என் மலர்tooltip icon

    கணினி

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே சில அம்சங்கள் பற்றிய விவரங்கள் முந்தைய பீட்டா வெர்ஷன்களில் வெளியாகி உள்ளன. அந்த வரிசையில், பயனர்கள் தங்களின் அருகாமையில் உள்ள வியாபாரிகளை தேடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த அம்சம் கொண்டு பயனர் அருகில் உள்ள மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் இதர கடை பற்றிய விவரங்களை தேடி அறிந்து கொள்ளலாம். இதற்கென புது இண்டர்பேஸ் உருவாக்கப்படுகிறது. புது அம்சம் பிசினசஸ் நியர்பை (Businesses Nearby) என அழைக்கப்படுகிறது. இதனை கிளிக் செய்ததும், எந்த பிரிவில் தேடல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    பயனர் தேர்வு செய்யும் பிரிவுக்கு ஏற்றவகையில் பதில்கள் பட்டியலிடப்படுகின்றன. சோதனை அடிப்படையில் இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதே அம்சத்தை ஐ.ஒ.எஸ். தளத்தில் வழங்குவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலை அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த டேப்லெட் மாடலுக்கென பிரத்யேக வலைப்பக்கம் அமேசான் இந்தியா வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி டேப் ஏ8 சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி டேப் ஏ7 மாடலின் மேம்பட்ட மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 10.5 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. பேனல், யுனிசாக் டி618 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

    இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா, டால்பி அட்மோஸ் ஆடியோ, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இதில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
    ரஷ்யாவில் சட்டவிரோத தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்துவந்ததால் மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் சட்டவிரோதம் என கருதப்படும் தகவல்களை நீக்க தொடர்ந்து தாமதம் செய்து வந்ததால், மாஸ்கோ நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு 7.2 பில்லியன் ரூபிள் இந்திய மதிப்பில் ரூ. 735 கோடி அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் ரொக்கம் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள முதல் அபராதம் இது ஆகும்.

    நடவடிக்கை எடுக்கும் முன் நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்ய இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதல் பலமுறை ரஷ்யா வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. எனினும், நிறுவனம் ஒன்றின் வருடாந்திர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை அபராதமாக விதித்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

     கூகுள்

    ரஷ்ய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு எத்தனை சதவீதம் அபராதம் விதித்துள்ளது என்பதை அறிவிக்கவில்லை. எனினும், அபராத தொகையை கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் படி கூகுள் நிறுவனத்திற்கு 8 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    போதை பொருள் துஷ்பிரயோகத்தை விளம்பரப்படுத்தும் தகவல்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவுகளை நீக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
    ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரியல்மி நிறுவனம் டிசோ பிராண்டை ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இது ரியல்மியின் முதல் துணை பிராண்டு ஆகும். டிசோ பிராண்டிங்கில் ஏற்கனவே பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

    வயர்லெஸ் இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச், ஹேர்-டிரையர், பியர்டு ட்ரிம்மர்களை டிசோ விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டிசோ பிராண்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசோ வாட்ச் ஆர் என அழைக்கப்பட இருக்கிறது.

     டிசோ வாட்ச் 2

    புதிய டிசோ வாட்ச் ஆர் மாடல் வட்ட வடிவ டயல், ரோஸ் கோல்டு அல்லது மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வாட்ச் ஆர் மாடல் டிசோ பிராண்டின் ஐ.ஒ.டி. (இண்டர்நெட் ஆப் திங்ஸ்) பிரிவு சாதனங்களின் கீழ் அறிமுகமாகிறது.

    டிசோ வாட்ச் ஆர் மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் டிசோ வாட்ச் 2 மற்றும் டிசோ வாட்ச் 2 ப்ரோ போன்ற மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகமாகலாம்.

    எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் சார்ந்து மேற்கொண்ட ஆய்வு விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    எல்.ஜி. நிறுவனம் 2021 கொரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பொருட்காட்சியில் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்வு டிசம்பர் 22 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 24 வரை நடைபெறுகிறது. இதில் எல்.ஜி. நிறுவனம் 6ஜி வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிசப்ஷன் பிரிவில் மேற்கொண்ட ஆய்வு பற்றிய விவரங்களை வெளியிட்டது.

    இந்த நிகழ்வில் எல்.ஜி. நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோஃபர் ஆய்வு மையத்துடன் இணைந்து உருவாக்கிய 6ஜி-க்கான பவர் ஆம்ப்லிஃபையரை வெளியிடுகிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த பவர் ஆம்ப்லிஃபையர் கொண்டு எல்.ஜி. நிறுவனம் 6ஜி டெராஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் வயர்லெஸ் டேட்டாவை வெற்றிகரமாக டிரான்ஸ்மிட் செய்துகாட்டியது.

     எல்.ஜி.

    டெராஹெர்ட்ஸ் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் / ரிசப்ஷன் தொழில்நுட்பம் 100 ஜிகாஹெர்ட்ஸ் துவங்கி 10 டெராஹெர்ட்ஸ் வரையிலான பிரீக்வன்சி பேண்ட்களை பயன்படுத்துகிறது. இவை நொடிக்கு 1 டெராபிட் வேகத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.

    இத்துடன் ஃபுல் டுப்லெக்ஸ் தொழில்நுட்பத்தை எல்.ஜி. அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒரே பிரீக்வன்சி பேண்ட் பயன்படுத்தி தகவல்களை அனுப்பவும், பெறவும் செய்கிறது. 2029 வாக்கில் 6ஜி தொழில்நுட்பம் வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. இதற்கென 2019 ஆம் ஆண்டு எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. கே.ஏ.ஐ.எஸ்.டி. 6ஜி ஆய்வு மையத்தை அமைத்தது.
    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏர்பேஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ் பெயரில் புது இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.


    போல்ட் ஆடியோ நிறுவனம் ஏர்பேஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ் பெயரில் புது ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் ப்ளூடூத் 5.1, ஹை-பிடெலிட்டி டிரைவர்கள், ஐ.பி.எக்ஸ்.5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இந்த இயர்பட்களில் டச் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதனால் வால்யூம், பாடல்களை மாற்றுவது, அழைப்புகளை இயக்குவது போன்ற அம்சங்களை எளிதில் இயக்க முடியும். டைப் சி பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ப்ரோபாட்ஸ் எக்ஸ் மாடலை முழு சார்ஜ் செய்தால் 32 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் கொண்டு இயர்பட்களை நான்கு முறை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

     போல்ட் ஏர்பாஸ் ப்ரோபாட்ஸ் எக்ஸ்

    புதிய போல்ட் ப்ரோபாட்ஸ் எக்ஸ் மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இது அமேசான் தளத்தில் ரூ. 1499 விலையில் வற்பனை செய்யப்படுகிறது. இது அறிமுக விலை என்பதால், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். இத்தடன் இந்த இயர்பட்ஸ் ஒரு வருட வாரண்டி கொண்டிருக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை பலன்களில் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 2399 விலையில் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகையின் வேலிடிட்டியை 425 நாட்கள் என கடந்த ஆகஸ்ட் மாதம் நீட்டித்தது. முன்னதாக இதற்கான வேலிடிட்டி 365 நாட்கள் என்றே இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த சலுகையின் வேலிடிட்டி மீண்டும் 365 நாட்கள் என குறைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது 425 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் சலுகை அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

     கோப்புப்படம்

    ரூ. 2399 பி.எஸ்.என்.எல். சலுகையை ஆன்லைன் அல்லது பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் பெறலாம். இதுதவிர மொபைல் போனில் *444*2399# குறியீட்டு எண்ணில் அழைத்தும் ரீசார்ஜ் செய்யலாம். இவ்வாறு செய்யும் முன் பிரீபெயிட் அக்கவுண்டில் போதுமான பேலன்ஸ் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

    பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சலுகையில் தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் வாய்ஸ் கால், பி.எஸ்.என்.எல். டியூன்ஸ் மற்றும் இரோஸ் நௌ சந்தா வழங்கப்படுகிறது. அந்த வகையில் பி.எஸ்.என்.எல். ரூ. 2399 சிறப்பான நீண்ட கால சலுகை ஆகும். 
    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பீட்ஸ் பெயரில் புதிய இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.


    இந்தியாவில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. போட் மற்றும் நாய்ஸ் போன்ற பிராண்டுகள் குறைந்த விலை வயர்லெஸ் இயர்பட் மாடல்களை விற்பனை செய்து வருகின்றன. தற்போது நாய்ஸ் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை நாய்ஸ் பீட்ஸ் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

    இந்த இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இயர்பட் எடை 4.5 கிராம் ஆகும். இதில் நான்கு எல்.இ.டி. லைட்கள் உள்ளன. புதிய நாய்ஸ் பீட்ஸ் முழு சார்ஜ் செய்தால் ஏழு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் உடன் சேர்க்கும் போது மொத்தம் 18 மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும்.

     நாய்ஸ் பீட்ஸ் இயர்பட்ஸ்

    நாய்ஸ் பீட்ஸ் இயர்பட்ஸ் ரூ. 1,499 எனும் அறிமுக விலையில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த இயர்பட்ஸ் உண்மை விலை ரூ. 3,499 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், புதிய இயர்பட்ஸ் விலை விரைவில் மாற்றப்படலாம்.

    இந்தியாவில் நாய்ஸ் பீட்ஸ் முதல் விற்பனை டிசம்பர் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் தளத்தில் துவங்குகிறது. இந்த இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி எபிக் கேம்ஸ் ஸ்டோர் அதன் பயனர்களுக்கு 15 கேம்களை இலவசமாக வழங்குகிறது.


    எபிக் கேம்ஸ் ஸ்டோர் கிறிஸ்துமஸ் கால சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இம்முறை பயனர்களுக்கு மொத்தம் 15 கேம்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்த சலுகை ஜனவரி 6, 2022 வரை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் சலுகையின் போது பல்வேறு கேம்கள் ஏற்கனவே இலவசமாக வழங்கப்பட்டு இருந்தது. 

    எனினும், இம்முறை அறிவிக்கப்பட்டு இருக்கும் கேம்கள் முற்றிலும் புதிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலவச கேம்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு கேம் வீதம் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இலவச கேம்கள் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 4.59 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இதுவரை கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 5, கண்ட்ரோல் மற்றும் பல்வேறு பிரபல கேம்களை எபிக் கேம்ஸ் ஸ்டோர் இலவசமாக வழங்கி இருக்கிறது. இதுதவிர ஒவ்வொரு வாரமும் எபிக் கேம்ஸ் ஸ்டோர் இலவச கேம்களை வழங்கி வருகிறது.

    இலவச கேம்கள் மட்டுமின்றி பல்வேறு கேம்களுக்கு அசத்தலான தள்ளுபடி மற்றும் குறுகிய கால விலை குறைப்பு உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்போனின் மேம்பட்ட மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

     
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட்ஸ்-இன் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் பெரிய டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. 

    மேலும் இதன் பேட்டரி பேக்கப் முந்தைய பட்ஸ் இசட் மாடலை விட அதிகம் ஆகும். புதிய பட்ஸ் இசட்2 மாடலில் ப்ரோ கேமிங் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மொபைல் கேமர்களுக்கு லோ லேடன்சி மூலம் சிறப்பான அனுபவத்தை வழங்கும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 நத்திங் இயர் 1 மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் பியல் வைட் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் 1920x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஆக்டாகோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலில் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி, எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8

    இந்த டேப்லெட் ஒன் யு.ஐ. இண்டர்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் மல்டி-டாஸ்கிங், ஸ்ப்லிட் ஸ்கிரீன், டிராக் அண்ட் ஸ்ப்லிட் அம்சங்கள் உள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல்- கிரே, பின்க், கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது சலுகை கட்டணங்களை உயர்த்தியது. விலை உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. 

    புதிய ரூ. 1 விலை ஜியோ சலுகை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் 100 எம்.பி. டேட்டா வழங்கப்படுகிறது. 100 எம்.பி. டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 64 கே.பி.யாக குறைக்கப்பட்டு விடும். எனினும், பயனர்கள் மீண்டும் ரூ. 1 விலை சலுகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 

     மைஜியோ ஆப் ஸ்கிரீன்ஷாட்

    இந்த சலுகையை பெற முதலில் உங்களின் மொபைல் நம்பருக்கு புதிய சலுகை வழங்கப்பட்டு இருக்கிறதா என தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய மை ஜியோ செயலியின் ரீசார்ஜ் ஆப்ஷன் சென்று வேல்யூ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து அதர் பிளான்ஸ் பகுதியில் ரூ. 1 சலுகையை காணலாம்.
    ×