என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
ரியல்மி லேப்டாப் மற்றும் டேப்லெட் வெளியீட்டு விவரம்
Byமாலை மலர்11 Jun 2021 11:32 AM GMT (Updated: 11 Jun 2021 11:32 AM GMT)
ரியல்மி நிறுவனத்தின் புதிய லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ரியல்மி நிறுவனத்தின் ஜிடி குளோபல் நிகழ்வில் புது சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றிய விவரங்களை ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வில் புது லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.
முன்னதாக ரியல்மி தனது கம்யூனிட்டி தளத்தில் புது லேப்டாப் வெளியீட்டை உணர்த்தும் வகையிலான சர்வே ஒன்றை நடத்தியது. இதைத் தொடர்ந்து ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் துணை தலைவர் மாதவ் சேத் புது சாதனங்கள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளார்.
புது லேப்டாப் மற்றும் டேப்லெட் வெளியீடு குறித்து ரியல்மி ஏற்கனவே பல விவரங்களை வெளியிட்டு இருந்த நிலையில், தற்போது இவற்றின் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. ரியல்மி ஜிடி குளோபல் நிகழ்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
Next Story
×