என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பிட் ப்ரோ இயர்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் பீட்ஸ் பிட் ப்ரோ வயர்லெஸ் இயர்போனினை அறிமுகம் செய்தது. இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சேலேஷன், டிரான்ஸ்பேரன்சி ஆடியோ மோட்கள், அடாப்டிவ் இ.கியூ., ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதில் செக்யூர் பிட் விங்-டிப்கள் உள்ளன. இவை இயர்போன் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள வழி செய்கின்றன. பீட்ஸ் பிட் ப்ரோ ஆண்ட்ராய்டு சாதனங்களுடனும் இயங்கும். இத்துடன் ஒன்-டச் பேரிங், கஸ்டமைஸ் செய்யக்கூடிய கண்ட்ரோல், பேட்டரி லெவல், பர்ம்வேர் அப்டேட் வழங்கப்படுகிறது.

பீட்ஸ் பிட் ப்ரோ மாடல் பீட்ஸ் பிளாக், பீட்ஸ் வைட், ஸ்டோன் பர்பில் மற்றும் சேஜ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,975 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா டி20 டேப்லெட் மாடல் இந்திய விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா டி20 டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 10.36 இன்ச் 2கே எல்.சி.டி. டிஸ்ப்ளே, யுனிசாக் டி610 ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11, இரண்டு ஆண்டுகளுக்கான ஓ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது. இதில் 8 எம்பி ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

புதிய நோக்கியா டி20 நார்டிக் டிசைன், சேண்ட்பிளாஸ்டெட் அலுமினியம் பாடி மற்றும் ஐ.பி.52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 8200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
நோக்கியா டி20 ஓசன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி+32ஜிபி வைபை மாடல் விலை ரூ. 15,499 என்றும் 4ஜிபி+64ஜிபி எல்.டி.இ. வெர்ஷன் விலை ரூ. 16,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்து இருக்கிறது.
முன்னணி சமூக வலைதள சேவையான ட்விட்டர் தனது ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு புதிதாக லேப்ஸ் எனும் அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட்டர் உருவாக்கி வரும் புது அம்சங்களை பயனர்கள் முன்கூட்டியே சோதனை செய்து பார்க்க முடியும்.
யூடியூப் பிரீமியம் சேவையிலும் இதேபோன்று யூடியூப் லேப்ஸ் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ட்விட்டர் லேப்ஸ் அம்சத்தில் தற்போது பின்டு கன்வெர்சேஷன்ஸ் அம்சம் வழங்கப்படுகிறது. இது ஐ.ஒ.எஸ். செயலியில் கிடைக்கிறது.

இந்த அம்சம் பயனர்கள் குறுந்தகவல்களை பின் செய்து முன்னிலையில் வைத்துக் கொள்ள வழி செய்கிறது. இத்துடன் டெஸ்க்டாப் தளத்தில் இருந்து நீண்ட நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் இந்த அம்சம் உதவுகிறது.
ட்விட்டர் புளூ சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஐ.ஒ.எஸ். பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் அம்சம்ங்கள் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை.
நிகான் நிறுவனத்தின் இசட்9 மிரர்லெஸ் கேமரா இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
நிகான் இசட்9 புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளாக்ஷிப் கேமரா மாடல் ஆகும். இதில் 45.7 எம்.பி. சி-மாஸ் சென்சார், 3.2 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட மாணிட்டர், எலெக்டிரானிக் வியூ-பைண்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
நிகான் இசட்9 மாடல் இன்டர்-சேன்ஜ் செய்யக்கூடிய லென்ஸ்களுடன் கிடைக்கிறது. இந்த கேமரா 8K 30 பிக்சல் வீடியோ கேப்ச்சர் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு தொடர்ச்சியாக 125 நிமிடங்களுக்கு வீடியோ பதிவு செய்ய முடியும். புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யும் போது நிகான் இசட்9 மொத்தத்தில் ஒன்பது விதமான பொருள்களை அடையாளம் கானும் என நிகான் தெரிவித்துள்ளது.

மெக்கானிக்கல் ஷட்டர் இன்றி நிகான் வெளியிட்டு இருக்கும் முதல் புல்-பிரேம் மிரர்லெஸ் கேமரா இது ஆகும். இந்திய சந்தையில் புதிய நிகான் இசட்9 விலை ரூ. 4,75,995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் இந்த கேமரா நிகான் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும்.
போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 1.69 இன்ச் 240x280 பிக்சல் சதுரங்க வடிவம் கொண்ட எல்.சி.டி. 2.5டி வளைந்த ஸ்கிரீன், 100-க்கும் அதிக கிளவுட் வாட்ச் பேஸ்கள் உள்ளன.
மற்ற வாட்ச் மாடல்களை போன்றே புதிய போட் வெர்டெக்ஸ் மாடலிலும் மியூசிக் மற்றும் கேமரா கண்ட்ரோல்கள், ஐ.பி.67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங், 7 ஆக்டிவ் ஸ்போர்ட் மோட்களுக்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

போட் வெர்டெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்-இல் உள்ள பேட்டரி ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. போட் வெர்டெக்ஸ் டீப் புளூ, ஆக்டிவ் பிளாக், ரேஜிங் ரெட் மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2499 அறிமுக விலையில் ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 70 லட்சத்திற்கும் அதிக ரெட்மி மற்றும் சியோமி பிராண்டு ஸ்மார்ட் டிவிக்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. 2018 முதல் சியோமி இந்திய சந்தையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
உயர் ரக ஸ்மார்ட் டிவி-க்கள் பிரிவில் அதிக டிவிக்களை விற்பனை செய்யும் ஸ்மார்ட் டிவி பிராண்டாக சியோமி இருக்கிறது. 2018 முதல் 2021 வரை ஸ்மார்ட் டிவி விபாபாரம் இருமடங்கு அதிகரித்து இருக்கிறது. 'இந்தியாவில் ஸ்மார்ட் டிவி பயன்பாடு அதிகரிக்க நாங்கள் காரணமாக இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறோம்,' என சியோமி தெரிவித்து இருக்கிறது.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 50 இன்ச், எம்.ஐ. டிவி 4ஏ 32 இன்ச், எம்.ஐ. டிவி 5எக்ஸ் 43 இன்ச் உள்ளிட்ட மாடல்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரீபட்ஸ் 4ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதில் ஏ.என்.சி. எனப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 10 மணி நேரத்திற்கான ஸ்டான்ட்-அலோன் பேட்டரி லைப், புதிய வட்ட வடிவ கேஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஹெட்செட் 3டி எர்கோனோமிக் டிசைன், குறைந்த எடை உள்ளிட்டவை காதுகளில் அணிந்திருக்கும் போது சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது.

ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ அம்சங்கள்
- ப்ளூடூத் 5.2
- 10 எம்எம் டைனமிக் டிரைவர்
- ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரண்ட் மோட்
- டூயல் மைக்ரோபோன் ஏ.ஐ. கால் நாய்ஸ் ரிடக்ஷன்
- டபுள் டேப் கண்ட்ரோல்
- லோ-லேடன்சி மோட்
- 55 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- சார்ஜிங் கேசில் 215 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- யு.எஸ்.பி. டைப் சி
ஹூவாய் பிரீபட்ஸ் 4ஐ செராமிக் வைட், கார்பன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் பிராஸ்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7,990 ஆகும். இது அமேசான் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. ஹூவாய் தீபாவளி சலுகையின் கீழ் இந்த இயர்பட்ஸ் ரூ. 1000 உடனடி தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை நவம்பர் 5 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டென்சர் சிப்செட் பென்ச்மார்க் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை டென்சர் சிப்செட் உடன் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. புதிய டென்சர் சிப் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இதன் பென்ச்மார்க் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரெடிட் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், டென்சர் சிப் ஜிபியு பென்ச்மார்க் புள்ளிகள் இடம்பெற்று இருக்கின்றன. பிக்சல் 6 மாடல் வைல்டு லைப் டெஸ்டில் 6666 புள்ளிகளை நொடிக்கு 39 பிரேம் வேகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறது. வைல்டு லைப் எக்ஸ்டிரீம் டெஸ்டில் நொடிக்கு 12.8 பிரேம் வேகத்தில் 2028 புள்ளிகளை வெளிப்படுத்தி இருக்கிறது.
டென்சர் சிப் கொண்ட பிக்சல் 6 2129 லூப் ஸ்கோர், 56 சதவீத ஸ்டேபிலிட்டியில் 1193 லூப் ஸ்கோர் பெற்று இருக்கிறது. இது மற்ற பிளாக்ஷிப் பிராசஸர்களான ஸ்னாப்டிராகன் 888, எக்சைனோஸ் 2100, ஹூவாய் கிரின் 9000 உடன் ஒப்பிடும் போது அதிகம் ஆகும். பென்ச்மார்க் பரிசோதனையின்படி பிக்சல் 6 டென்சர் சிப் சிறந்த ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் சிப்செட்களில் ஒன்றாக இருக்கிறது.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
நாய்ஸ் சென்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஸ்டைல் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இன் இயர் ப்ளூடூத் இயர்போன் 10 எம்.எம். டிரைவர்களை கொண்டிருக்கின்றன. நாய்ஸ் சென்ஸ் இயர்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வைப்ரேஷன் அலெர்ட் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் ஐ.பி.எக்ஸ்-5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு எட்டு நிமிடங்கள் சார்ஜ் செய்தால் எட்டு மணி நேர பேக்கப் வழங்குகிறது. ப்ளூடூத் வி5 கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் நாய்ஸ் சென்ஸ் யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் கொண்டிருக்கிறது.

நாய்ஸ் சென்ஸ் இயர்போன்கள் ரூ. 1,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மையான விலை ரூ.2,499 ஆகும். இந்த இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இது அமேசான் மற்றும் நாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் நிறுவனம் தனது பிரைம் சந்தா கட்டணத்தை இந்தியாவில் மாற்ற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
அமேசான் பிரைம் சந்தா கட்டணம் இந்தியாவில் மாற்றப்பட இருக்கிறது. அமேசான் பிரைம் சந்தாவில் ஒரு நாள், இரண்டு நா்ட்கள் மற்றும் நோ-ரஷ் டெலிவரி, பிரைம் வீடியோ, பிரைம் மியூசிக் மற்றும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
சந்தா கட்டணம் தற்போது இருப்பதை விட 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது. விலை உயர்வு எப்போது அமலுக்கு வரும் என இதுவரை எந்த தகவலும் இல்லை. அமேசான் வலைதளத்தில் பிரைம் சந்தா கட்டணம் மாற்றப்பட இருக்கிறது, விரைவில் தேதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி அமேசான் பிரைம் சந்தா கட்டணம் ரூ. 179 என துவங்கலாம். இதன் காலாண்டு மற்றும் வருடாந்திர சந்தா கட்டணங்கள் முறையே ரூ. 459 மற்றும் ரூ. 1499 என மாற்றப்படலாம். தற்போது இவற்றின் கட்டணம் முறையே ரூ. 329 மற்றும் ரூ. 999 என வசூலிக்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் ரெட்மி வாட்ச் 2 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
ரெட்மி வாட்ச் 2 மாடல் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகமாகிறது. ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்களுடன் புதிய ரெட்மி வாட்ச் மாடலும் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் டீசரையும் சியோமி வெளியிட்டு உள்ளது.
டீசரின் படி ரெட்மி வாட்ச் 2 அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முந்தைய ரெட்மி வாட்ச் 1.4 இன்ச் எல்.சி.டி. பேனல் கொண்டிருந்தது. ரெட்மி வாட்ச் 2 எலிகண்ட் பிளாக், ஸ்பேஸ் புளூ மற்றும் ஐவரி என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி வாட்ச் 2 பிட்னஸ் சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 சென்சார், ஜி.பி.எஸ்., பல்வேறு ஸ்போர்ட் மோட்கள், ஸ்லீப் மாணிட்டரிங், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
அமேஸ்பிட் நிறுவனம் ஜிடிஆர் 3, ஜிடிஆர் 3 ப்ரோ மற்றும் ஜிடிஎஸ் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தது.
அமேஸ்பிட் நிறுவனம் ஜிடிஆர் 3, ஜிடிஆர் 3 ப்ரோ மற்றும் ஜிடிஎஸ் 3 ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் அமோலெட் டிஸ்ப்ளே, கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் பேஸ்கள், 150-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்கள், கிளாசிக் நேவிகேஷன் கிரவுன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜிடிஎஸ் 3 மாடலில் சூப்பர் ஸ்லீக் 8.8 எம்எம் வாட்ச் பாடி உள்ளது. மேலும் இதய துடிப்பு சென்சார், அலெக்சா மற்றும் ஆப்லைன் வாய்ஸ் அசிஸ்டண்ட், ஜிடிஆர் 3 ப்ரோ மாடலில் ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி, உடல் வெப்பநிலையை கண்டறியும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

அமேஸ்பிட் ஜிடிஆர் 3 தண்டர் பிளாக் மற்றும் மூன்லைட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. ஜிடிஎஸ் 3 மாடல் கிராபைட் பிளாக், ஐவரி வைட் மற்றும் டெரா ரோஸா நிறங்களில் கிடைக்கிறது. அமேஸ்பிட் ஜிடிஆர் 3 ப்ரோ பிரவுன் லெதர் மற்றும் இன்பனைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.






