என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2
அசத்தல் அப்டேட்களுடன் புது ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம்
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்போனின் மேம்பட்ட மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஸ் இசட்2 வயர்லெஸ் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட்ஸ்-இன் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் பெரிய டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது.
மேலும் இதன் பேட்டரி பேக்கப் முந்தைய பட்ஸ் இசட் மாடலை விட அதிகம் ஆகும். புதிய பட்ஸ் இசட்2 மாடலில் ப்ரோ கேமிங் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மொபைல் கேமர்களுக்கு லோ லேடன்சி மூலம் சிறப்பான அனுபவத்தை வழங்கும். புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 நத்திங் இயர் 1 மற்றும் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 விலை 99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் பியல் வைட் மற்றும் அப்சிடியன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் இசட்2 இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Next Story