என் மலர்
கணினி
டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஏற்கனவே பயனாளரின் தொலைபேசி எண், முகவரி தனிப்பட்ட தகவல்களை வெளியிட தடை செய்துள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் ஒப்புதல் இன்றி பகிர தடை செய்து புது விதிமுறையை டுவிட்டர் அறிவித்துள்ளது.

புது விதிகளின்படி பயனர்கள் தங்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டுவிட்டரில் இருந்து அகற்றப்படும்.
வாட்ஸ்அப் சேவையில் பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பேமண்ட் சேவைக்கு இந்திய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப் இடம்பெற்றுள்ளது.
என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின் படி வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற சேவைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் யு.பி.ஐ. உருவாக்கிக் கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை பகிர்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது.
பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.
பை நவ் பே லேட்டர் (இப்போது வாங்குங்கள், பணத்தை பின்னர் செலுத்துங்கள்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.
நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசான் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை நவம்பர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் ஒற்றை பட்டன், சிலிகான் ஸ்டிராப் உள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 30 கிராம் எடை கொண்டிருக்கிறது. மெட்டல் பினிஷ் கொண்டிருக்கும் நாய்ஸ் எக்ஸ் பிட் 1 மாடலில் எஸ்.பி.ஓ.2 மாணிட்டர் உள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.

புதிய நாய்ஸ் எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,999 ஆகும். எனினும், சிறப்பு சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. நாய்ஸ் எக்ஸ் பிட்1 சில்வர் மற்றும் பிளாக் மெட்டல் பிரேம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வைட் மற்றும் பிளாக் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 விரைவில் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ரியல்மி வாட்ச் 2 மாடலை அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் கோல்டு நிறத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி வாட்ச் 2 கோல்டு நிற வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என சந்தை வல்லுநரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்வாட்ச் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு இறுதியில் இந்த வாட்ச் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்
- 1.4 இன்ச் 320x320 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன்
- 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
- ப்ளூடூத் 5.0
- 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ2 சென்சார்
- நோட்டிபிகேஷன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (ஐ.பி.68)
- 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி
மீடியாடெக் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சிப்செட் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
மீடியாடெக் நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் பிராசஸரை அறிமுகம் செய்தது. டிமென்சிட்டி 9000 என அழைக்கப்படும் புது சிப்செட் டி.எஸ்.எம்.சி.-யின் 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பிராசஸர் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
மேலும் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ்- எக்ஸ்2, ஏ710 மற்றும் ஏ510 சி.பி.யு.-க்களை பயன்படுத்தி இருக்கும் முதல் பிராசஸரும் இது தான். இந்த பிராசஸருடன் மாலி ஜி710 ஜி.பி.யு. வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எல்.பி. டி.டி.ஆர்.5எக்ஸ் ரேம் கொண்ட உலகின் முதல் பிராசஸரும் இது தான். இது அதிகபட்சம் 7500 எம்.பி.பி.எஸ். வேகம் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி கொண்டிருக்கிறது.

இந்த சிப்செட்டில் 1 எக்ஸ் ஏ.ஆர்.எம். கார்டெக்ஸ் எக்ஸ்2 சி.பி.யு., 3 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ 710 சிபியு மற்றும் 4 எக்ஸ் கார்டெக்ஸ் ஏ510 சி.பி.யு. உள்ளது. இது தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு பிளாக்ஷிப் பிராசஸர்களைவிட 35 சதவீதம் சக்திவாய்ந்தது ஆகும். மேலும் இது 37 சதவீதம் சிறப்பான பேட்டரி திறன் வழங்குகிறது.
இந்த பிராசஸர் 320 எம்.பி. பிரைமரி கேமராவுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2022 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. செப்டம்பர் மாத வாக்கில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கிய முதல் 15 நாட்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய 40 நாட்களில் டிசோ வாட்ச் 2 மொத்தத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை வாட்ச் 2 பெற்று இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை டிசோ வாட்ச் 2 மாடலில் 1.69 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. டச் ஸ்கிரீன், 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் கோ 3 லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்பேஸ் கோ 3 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்ஸ்டாண்டு, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், சர்பேஸ் பென் வசதி, விண்டோஸ் 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
544 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய சர்பேஸ் கோ 3 8.3 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக்ஸ் 615, 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி., வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய சர்பேஸ் கோ 3 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்குகிறது. இன்டெல் கோர் ஐ3, 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட மாடலின் விலை ரூ. 62,999 ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டில் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுடன் அறிமுகமாகும் என கூறப்பட்டது. பின் இதன் வெளியீடு 2021 நான்காவது காலாண்டில் துவங்கும் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டை ரத்து செய்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிஸ்ப்ளே வினியோக பிரிவை சேர்ந்த ராஸ் யங், பிக்சல் போல்டு மாடலின் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களின் முன்பதிவை கூகுள் ரத்து செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வரை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் வாய்ப்புகள் குறைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கென பிரத்யேக ஆண்ட்ராய்டு 12எல் ஓ.எஸ். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமாக இருக்கிறது. இதன் காரணமாக பிக்சல் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் இதே காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. இதை உணர்த்தும் குறியீடுகளும் கூகுள் கேமரா செயலியில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய லேப்டாப் அறிமுக விவரங்கள் வெளியாகி உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோபுக் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் மீண்டும் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்ட லேப்டாப் பிரிவில் ஜியோ களமிறங்குகிறது. முந்தைய ஜியோபோன் நெக்ஸ்ட் போன்றே ஜியோபுக் மாடலும் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஜியோபுக் மாடல் எண்ட்ரி-லெவல் அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த லேப்டாப் அம்சங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. அதன்படி புதிய ஜியோபுக் என்.பி.112எம்.எம். எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருகிறது. இந்த லேப்டாப் மீடியாடெக் எம்.டி.8788 பிராசஸர் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த லேப்டாப் புல் ஹெச்.டி. ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு சார்ந்த ஜியோ ஓ.எஸ்., டூயல் பேண்ட் வைபை, 4ஜி எல்.டி.இ. போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஜியோபுக் அம்சங்கள் சார்பில் இதுவரை அந்நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபேட் மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 8.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புது ஐபேட் மினி மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. வெளியீட்டை தொடர்ந்து ஐபேட் மினி மாடலில் ஜெல்லி ஸ்கிராலிங் எனும் பிரச்சினை ஏற்பட்டது.
எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் இதுபோன்ற பிரச்சினை சாதாரண ஒன்று தான் என ஆப்பிள் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஜெல்லி ஸ்கிராலிங் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆப்பிள் ஐபேட் மினி 6 மாடலின் புது வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய ஐபேட் மினி 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே டிஸ்ப்ளேவினை ஆப்பிள் 2017 முதல் வெளியாகி வரும் ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கி வருகிறது. சமீபத்திய ஐபோன் 13 ப்ரோ மாடலிலும் இதே டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளிக்காக பிரத்யேக அனிமேஷன் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் செயலியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரத்யேக அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதை கொண்டு பயனர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கொண்டாட்ட முறைகள் முற்றிலும் மாறி போயுள்ளன. இந்த காலக்கட்டத்தில் விர்ச்சுவல் முறையில் அனைவருடன் இணைந்து இருப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்திருக்க வாட்ஸ்அப் மட்டுமே சிறந்த தளமாக இருக்கிறது.

இவற்றை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகைக்காக வாட்ஸ்அப் அனிமேடெட் ஸ்டிக்கர்களை வெளியிட்டு உள்ளது. ஸ்டிக்கர்களை மற்றவர்களுக்கு அனுப்பி பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.






