை குறைவாக இருப்பதே இத்தகைய வரவேற்புக்கு காரணம் ஆகும்.

    பெரும்பாலான குரோம்புக் மாடல்கள் இன்டெல் பிராசஸர்களையே கொண்டிருக்கின்றன. ஹெச்.பி. நிறுவனம் தற்போது ஏ.எம்.டி. பிராசஸர் கொண்ட குரோம்புக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல் ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ என அழைக்கப்படுகிறது. 

     ஹெச்.பி. குரோம்புக்

    இந்த மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், ஒரு வருடத்திற்கான கூகுள் ஒன் சந்தா, 14 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஹெச்.பி. எக்ஸ்360 14ஏ மாடல் விலை ரூ. 32,999 ஆகும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 13 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகள் மாற்றப்படுகின்றன.


    ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடலுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோகம் சில வாரங்கள் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக வினியோகம் தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 வினியோக தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில விலை உயர்ந்த மாடல்கள் தற்போது கிடைக்கவில்லை “currently unavailable” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 899 டாலர்கள் விலை கொண்ட சாதனங்களுக்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்கள் பிளாக் டைட்டானியம் மற்றும் சிலிகான் பேண்ட் கொண்டிருக்கின்றன.

     ஐபோன் 13

    புதிய வாட்ச் மாடல்கள் மட்டுமின்றி ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. சில மாடல்களின் வினியோகம் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் உற்பத்தி குறைகளை ஆப்பிள் சரிசெய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் இயங்கவில்லை என அதன் பயனர்கள் ட்விட்டரில் தெரிவித்தனர்.


    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உலகம் முழுக்க இரு சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து சேவைகள் சரி செய்யப்பட்டன.

    சில நாட்களுக்கு முன் மெசன்ஜர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் சுமார் ஆறு மணி நேரம் முடங்கி போனது. அந்நிறுவன வரலாற்றில் முதல் முறையாக சேவைகள் பல மணி நேரம் முடங்கி போயின. இதன் காரணமாக அந்நிறுவனம் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது.

     இன்ஸ்டாகிராம்

    இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 8) நள்ளிரவு 11.50 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கியதாக தனியார் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை.  

    இரு சேவைகள் முடங்கியதை அடுத்து பயனர்கள் ட்விட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் எனும் ஹேஷ்டேக் மூலம் சேவைகள் முடங்கியதாக குற்றம்சாட்டினர். இதனால் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. 

    பின் பேஸ்புக், 'எங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,' என தெரிவித்தது.


    ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு இந்தியாவில் இன்று துவங்குகிறது.


    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 இந்திய முன்பதிவு இன்று (அக்டோபர் 8) மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. முன்பதிவு ஆப்பிள் இந்தியா வலைதளம் மற்றும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மாடல் ஐபோன் 13 சீரிசுடன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் 41 எம்எம் மற்றும் 45 எம்எம் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

    இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் 50-க்கும் அதிக நாடுகளிலும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 முன்பதிவு துவங்கி உள்ளது.

    இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விலை ரூ. 41,900 என துவங்குகிறது. முன்பதிவை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 விற்பனை அக்டோபர் 15 ஆம் தேதி துவங்குகிறது. 

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயனர்களுக்கு அசத்தலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்காமல் போனது. நெட்வொர்க் பிரச்சினை காரணமாக பயனர்கள் சிக்னல் குறைபாடு, இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர். ஜியோவின் நெட்வொர்க் பிரச்சினை மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பரவலாக ஏற்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும் நெட்வொர்க் பிரச்சினையை சில மணி நேரங்களில் தங்களின் குழு சரிசெய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில், ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    இரண்டு நாள் வரம்பற்ற சலுகை குறித்த விவரம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட இருக்கிறது. இந்த சலுகை நள்ளிரவில் செயல்படுத்தப்படும். பயனர்களின் தற்போதைய சலுகை நிறைவுற்றதும், இரண்டு நாட்களுக்கான வரம்பற்ற சலுகை வழங்கப்படும். இதன் காரணமாக 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை, பயனர்கள் 30 நாட்கள் பயன்படுத்தலாம்.

    ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் கோளாறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வருகின்றனர். கால் டிராப் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். 

    ஜியோவில் ஏற்பட்ட பிரச்சினை குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ளதா அல்லது நாடு முழுக்க ஏற்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ட்விட்டர் பதிவுகளின் படி, பயனர்கள் இன்று காலை முதல் நெட்வொர்க்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டை டேக் செய்து பலர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதிலும் இருந்து பலர் ஜியோ நெட்வொர்க்கில் கோளாறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். 

    பயனர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ஜியோ, "உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம். நீங்கள் இணைய சேவைகள், அழைப்புகளை மேற்கொள்வது, குறுந்தகவல்களை அனுப்புவது, பெறுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். இது தற்காலிகமான ஒன்று, எங்கள் குழு இந்த பிரச்சினையை விரைந்து சரிசெய்ய பணியாற்றி வருகிறது," என தெரிவித்து இருக்கிறது. இதே போன்று பலருக்கும் ஜியோ பதில் அளித்து வருகிறது.
    ×