search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஹெச்பி லேப்டாப்
    X
    ஹெச்பி லேப்டாப்

    ஹெச்பி லேப்டாப் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை- இதை டவுன்லோட் செய்யாதீர்கள்!

    விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருந்து விண்டோஸ் 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஹெச்பி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
    இந்தியாவில் பெரும்பாலான கணினிகளில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே பயன்பட்டு வருகிறது. அதிலும் விண்டோஸ் 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு மாறும் ஹெச்பி லேப்டாப் பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஹெச்பி லேப்டாப்பில் விண்டோஸ் 10-ல் இருந்து விண்டோஸ் 11-க்கு மாறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விண்டோஸ் 11-ன் போலி இன்ஸ்டாலர் இணையத்தில் உலவி வருகிறது. 

    அதனை பயன்படுத்தி விண்டோஸ் 11-னை இன்ஸ்டால் செய்பவர்களின் லேப்டாப்களை ரெட்லைன் என்ற மேல்வேர் தாக்குகிறது. இதன்மூலம் பயன்பாட்டாளர்களின் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.

    விண்டோஸ் 11 இயங்குதளம்

    மைக்ரோசாப்ட் போன்ற போலி டொமைன்கள் மூலம் இந்த மேல்வேர் பரப்பப்படுகிறது. இந்த போலி தளம் பார்ப்பதற்கு  விண்டோஸ் 11 இணையதளம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் விண்டோஸ் 11 டவுன்லோட் செய்ய நினைக்கும் பயனாளர்கள் டொமைன் பெயரை சரிபார்ப்பது அவசியம்.

    இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×