search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபேட் மினி"

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது சாதனங்கள் பற்றிய தகவல் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புது சாதனங்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிரபல ஆப்பிள் நிறுவன வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஐபேட் மினி மாடலை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார்.

    அடுத்த ஐபேட் மினி மாடலின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக புது பிராசஸர் அல்லது சிப் இருக்கும் என்றும் கியோ தெரிவித்துள்ளார். புது சிப் மூலம் அடுத்த தலைமுறை ஐபேட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. ஏப்ரல் மாத வாக்கில் கியோ வெளியிட்டு இருந்த தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    பின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் ஐபேட் அல்லது ஐபோனாக இருக்கும் என்றும் இது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சிறிய டேப்லெட்-க்கு மாற்றாக மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகம் செய்யப்படாது. மாறாக மடிக்கக்கூடிய ஐபேட் மினி விலை உயர்ந்த சாதனமாக அறிமுகமாகும் என மிங் சி கியோ தெரிவித்துள்ளார்.

    ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் மினி 6 மாடல் 2023 ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபேட் மினி 6 மாடலில் 8.3 இன்ச் லிக்விட் கூல்டு ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ×