search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டூடுள்"

    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.



    ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் வலைதளத்தை திறக்கும் போது லோகோவுக்கு அடுத்து நான்கு புள்ளிகள் இடம்பெற்றிருக்கிறது.



    அதனை க்ளிக் செய்ததும் கூகுள் வார்த்தையில் O மற்றும் L எழுத்துக்கள் கிரிக்கெட் பந்து மற்றும் விக்கெட்களாக மாறும் அனிமேஷன் காட்சிகள் தோன்றுகிறது. இத்துடன் டூடுளை க்ளிக் செய்ததும் கூகுள் சர்ச் பக்கம் ஒன்று திறக்கிறது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவுறும் வரை இருக்கும். இன்று துவங்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதுகின்றன. 
    இந்தியாவின் முன்னணி பொறியாளர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் 158-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்தை டூடுள் வைத்து கவுரவித்துள்ளது கூகுள் நிறுவனம். #Visvesvaraya #Google
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னோடி பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா ஆங்கிலேய ஆட்சியில் பொதுப்பணித் துறையில் பணியாற்றியவர். 
    அணைக்கட்டுத் தொழில்நுட்பத்தின் விற்பன்னரான இவர் தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலாக புனேயில் கடக்வசல அணைக்கட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு அணைக்கட்டுகளின் பின்னால் இவரது உழைப்பு உள்ளது.

    அவரது பங்கைக் கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 இந்திய அரசால் பொறியாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    இன்றைய தினம் விஸ்வேஸ்வரய்யாவின் 158வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, நாட்டுக்கு அவர் ஆஅற்றிய அவரது திறமையை கவுரவிக்கும் வகையில் சமூக வலைதளமான கூகுள் இன்று அவரது படத்தை டூடுளாக வைத்து கொண்டாடி வருகிறது.

    சர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Visvesvaraya #Google
    ×