என் மலர்
கணினி
டெஃபி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவை சேர்ந்த ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான டெஃபி தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. டெஃபி ஸ்பேஸ் என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.69 இன்ச் 240x280 பிக்சல் ஃபுல் டச் ஃபிளாட் எல்.சி.டி. சதுரங்க வடிவிலான டயல் கொண்டிருக்கிறது. இது நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்களை சப்போர்ட் செய்கிறது.
மேலும் இதில் பல்வேறு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் மோட்கள், கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ், 24x7 இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஒ.2 மாணிட்டரிங், ஐ.பி. 68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கால், டெக்ஸ்ட் மற்றும் சமூக வலைதளங்களுக்கான நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது.

இத்துடன் கைடெட் பிரீத்திங், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் கேமரா கண்ட்ரோல் வசதி உள்ளது. இதன் பேட்டரி பேக்கப் பற்றிய விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய டெஃபி ஸ்பேஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
ஒற்றை நிறத்தில் கிடைத்தாலும் பிளாக் அல்லது புளூ, ஸ்கின்-சேஃப் சிலிகான் ஸ்டிராப்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்ஹெய்சர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹெட்போன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆடியோ சாதனங்கள் உற்பத்தியாளரான சென்ஹெய்சர் இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கேன்சலிங் ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்தது. ஹெச்.டி. 450 எஸ்.இ. என அழைக்கப்படும் புது ஹெட்போன் விலை ரூ. 14,990 ஆகும்.
இந்த ஹெட்போன் தனித்துவம் மிக்க வயர்லெஸ் ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உள்ள பிரீமியம் அம்சங்கள் இசை பிரியர்களுக்கு அலாதியான அனுபவத்தை வழங்கும். ஓவர்-தி-இயர் ரக சென்ஹெய்சர் ஹெச்.டி. 450 எஸ்.இ. ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, ஏ.ஏ.சி. ஆப்ட் எக்ஸ், ஆப்ட் எக்ஸ் லோ லேடென்சி, ஹெச்.எஸ்.பி., ஹெச்.எப்.பி., ஏ.வி.ஆர்.சி.பி. மற்றும் ஏ2டி.பி. கோடெக் கொண்டிருக்கிறது.

பயனர்கள் இந்த ஹெட்போன் அம்சங்களை பிரத்யேக சென்ஹெய்சர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் மூலம் இயக்க முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. செயலி பேட்டரி ஸ்டேட்டஸ், குவிக் ஸ்டார்ட் கைடு, ஃபர்ம்வேர் அப்டேட் என பல்வேறு விவரங்களை காண்பிக்கிறது.
ஏ.என்.சி. இயக்கப்பட்ட நிலையில் சென்ஹெய்சர் ஹெச்.டி. 450எஸ்.இ. முழு சார்ஜ் செய்தால் 30 மணி நேர பேக்கப் வழங்குகிறது. இந்த ஹெட்போனை யு.எஸ்.பி. டைப் சி போர்ட் கொண்டு சார்ஜ் முழுமையாக செய்ய 2 மணி நேரம் ஆகிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஜனவரி 16 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி டேப் ஏ8 மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 10.5 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், யுனிசாக் டி618 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 அம்சங்கள்
- 10.5 இன்ச் 2000x1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே
- யுனிசாக் டி618 பிராசஸர்
- மாலி ஜி52 எம்.பி.2 ஜி.பி.யு.
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- 8 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்பி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5
- 7,040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி டேப் ஏ8 மாடல் கிரே, சில்வர் மற்றும் பின்க் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,999 என துவங்குகிறது. இதன் விற்பனை ஜனவரி 17 ஆம் தேதி துவங்குகிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டபிள்யூ.எப். சி500 இயர்பட்ஸ்-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சோனி இந்தியா நிறுவனம் டபிள்யூ.எப். சி500 ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் தனித்துவம் மிக்க சவுகரிய அனுபவம் வழங்கும் நோக்கில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை, ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியுடன் வழங்குகிறது. இத்துடன் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை இந்த இயர்பட்ஸ் கொண்டிருக்கிறது.

சோனி டபிள்யூ.எப். சி500 அம்சங்கள்
- 5.8 எம்.எம். டிரைவர் யூனிட்
- ஃபாஸ்ட் பேர்
- ஸ்விஃப்ட் பேர்
- ப்ளூடூத் 5
- டபிள்யூ.எப். சி500 பட்டன் மூலம் ஸ்மார்ட்போன் வாய்ஸ் அசிஸ்டண்ட் இயக்கலாம்
- அதிக தரமுள்ள பில்ட்-இன் மைக்ரோபோன்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்தும் வசதி
- 10 மணி நேர பேக்கப், சார்ஜிங் கேஸ் சேர்த்தால் மொத்தம் 20 மணி நேர பேக்கப்
புதிய சோனி டபிள்யூ.எப். சி500 பிளாக், வைட், ஆரஞ்சு மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முன்னணி மின்சாதன விற்பனை மையங்கள் மற்றும் வலைதளங்களில் ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தல் அம்சங்கள் நிறைந்த புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.
போட் நிறுவனம் இந்தியாவில் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. மாடலை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இந்த இயர்பட்ஸ் ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், மேம்பட்ட திறன், கிளாரிட்டி, அதிவேக கனெக்டிவிட்டி, நீண்ட பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. அம்சங்கள்
- ஹைப்ரிட் ஏ.என்.சி. வசதி
- 10 எம்.எம். டிரைவர்கள்
- ப்ளூடூத் 5
- பாடல்களை மாற்றுவது, வால்யூம் மாற்றுவது உள்ளிட்டவைகளை ஸ்வைப் ஜெஸ்ட்யூர் மூலம் இயக்கலாம்
- இன்-இயர் டிடெக்ஷன்
- போட் இன்ஸ்டா வேக்-அண்ட்-பேர் தொழில்நுட்பம்
- ஐ.பி.எக்ஸ்.4 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டண்ட்
- 5 நிமிட சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பேக்கப்
போட் ஏர்டோப்ஸ் 601 ஏ.என்.சி. மாடல் பிளாக் மற்றும் பியூரிட்டி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் அறிமுக சலுகையாக ரூ. 3,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ட்ரூக் நிறுவனம் பி.டி.ஜி. 3 மற்றும் ஏர் பட்ஸ் லைட் என இரண்டு புதிய கேமிங் இயர்பட்ஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏர் பட்ஸ் லைட் மட்டும் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கிறது.
இரண்டு புதிய இயர்பட்களிலும் 55 எம்.எஸ். லோ லேடென்சி, இன்-இயர் டிடெக்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் இன்-இயர் டிடெக்ஷன் வழங்குவதற்காக பிரத்யேக சென்சார் உள்ளது. ட்ரூக் ஏர் பட்ஸ் லைட் மாடலில் ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி, ஏ.ஐ. சார்ந்து இயங்கும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஏ.ஏ.சி. கோடெக், 10 எம்.எம்., டைட்டானியம் டிரைவர்கள் உள்ளன.

ட்ரூக் பி.டி.ஜி. 3 மற்றும் ஏர் பட்ஸ் லைட் மாடல்கள் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் பயன்படுத்தினால் 48 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
ட்ரூக் பி.டி.ஜி. 3 பிளாக் மற்றும் ரெட் நிறங்களிலும், ஏர் பட்ஸ் லைட் மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களிலும் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 1399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
ஒப்போ நிறுவனம் இந்திய சநந்தையில் புதிய நெக்பேண்ட் இயர்போன் மாடலை குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் என்கோ எம்32 நெக்பேண்ட் இயர்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் பிரபல என்கோ எம்31 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் புதிய இயர் விங் டிசைன், பாஸ்ட் சார்ஜிங், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 20 மணி நேர பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் டூயல் டிவைஸ், ஃபாஸ்ட் ஸ்விட்சிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒப்போ என்கோ எம்32 அம்சங்கள்
- 10 எம்.எம். டைனமிக் டிரைவர்கள், தனித்துவம் மிக்க சவுண்ட் கேவிட்டி டிசைன்
- ப்ளூடூத் 5.0, ஏ.ஏ.சி. கோட்
- டூயல் டிவைஸ் பேரிங் மற்றும் ஃபாஸ்ட் ஸ்விட்சிங்
- ஹால் மேக்னெடிக் ஸ்விட்ச்
- 33 கிராம் எடை
- ஐ.பி. 55 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி
- 220 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- யு.எஸ்.பி. டைப் சி போர்ட்
புதிய ஒப்போ என்கோ எம்32 பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 10 ஆம் தேதி துவங்குகிறது. ஒப்போ என்கோ எம்32 விலை ரூ. 1799 ஆகும். ஜனவரி 10 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் விற்பனையில் இந்த இயர்போனை அமேசான் மற்றும் ஒப்போ ஸ்டோர் தளங்களில் வாங்குவோருக்கு ரூ. 300 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இதன் விலை சில நாட்களுக்கு ரூ. 1,499 ஆக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு உலகளவில் புதிய உச்சத்தை தொட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 2,23,75,950 கோடி வரை உயர்ந்தது. இத்தகைய மதிப்பை எட்டிய முதல் நிறுவனமாக ஆப்பிள் இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஆட்டோமேடெட் கார் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற சந்தைகளில் களமிறங்க இருப்பதும், தொடர்ந்து தலைசிறந்த சாதனங்களை அறிமுகம் செய்யும் என்பதாலும் ஆப்பிள் பங்குகள் விலை கணிசமாக அதிகரித்தது.

2022 ஆண்டின் முதல் வர்த்தக நாளில் ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,640 ஆக துவங்கியது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவன சந்தை மதிப்பு 3 டிரிலியன் டாலர்கள் வரை அதிகரித்தது. பங்குச்சந்தை நிறைவின் போது ஆப்பிள் நிறுவன பங்கு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,570 என இருந்தது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் சுமார் 17 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கி இருக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் நவம்பர் 2021 மாதத்திற்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 30, 2021 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 17 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டதாக வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது. முன்னதாக அக்டோபர் மாதத்தில் 20 லட்சம் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 படி வாட்ஸ்அப் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்திய விதிகள் மற்றும் வாட்ஸ்அப் விதிகளை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதன்படி 2021 நவம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வந்த 17,59,000 பேரின் அக்கவுண்ட்கள் நீக்கப்பட்டன. வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 602 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இதில் வாட்ஸ்அப் 36 அக்கவுண்ட்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று 357 அக்கவுண்ட்களை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டன. அவற்றில் 36 அக்கவுண்ட்கள் 'ஆக்ஷன்' செய்யப்பட்டன.
அக்கவுண்ட் ஏற்கனவே நீக்கப்பட்டு இருத்தல் அல்லது ஏற்கனவே நீக்கப்பட்ட அக்கவுண்ட் ரீஸ்டோர் செய்யப்பட்டு இருத்தலை வாட்ஸ்அப் 'ஆக்ஷன்' என குறிப்பிடுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 4 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது முந்தைய கேலக்ஸி இசட் சீரிஸ், ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த விற்பனையாகும்.
இந்த ஆண்டு கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களின் விற்பனை 80 லட்சம் யூனிட்களை கடக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதுதவிர கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் பிளிப் 3 ஸ்மார்ட்போன்கள் முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

'மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தவர்களும் கேலக்ஸி இசட் சீரிஸ் மாடல்களை வாங்கியுள்ளனர். கேலக்ஸி நோட் 20 மாடலுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி ப்ளிப் 3 மாடலை வாங்குவோர் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்து இருக்கிறது,' என சாம்சங் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம் 2021 ஆண்டிற்கான கடைசி டூடுளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளையும் கொண்டாடும் வகையிலும், நினைவூட்டும் வகையிலும் டூடுள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அதன்படி 2021 கடைசி நாளில், இந்த ஆண்டிற்கான கடைசி டூடுளை வெளியிட்டுள்ளது.
புதிய கூகுள் டூடுள் புத்தாண்டு பிறப்பை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூடுளை கிளிக் செய்ததும், மற்றொரு வலைப்பக்கம் திறந்து பல வண்ணங்கள் நிறைந்த காகித துகள்கள் மேலிருந்து கீழே விழுகின்றன. இந்த வலைப்பக்கத்தில் புத்தாண்டு பிறப்பு பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர கூகுள் இந்த ஆண்டு முழுக்க வெளியிட்ட டூடுள்களும் மற்றொரு வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருக்கின்றன. https://www.google.com/doodles வலைப்பக்கம் சென்று கூகுள் இந்த ஆண்டு வெளியிட்ட டூடுள்களை ஒவ்வொன்றாக பார்க்க முடியும்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடித்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் ஹார்டுவேர் தரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறியது. தற்போது வெடித்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டார். புகைப்படங்களின் படி ஸ்மார்ட்போன் இருபுறங்களிலும் முழுமையாக சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி பதில் அளித்த ரியல்மி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, அருகாமையில் உள்ள ரியல்மி சர்வீஸ் மையம் செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விரைந்து சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. முன்பு இதுபோன்று நடைபெற்ற சம்பவங்களின் போது, வெளிப்புற காரணிகளால் ஸ்மார்ட்போன் வெடித்தது என ரியல்மி பதில் அளித்து இருக்கிறது.






