search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பேடிஎம்
    X
    பேடிஎம்

    பேடிஎம் நிறுவன வருவாய் இத்தனை கோடிகளா?

    இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.


    டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது.

    பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

    பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

     பேடிஎம்

    பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.
     இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.

    பை நவ் பே லேட்டர் (இப்போது வாங்குங்கள், பணத்தை பின்னர் செலுத்துங்கள்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.

    Next Story
    ×