search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஆசுஸ் விவோபுக் 13 ஸ்லேட்
    X
    ஆசுஸ் விவோபுக் 13 ஸ்லேட்

    ஆசுஸ் அறிமுகம் செய்துள்ள 2 இன் 1 லேப்டாப்- விலை இவ்வளவு தான்..

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆசுஸ் நிறுவனம் ‘விவோபுக் 13 ஸ்லேட்’ என்ற புதிய டிடேச்சபிள் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப்பை 2-இன்-1 யூஸாக பயன்படுத்தலாம்.

    இந்த லேப்டாப்பில் 13.3 இன்ச் டால்பி விஷன் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஆசுஸ் பென் 2.0 ஸ்டைலஸ் சப்போர்ட், 170-டிகிரி வரை கழட்டி மாட்டும் வகையிலான ஹிஞ்ச், டிடேச்சபிள் கீபோர்ட், இன்டல் பென்டியம் சில்வர் N6000 SoC புராசஸர் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப் டிவி பார்ப்பவர்களுக்கு புதிவித அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோபுக் 13 ஸ்லேட் OLED லேப்டாப்பில் OLED TV டால்பி விஷன் ஸ்கிரீனுடன் வழங்கப்பட்டுள்ளது.

    ஆசுஸ் விவோபுக் 13 ஸ்லேட்

    இதில் வழங்கப்பட்டுள்ள 50Whr பேட்டரியில்,  30 நிமிடத்தில் 100 சதவீதம் சார்ஜ் ஏறும். அதேபோல ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் வரை இந்த சாதனத்தை பயன்படுத்தலாம். 

    மேலும் டைப்-சி சார்ஜிங் போர்ட், டால்பி ஆட்டம் ஸ்பீக்கர்ஸ் ஆகியவை இதில் உள்ளன.  

    மூன்று மாடல்களில் வெளிவந்துள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ.45,990-ல் இருந்து ஆரம்பமாகிறது.

    ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டைலஸ், ஹோல்டர் கொண்ட லேப்டாப்பின் விலை ரூ.57,990 என்றும், அதன் 8ஜிபி வேரியண்டின் விலை ரூ.62,990 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×