என் மலர்

  நீங்கள் தேடியது "Boult Audio"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.
  • புதிய போல்ட் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிம் கொண்ட டயல், இருவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.

  போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் "ரோவர்" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

  புதிய ரோவர் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவம் கொண்ட டயல் கொண்டுள்ளது. இத்துடன் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃப்ளிப் என இருவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது. கிளாசிக் ஸ்விட்ச் மாடல் பிரவுன் லெதர் பிரைமரி ஸ்டிராப், ஆரஞ்சு நிற இரண்டாவது ஸ்டிராப் கொண்டிருக்கிறது. ஃப்ளிப் வெர்ஷனில் பிளாக் பிரைமரி ஸ்டிராப் நிறமாகவும், ஃபிரீ கிரீன் மற்றும் புளூ ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

  போல்ட் ரோவர் மாடலில் இதய துடிப்பு சென்சார், SpO2, ஸ்லீப், மென்ஸ்டுரல் சைக்கில் டிராக் செய்வது என ஏராளமான உடல்நல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP68 தர ரேட்டிங், முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்குகிறது. இதுதவிர மியூசிக் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ஸ் மற்றும் போன் ஃபைண்டர் போன்ற அம்சங்களும் உள்ளன.

  போல்ட் ரோவர் அம்சங்கள்:

  1.3 இன்ச் 360x360 பிக்சல் HD AMOLED ஸ்கிரீன், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்

  ப்ளூடூத் 5.2

  ப்ளூடூத் காலிங் மற்றும் இன்பிலிட் ஸ்பீக்கர், மைக்

  100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

  SpO2 மாணிட்டர், இதய துடிப்பு சென்சார்

  150-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

  கஸ்டம் வாட்ச் ஃபேஸ் ஆப்ஷன்

  IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட்

  ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், ஃபைண்ட் போன், மியூசிக் பிளேபேக்

  பத்து நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப்

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  புதிய போல்ட் ரோவர் ஸ்மார்ட்வாட்ச் கிளாசிக் ஸ்விட்ச் மற்றும் ஃப்ளிப் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை போல்ட் ஆடியோ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

  ×