என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஜியோ
விரைவில் அறிமுகமாகவுள்ள குறைந்த விலை ஜியோ லேப்டாப்- என்னென்ன அம்சங்கள் இருக்கிறது தெரியுமா?
ஜியோ நிறுவனம் இந்த லேப்டாப்பிற்கு ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலை லேப்டாப்பை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த லேப்டாப்பிற்கு ஜியோ புக் எனவும் பெயரிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த லேப்டாப் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த லேப்டாப்பிற்கு ஹார்டுவேர் அனுமதி பெறுவதற்காக ஜியோ விண்ணப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம்பெற்றிருக்கும் தகவலின் படி, இந்த லேப்டாப் விண்டோஸ் 10 ஓ.எஸ்ஸில் இயங்கும். இந்த லேப்டாப்பில் விண்டோஸ் 11-ஐ அப்கிரேட் செய்ய முடியும். இதில் ஏ.ஆர்.எம் பிராசஸர் பொருத்தப்பட்டிருக்கும்.

எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த லேப்டாப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் ஜியோவின் பெயரில் தான் இந்த லேப்டாப் விற்பனைக்கு வரும்.
இவ்வாறு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் குறைந்த விலையில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த லேப்டாப் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






