என் மலர்tooltip icon

    கணினி

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 119 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 119 சலுகை பலன்களை சத்தமின்றி மாற்றியமைத்து இருக்கிறது. இந்த சலுகையில் தற்போது தினமும் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இத்துடன் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. 

    முன்னதாக 28 நாட்களுக்கு 300 எஸ்.எம்.எஸ். வழங்கி வந்த ரூ. 98 சலுகை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டு இந்த ஆண்டு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இத்துடன் வேலிடிட்டியும் 14 நாட்கள் என மாற்றப்பட்டு, 300 எஸ்.எம்.எஸ். பலன் மட்டும் நீக்கப்பட்டது.

     கோப்புப்படம்

    ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி அந்நிறுவனம் ஏற்கனவே வழங்கிவந்த ரூ. 98 சலுகை விலை தான் ஜியோ ரூ. 119 என மாற்றப்பட்டது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. ரூ. 119 சலுகையில் ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது.

    பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிரதமரின் அக்கவுண்டில் 'இந்தியாவில் பிட்காயின் சட்டப்பூர்வ பரிவர்த்தனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது,' எனும் டுவிட் இடம்பெற்று இருந்தது.

    டுவிட் வெளியான சில நிமிடங்களில் அக்கவுண்ட் மீட்கப்பட்டது என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 'பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் அக்கவுண்ட் சிறிது நேரத்திற்கு ஹேக் செய்யப்பட்டது. இதுபற்றி டுவிட்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அக்கவுண்ட் உடனடியாக மீட்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் பதிவான டுவிட்களை தவிர்க்கவும்,' என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

     டுவிட்டர்

    முன்னதாக செப்டம்பர் 2020 வாக்கில் பிரதமரின் தனிப்பட்ட வலைதளம் ஹேக் செய்யப்பட்டு, அப்போதும் பிட்காயின்களை விளம்பரப்படுத்தும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் டேப்லெட் மாடலான கேலக்ஸி டேப் எஸ்8 பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடலில் 14.6 இன்ச் டிஸ்ப்ளே, 8 எம்.பி. + 5 எம்.பி. கேமரா என இரட்டை முன்புற லென்ஸ்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் டேப்லெட்

    இத்துடன் 12,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. புதிய டேப்லெட் மாடலை சாம்சங், கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலுடன் ஜனவரியில் அறிமுகம் செய்யுமா அல்லது கேலக்ஸி எஸ்22 சீரிசுடன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    புதிய கேலக்ஸி டேப் எஸ்8 விலை 1,178 டாலர்கள் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1249 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம். முந்தைய கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் விலை 975 டாலர்கள் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1153 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம்.
     

    விண்டோஸ் ஓ.எஸ். தளங்களில் ஆண்ட்ராய்டு கேம்களை அடுத்த ஆண்டு கொண்டுவர கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்கென கூகுள் பிரத்யேக கூகுள் பிளே கேம்ஸ் செயலியை உருவாக்கி வருகிறது. இந்த செயலி விண்டோஸ் தளத்திற்கென உருவாகி இருக்கிறது. இது கூகுள் பிளேவில் உள்ள கேம்களை விண்டோஸ் லேப்டாப், டேப்லெட் மற்றும் கணினிகளில் விளையாட வழி செய்யும்.

    இந்த அம்சம் வழங்கப்பட்டால் போன், டேப்லெட், குரோம்புக் மற்றும் விண்டோஸ் கணினிகளிடையே சீம்லெஸ் ஸ்விட்ச் செய்ய முடியும் என கேம்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே இயக்குனர் கிரெக் ஹார்டிரெல் தெரிவித்தார். ஒரு சாதனத்தில் விளையாடிய கேமினை, விட்ட இடத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் விளையாட முடியும்.

     கூகுள் பிளே கேம்ஸ்

    கூகுள் பிளே கேம்ஸ் செயலியை கூகுள் வழங்குகிறது. இது விண்டோஸ் 10 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தற்போது இந்த செயலிக்கான டீசரை மட்டும் கூகுள் வெளியிட்டு இருக்கிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் ஜூக் பார் 3820ஏ ப்ரோ சவுண்ட்பார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அலெக்சா வசதி கொண்ட புதிய ஜெப் ஜூக் பார் 3820ஏ ப்ரோ சவுண்ட்பார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் டூயல் டிரைவர்கள், டூயல் 69 எம்.எம். சப்-வூஃபர்கள், 80 வாட் ஆர்.எம்.எஸ். அவுட்புட் உள்ளது. 

    பில்ட்-இன் வைபை கனெக்டிவிட்டி கொண்டிருப்பதால் ஆடியோ ஸ்டிரீமிங் செய்யும் வசதி உள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் 5, ஜெப் ஸ்மார்ட் ஜூக்பார் ஆப் மூலம் கண்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இத்துடன் ஹெச்.டி.எம்.ஐ. ஏ.ஆர்.சி. மற்றும் ஆப்டிக்கல் போர்ட், ஆக்ஸ் போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஜெப் ஜூக் சவுண்ட்பார்

    புதிய ஜெக் ஜூக் பார் 3820ஏ ப்ரோ பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,999 ஆகும். எனினும் அறிமுக சலுகையாக இந்த சவுண்ட்பார் ரூ. 8,999 விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ, புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் புதிய ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட சாதனங்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    தற்போது ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்து இருக்கிறார். இவை வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் எஸ்.இ. மற்றும் ரக்கட் அல்லது ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் என அழைக்கப்படலாம். ஆப்பிள் வாட்ச் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலையும் ஆப்பிள் வெளியிட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

     ஏர்பாட்ஸ்

    முந்தைய தகவல்களில் ஆப்பிள் ஏ.ஆர்./வி.ஆர். ஹெட்செட் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என மிங் சி கியோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அணியக்கூடிய சாதனங்கள் மட்டுமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. 2023 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என அவர் தெரிவித்து இருந்தார்.
    இன்ஸ்டாகிராம் செயலியல் பயனர் நலன் கருதி புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்ச்சியாக அதிக நேரம் செயலியில் செலவிடுவோரை, சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும். 

    முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இந்த அம்சம் வரும் மாதங்களில் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.

     இன்ஸ்டா ஸ்கிரீன்ஷாட்

    இந்த அம்சத்தை செட்டிங்ஸ் பேனலில் செயல்படுத்த முடியும். இந்த அம்சத்தில் பத்து நிமிடங்கள், 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை தானாக அழிந்துபோக செய்யும் அம்சத்தில் அசத்தலான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்த செயலியில் தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி புகைப்படம், வீடியோக்கள் என பலத்தரப்பட்ட தகவல்கள் அன்றாடம் பகிரப்பட்டு வருகின்றன.

    பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் பணியை வாட்ஸ்அப் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு பின் அழிந்துவிடும்படி தேர்வு செய்ய முடியும். 

     வாட்ஸ்அப்

    இதற்கான காலக்கெடு 24 மணி நேரம் அல்லது 7 நாட்கள், 90 நாட்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் விரும்பும் காலக்கெடுவை தேர்வு செய்ய முடியும். முன்னதாக பயனர்கள் அனுப்பும் தகவல்கள் 7 நாட்களுக்கு பின் அழிந்து போகும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.

    இனி அப்படி இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் தகவல்கள் அழிந்துவிடும்படி காலக்கெடுவை தேர்வு செய்து கொள்ளலாம். முன்பு தகவல்கள் அழியும் காலக்கெடு 7 நாட்களாக இருந்தது.
    சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் நிறைவடைந்து இருக்கிறது.


    சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 இன்று விற்பனைக்கு வந்தது. விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்ததாக சோனி அறிவித்து இருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் ரி-ஸ்டாக் விற்பனைக்கு வந்தது. 

    முன்பை போன்றே இன்றும் பி.எஸ்.5 விற்பனை அமேசான், சோனி மற்றும் பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் நடைபெற்றது. பல வலைதளங்கள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் செயலற்று போனது. இந்தியாவுக்கு மேலும் சில புதிய பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் யூனிட்களை விற்பனைக்கு கொண்டுவர சோனி முயற்சித்து வருகிறது.

     சோனி பி.எஸ்.5

    இந்தியாவில் அடுத்த விற்பனை எப்போது நடைபெறும் என சோனி இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இதற்கான முன்பதிவுகளும் இதுவரை துவங்கப்படவில்லை. டிசம்பர் மாத்திற்கான பி.எஸ்.5 இந்தியா முன்பதிவுகள் டிசம்பர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 
    ஏர்டெல் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் திடீரென நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
     

    ஏர்டெல் நிறுவனம் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியதோடு, அன்லிமிடெட் சலுகைகளிலும் சமீபத்தில் மாற்றம் செய்தது. தற்போது ரூ. 398, ரூ. 499 மற்றும் ரூ. 558 பிரீபெயிட் சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருக்கிறது. நீக்கப்பட்டுள்ள மூன்று சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    மூன்று பிரீபெயிட் சலுகைகளுக்கு மாற்றாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 599 மற்றும் ரூ. 699 விலைகளில் இரண்டு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இரு சலுகைகளிலும் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இரு சலுகைகள் பற்றிய அறிவிப்பு ஏர்டெல் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. எனினும், இந்த மாற்றம் ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

     கோப்புப்படம்

    பலன்களை பொருத்தவரை ஏர்டெல் ரூ. 599 சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் அழைப்புகள் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துடன் 28 நாட்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. 

    ஏர்டெல் ரூ. 699 சலுகையில் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷனுக்கான இலவச டிரையல் வழங்கப்படுகிறது. இத்துடன் முந்தைய சலுகையில் வழங்கப்படுவதை போன்று 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கி வருவதாக 2018 முதல் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின் 2019 வாக்கில் கூகுள் நிறுவனத்தில் அணியக்கூடிய சாதனங்கள் பிரிவுக்கான ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ரோகன் எனும் பெயரில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வியர் ஓ.எஸ். புது வெர்ஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஸ்மார்ட்வாட்ச்

    புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் பிட்பிட் ஒருங்கிணைப்பு மூலம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கூகுள் உற்பத்தி செய்யும் வாட்ச் பேண்ட்கள் வழங்கப்படலாம். கூகுள் ஸ்மார்ட்வாட்ச் விலை பிட்பிட் மாடல்களை விட அதிகமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    இந்தியாவை சேர்ந்த போட் நிறுவனம் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்போன் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த இயர்போன் முழு சார்ஜ் செய்தால் 60 மணி நேர பிளேபேக் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இத்தனை அளவு பேக்கப் வழங்கும் போட் நிறுவனத்தின் முதல் இயர்போன் இது ஆகும். இதன் தோற்றம் போட் ஏற்கனவே அறிமுகம் செய்த ராக்கர்ஸ் 333 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இந்த இயர்போனில் உள்ள ஏ.எஸ்.ஏ.பி. பாஸ்ட் சார்ஜிங் வசதி பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 20 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது.

     போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ

    மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி, இன்-லைன் பிளேபேக் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. புதிய போட் ராக்கர்ஸ் 330 ப்ரோ பிளாக், புளூ, ரெட் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×