search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    இருமடங்கு அதிகம் - வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் சேவைக்கு புது அனுமதி

    வாட்ஸ்அப் சேவையில் பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


    வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. யு.பி.ஐ. சார்ந்து இயங்கும் பேமண்ட் சேவைக்கு இந்திய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்.பி.சி.ஐ.) அனுமதி அளித்து இருக்கிறது. என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலில் தற்போது வாட்ஸ்அப் இடம்பெற்றுள்ளது. 

    என்.பி.சி.ஐ. வலைதள விவரங்களின் படி வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவைகளை தனது பேமண்ட் சேவை வழங்குனராக பயன்படுத்த இருக்கிறது. பேமண்ட்ஸ் அம்சம் மூலம் வாட்ஸ்அப், கூகுள் பே மற்றும் போன் பே போன்ற சேவைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

     வாட்ஸ்அப் பேமண்ட்ஸ்

    வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் யு.பி.ஐ. உருவாக்கிக் கொள்ளலாம். பின் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை பகிர்வதை போன்றே மிக எளிமையாக பணம் அனுப்பலாம். தற்போது யு.பி.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்.பி.சி.ஐ. வலைதளத்தில் மொத்தம் 21 மூன்றாம் தரப்பு செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    Next Story
    ×