என் மலர்
கணினி
இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசுஸ் நிறுவனம் ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய டிடேச்சபிள் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பை 2-இன்-1 யூஸாக பயன்படுத்தலாம்.
இந்த லேப்டாப்பில் 13.3 இன்ச் டால்பி விஷன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆசுஸ் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோபுக் 13 ஸ்லேட் OLED லேப்டாப்பில் OLED TV டால்பி விஷன் ஸ்கிரீனுடன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் வழங்கப்பட்டுள்ள 50Whr பேட்டரியில், 30 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்தலாம்.
மேலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை இதில் உள்ளன.
மூன்று மாடல்களில் வெளிவந்துள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.45,990-ல் இருந்து ஆரம்பமாகிறது.
ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.57,990 என்றும், அதன் 8ஜிபி வேரியண்டின் விலை ரூ.62,990 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப இந்த லேப்டாப்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு லேப்டாப்களும் AMOLED FHD டிஸ்பிளே 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. இந்த கேலக்ஸி புக்2 சீரிஸில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது.
13-3 இன்ச் வேரியண்ட் லேப்டாப் இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸில் வருகிறது. 15.6 இன்ச் வேரியன்ட் இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ மற்றும் இன்டல் ஆர்க் கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்கள் 8 ஜிபி, 16 ஜிபி மற்றும் 32 ஜிபி LPDDR5 ரேம் வேரியண்டுகளில் 1 டிபி ஸ்டோரேஜ்ஜுடன் வருகின்றன. மேலும் இதில் FHD 1080p வெப் கேமரா, டூயல் அரே மைக் தரப்பட்டுள்ளது. 13.3 இன்ச் வேரியண்ட் 63Wh பேட்டரியுடனும், 15.6 இன்ச் வேரியண்ட் 68Wh பேட்டரியுடனும் வழங்குகிறது.
மேலும் இந்த லேப்டாப்பில் பேக்லிக்ட் கீபோர்ட், பிங்கர்பிரிண்ட் பவர் கீ, டோல்மி அட்மோஸ், வைஃபை 6இ, 802.11 ax, 5.1 வெர்ஷன் ப்ளூடூத் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.79,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கேலக்ஸி புக்2 ப்ரோ 360 லேப்டாப் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் வருகிறது. இந்த இரு வேரியண்டுகளும் 16:9 ரேட்ஷியோவுடன் FHD Super AMOLED டிஸ்பிளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920x1080 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 32 ஜிபி வரையிலான LPDDR5 ரேம், 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ், இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் 1080 பிக்சல்ஸ் ஃபுல் ஹச்.டி டிஸ்பிளே, டூயல் அரே மைக் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.94,640-ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி புக்2 லேப்டாப்பில் 15.6-inch FHD+ OLED டிஸ்பிளே, 1,920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 12-வது ஜென் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ3, ஐ5, ஐ7 பிராசஸர்கள், 16ஜி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ்ஜில் வருகிறது. இதில் 61.Wh பேட்டரி, 65W சர்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.
சாம்சங் கேலக்ஸி புக்2 360 லேப்டாப்பில் 13-inch FHD+ OLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 1,920x1080 சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த லேப்டாப்பும் 12-வது ஜென் ஐ7 மற்றும் கோர் ஐ5 கான்பிகரேஷனில் 16 ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜில் வருகிறது.
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.67,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி புக்2 பிசினஸ் லேப்டாப் FHD anti-glare டிஸ்பிளேவுடன் வருகிறது. Intel vPro-உடன் 12th-gen Intel Core i5 அல்லது i7 பிராசஸர்கள், 12-வது ஜென் இன்டல் கோர் ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 பிராசஸர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த லேப்டாப் இன்டல் UHD கிராபிக்ஸ் அல்லது இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் அல்லது NVIDIA GeForce MX570 A கிராபிக்ஸுடன், 64 ஜிபி ரேம் வரையிலான 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேசுடன் வருகிறது.
இந்த லேப்டாப்பில் FHD 1080p IR வெப்கேமுடன் வருகிறது.
இந்த லேப்டாப்களில் 12 ஜெனரேஷன் இன்டல் பிராசஸர்கள் இடம்பெற்றுள்ளன.
ஏசர் நிறுவனம் ஸ்விஃப்ட் 5 மற்றும் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த லேப்டாப்களை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் 14-inch WQXGA (2,560x1,600 pixels) டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ 16:10 ஆகும். இதன் ஸ்கிரீன் டூ பாடி ரேட்ஷியோ 92.22-ஆக உள்ளது. இதன் டிஸ்பிளே ஆன்டி மைக்ரோபியல் கார்னிங் கொண்ட கொரில்லா கிளாஸுடன், தேய்மானம் மற்றும் பாதுகாப்புக்கு ஐயானிக் சில்வர் உட் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் 12 கோர் இன்டல் கோர் சிபியூ இடம்பெற்றுள்ளது. இன்டெல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி அளவில் டூயல் சேனல் LPDDR5 ரேம் வழங்கப்பட்டுள்ளது. 2 டிபி PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் தரப்பட்டுள்ளது.
இதன் டச்பேட் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள ஓஷன்கிளாஸ் என அழைக்கப்படுகிறது. மேலும் இது மல்டி ஃபிங்கர் மூமன்ட்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் கைரேகை சென்சார் பவர் பட்டன், வாய்ஸ் காம்பெட்டபிலிட்டி கொண்ட கோர்டனா ஆகியவை தரப்பட்டுள்ளன.
இதில் தரப்பட்டுள்ள ஏசரின் டெம்பரல் நாய்ஸ் ரிடக்ஷன் கொண்ட ஃபுல் ஹெச்.டி MIPI வெப்கேம் குறைந்த வெளிச்சத்திலும் அதிக தரம் வாய்ந்த வீடியோக்களை எடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏ.ஐ நாய்ஸ் ரெடக்ஷன் டெக்னாலஜி இரைச்சல் இல்லாமல் உரையாடுவதற்கு உதவுகிறது. இதன் பேக் லிட் கீபோர்ட் சாதாரண கீபோர்ட்டை விட 8-10% வெப்பத்தை வெளியிடும். இந்த லேப்டாப்பில் உள்ள ட்வின்ஏர் டூயல் ஃபேன் சிஸ்டர் மற்றும் டி6 வெப்ப பைப்புகள் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த லேப்டாப்பில் 10 மணி நேரம் வரை பேட்டரி லைஃப் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 4 மணி நிற்கும் திறனை கொண்டுள்ளது. வைஃபை 6இ, தன்டர்போல்ட் 4 இணைப்பு, ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட், 3.2 ஜென் 1 யூஎஸ்பிக்கள் அகியவை கொண்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,51,800-க்கும், சீனாவில் ரூ.1,19,000-க்கும், இந்தியாவில் ரூ.1,12,700-க்கும் கிடைக்கும். இதன் இந்திய வெளியீட்டு தேதி தெரிவிக்கப்படவில்லை.

ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்பில் 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி அல்லது QHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 16:9 ரேட்ஷியோவில் வழங்கப்ப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப் 12 ஜெனரேஜன் இண்டல் கோர் பிராசஸரை கொண்டுள்ளது. 2 டிபி வரையிலான எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் தருகிறது.
இந்த லேப்டாப்பில் ட்வின் ஏர் டூயல் ஃபேன் கூலிங் சிஸ்டம் பிற லேப்டாப்களை விட 65.8% திறனை வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் பிற அம்சங்கள் அனைத்தும் ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் இடம்பெற்றவை தான் இதிலும் தரப்பட்டுள்ளன.
இந்த லேப்டாப் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,01,200-க்கும், சீனாவில் ரூ.65,500-க்கும், வட அமெரிக்காவில் ரூ.64,000-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்களை பதவிறக்கம் செய்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுகிறது.
சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக், கூகுள், சவுண்ட்கிளவுட் மற்றும் யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மைக்ரோசாஃப்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது. இந்த மால்வேர், பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் பிறர் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்கிறது.
இந்த மால்வேர் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வது மூலம் பரவுகிறது. இதனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

உங்கள் கணினியை ஏற்கனவே இந்த மால்வேர் பாதித்திருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும்:-
மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்த மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்யவும்.
பிறகு உங்கள் கணினியில் C:\Users\AppData\Local\Packages> சென்று அங்குள்ள மேல்வேர் பேக்கேஜ் ஃபோல்டரை டெலிட் செய்யவும்.
அதன்பின் கணினியில் C:\Users\AppData\Microsoft\Windows\Start Menu\Programs\Startup சென்று, Skype.lnk அல்லது WindowsSecurityUpdate.lnkin என்ற ஃபைலை கண்டுபிடித்து டெலிட் செய்யவும்.
இதன்மூலம் உங்கள் கணினியை மால்வேர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
இந்த லேப்டாப் சீனாவில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் புதிய டிசைனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் புதிய லேப்டாப்பை வரும் ஏப்ரம் மாதம் வெளியிடவுள்ளது. இந்த லேப்டாப்பிற்கு ’புக் பிரைம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப் சீனாவில் ஜனவரியில் வெளியான ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தின் புதிய டிசைனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பில் 11th Gen Intel Core H-series பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் என்றும், இந்த லேப்டாப்பின் விலை சராசரியாக இந்திய மதிப்பில் ரூ.55,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி புக் மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் 16 ஜிபி LPDDR4x dual-channel ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் 2கே ரெஷலியூஷன் கொண்ட 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே, 100 சதவித sRGB colour gamut, 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோவை கொண்டிருந்தது.
இதில் 11th Gen Intel Core i5-11320H processor, இன்டெல் ஷார்ப் எக்ஸ் கிராபிக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11 ஓ.எஸ், 54Whr பேட்டரி, 65W அதிவேக சார்ஜிங் டெக்னாலஜி ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.
இந்த லேப்டாப்பில் உள்ள வேபர் சேம்பர் கூலிங் அமைப்பு, டிடிஎஸ் ஆடியோஒ தொழில்நுட்பம், டூயல் மைக்குகள், 720 ஹெச்.டி வெப் கேம், பேக்லிட் கீபோர்ட், ஃபிங்கர் பிரிண்ட் பட்டன் ஆகியவை வழங்கப்பட்டிருந்தது.
இதே அம்சங்கள் தான் புதிய ரியல்மி புக் பிரைமில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேக் கணினிகள் ஸ்லீப் மோடில் இருந்தாலும் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன.
உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கணினிகளாக ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினிகள் இருக்கின்றன. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் மேக் கணினிகளுக்கு மேக்ஓஎஸ் 12.2-ஐ இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது.
இந்த ஓ.எஸ்ஸில் பல்வேறு பலன்கள் இருந்தாலும் மேக் கணினிகளை ப்ளூடூத்துடன் இணைத்தால் விரைவாக சார்ஜ் குறைவதாக புகார்கள் எழுந்தன. மேலும் கணினிகளை ஸ்லீப் மோடில் வைத்திருந்தாலும் வேகமாக சார்ஜ் குறைவதாக கூறப்பட்டது. முதலில் ப்ளூடூத்தில் தான் பிரச்சனை இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், புதிதாக வந்த ஓ.எஸ் தான் அதற்கு காரணம் என தெரிய வந்தது.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு புதிய மேக் 12.2.1 வெர்ஷன் ஓ.எஸ்-ஸை வெளியிட்டுள்ளது. இந்த ஓ.எஸ்.எஸை இன்ஸ்டால் செய்தால் பேட்டரி விரைவாக குறையும் பிரச்சனை தீர்ந்து, சார்ஜ் நீடித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டுடன் புதிய செக்யூரிட்டி அப்டேட்டுகளும், மேக் பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்யும் அப்டேட்டும் இடைம்பெறும் கூறப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் இந்த லேப்டாப்பிற்கு ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த லேப்டாப்பிற்கு ஜியோ புக் எனவும் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த லேப்டாப் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பிற்கு ஹார்டுவேர் அனுமதி பெறுவதற்காக ஜியோ விண்ணப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் தகவலின் படி, இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11-ஐ அப்கிரேட் செய்ய முடியும். இதில் ஏ.ஆர்.எம் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.

எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் ஜியோவின் பெயரில் தான் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும்.
இவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த லேப்டாப் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்கிறது.
டெஸ்க்டாப் கணினியின் ஆற்றல், லேப்டாப்பை போன்று எங்கும் எடுத்து செல்லக்கூடிய தன்மை மற்றும் பல்வேறு பணிகளை செய்யும் கிரியேட்டிவ் ஸ்டூடியோ செட்டப் இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோவில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ விண்டோஸ் 11 இயங்குதளத்துடன் வருகிறது.
120Hz screen refresh rate கொண்ட 14.4 இன்ச் பிக்ஸெல்சென்ஸ் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 2,400×1,600 பிக்ஸல் ரெஷலியூஷன், 10 பாயிண்ட் மல்டி டச் சப்போர்ட் ஆகிய அம்சங்கள் இதன் திரையில் அமைக்கப்பட்டுள்ளன. டிஸ்ப்ளேவை பல்வேறு திசைகளுக்கும் நகர்த்தும் வகையில் இதன் திரை அமைக்கப்பட்டுள்ளது.
குவாட்கோர் 11-த் ஜென் இண்டல் கோர் பிராசஸர்ஸில் இயங்கும் இந்த கருவியில் 32 ஜிபி LPDDR4x ரேம், 2 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் Intel Core i5 SoC பிராசஸர் கொண்ட மாடலில் இண்டெல் எக்ஸ்இ இண்டகிரேட்டட் கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. Intel Core i7 SoC பிராசஸர் மாடலில் Nvidia GeForce RTX 3050 Ti dedicated GPU கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆடியோவை பொறுத்தவரை குவாட் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள், டூயல் ஃபார்பீல்டு ஸ்டூடியோ மைக்குகள், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை இந்த கருவி கொண்டுள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை Intel Core i5 பிராசஸர் கொண்ட மாடல்கள் 19 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. 65W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர்கள் அதற்கு வழங்கப்படுகிறது. Intel Core i7 SoC பிராசஸர் கொண்ட மாடல்கள் 18 மணி நேரம் வரை சார்ஜ் நிற்கும் தன்மையை கொண்டுள்ளன. அவற்றிருக்கு 102W சர்பேஸ் பவர் சப்ளை அடாப்டர் வழங்கப்படுகிறது.
கணெக்டிவிட்டிக்காக 2 யூஎஸ்பி டைப் சி போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 3.5 எம்.எம் ஹெட்போன் ஜாக், சர்பேஸ் கனெக்ட் போர்ட், வைஃபை 6, 5.1 ப்ளூடூத் ஆகிய அம்சங்களும் இதில் தரப்பட்டுள்ளன.
இதன் 11th-gen Intel core i5 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 256 ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,65,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 11th-gen Intel core i7 SoC பிராசஸர், 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,15,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சர்பேஸ் லேப்டாப் ஸ்டூடியோ வரும் மார்ச் 8-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் நிலையில், மார்ச் 7-ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.11,399 மதிப்புள்ள ஸ்லிம் பென் 2 ஸ்டைலெஸ் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஹெச்பி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான கணினிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே பயன்பட்டு வருகிறது. அதிலும் விண்டோஸ் 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு மாறும் ஹெச்பி லேப்டாப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஹெச்பி லேப்டாப்பில் விண்டோஸ் 10-ல் இருந்து விண்டோஸ் 11-க்கு மாறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விண்டோஸ் 11-ன் போலி இன்ஸ்டாலர் இணையத்தில் உலவி வருகிறது.
அதனை பயன்படுத்தி விண்டோஸ் 11-னை இன்ஸ்டால் செய்பவர்களின் லேப்டாப்களை ரெட்லைன் என்ற மேல்வேர் தாக்குகிறது. இதன்மூலம் பயன்பாட்டாளர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் போன்ற போலி டொமைன்கள் மூலம் இந்த மேல்வேர் பரப்பப்படுகிறது. இந்த போலி தளம் பார்ப்பதற்கு விண்டோஸ் 11 இணையதளம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் விண்டோஸ் 11 டவுன்லோட் செய்ய நினைக்கும் பயனாளர்கள் டொமைன் பெயரை சரிபார்ப்பது அவசியம்.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான முதற்கட்ட பணிகளை நிறைவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க ஆயிரம் முன்னணி நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகளை நிறைவு செய்து விட்டது. சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்த ஆண்டிற்குள் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் சேவை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தது.
அதன்படி, இந்தியாவில் 5ஜி சேவை வெளியிடும் நிறுவனங்களில் ஜியோ ஆதிக்கம் செலுத்தும் என துவக்கம் முதலே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் ரிலையன்ஸ் ஜியோவும் அவ்வப்போது 5ஜி வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து வந்தது. ஹீட் மேப்ஸ், 3டி மேப்ஸ் மற்றும் ரே டிரேசிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தெரிவித்து இருக்கும் ஜியோ ஃபிளாட்பார்ம்ஸ், ":நாடு முழுக்க ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஜியோ மருத்துவம் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் 5ஜி பயன்பாட்டை சோதனை செய்து வருகிறது," என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை வெளியிடப்படும் என டிராய் ஏற்கனவே அறிவித்து விட்டது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது நெட்வொர்க்கில் 5ஜி சேவையை பல கட்டங்களில் வெளியிட இருக்கிறது. பிரீபெயிட் ரீசார்ஜ் அனுபவத்தை மேம்படுத்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாட்ஸ்அப் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் 2.21.20.11 பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐ.ஒ.எஸ்.-க்கு சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருந்தது.
இதுவரை சாட் டிரான்ஸ்பர் செய்ய ஆண்ட்ராய்டு போன்களை புதிய ஐ.ஒ.எஸ். சாதனத்துடன் யு.எஸ்.பி. டைப் சி-டு-லைட்னிங் கேபிள் மூலம் இணைக்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 'மூவ் டு ஐ.ஒ.எஸ்.' செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
சாம்சங் நிறுவன டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் டி.வி. மாடல்களில் எல்.ஜி. டிஸ்ப்ளே நிறுவனத்தின் ஒ.எல்.இ.டி. பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்.ஜி. எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் எல்.ஜி. டிஸ்ப்ளே சமீபத்தில் உருவாக்கும் சாதனங்கள் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சி.இ.எஸ். 2022 நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளே புதுமை நிறைந்த அடுத்த தலைமுறை கியூ-எல்.இ.டி. மற்றும் ஒ.எல்.இ.டி. பேனல்களை அறிமுகம் செய்தது. எல்.ஜி. டிஸ்ப்ளே உருவாக்கிய டபிள்யூ-ஒ.எல்.இ.டி. பேனல்கள் கொண்ட சாம்சங் டி.வி. மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கென சாம்சங் நிறுவனம் எல்.ஜி. டிஸ்ப்ளேவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் 2022 சி.இ.எஸ். நிகழ்வில் எல்.ஜி. டிஸ்ப்ளேவிடம் இருந்து ஒ.எல்.இ.டி. பேனல்களை வாங்குவது பற்றி சாம்சங் தலைமை செயல் அதிகாரி ஜாங் ஹீ வெளிப்படையாக தகவல் தெரிவித்து இருந்தார்.






