search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    சாட் டிரான்ஸ்பர் அம்சத்தை எளிமையாக்கும் புது வாட்ஸ்ப் அப்டேட்

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது.

    சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா  வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் 2.21.20.11 பீட்டா வெர்ஷன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிடப்பட்டது. இதில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து ஐ.ஒ.எஸ்.-க்கு சாட் ஹிஸ்ட்ரியை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருந்தது.

    இதுவரை சாட் டிரான்ஸ்பர் செய்ய ஆண்ட்ராய்டு போன்களை புதிய ஐ.ஒ.எஸ். சாதனத்துடன் யு.எஸ்.பி. டைப் சி-டு-லைட்னிங் கேபிள் மூலம் இணைக்க வேண்டும். இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் 'மூவ் டு ஐ.ஒ.எஸ்.' செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
    Next Story
    ×