என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ரியல்மி எக்ஸ்.டி.
மீண்டும் வெடித்து சிதறிய ரியல்மி ஸ்மார்ட்போன்
ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்கள் வெடித்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் ஹார்டுவேர் தரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறியது. தற்போது வெடித்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டார். புகைப்படங்களின் படி ஸ்மார்ட்போன் இருபுறங்களிலும் முழுமையாக சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் பற்றி பதில் அளித்த ரியல்மி, 'ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, அருகாமையில் உள்ள ரியல்மி சர்வீஸ் மையம் செல்ல அறிவுறுத்தி இருக்கிறோம். இந்த சம்பவத்தை விரைந்து சரி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

ஸ்மார்ட்போன் வெடித்ததற்கான காரணம் பற்றி ரியல்மி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. முன்பு இதுபோன்று நடைபெற்ற சம்பவங்களின் போது, வெளிப்புற காரணிகளால் ஸ்மார்ட்போன் வெடித்தது என ரியல்மி பதில் அளித்து இருக்கிறது.
Next Story