search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ட்விட்டர்
    X
    ட்விட்டர்

    இந்தியாவில் கருத்து சுதந்திரம் அச்சுறுத்தப்படுவதாக ட்விட்டர் குற்றச்சாட்டு

    மத்திய அரசு விதிமுறைகளை எதிர்த்து கருத்து தெரிவித்த ட்விட்டர் நிறுவனத்திற்கு அரசு சார்பில் காட்டமான பதில் அளிக்கப்பட்டு உள்ளது.


    புதிய விதிமுறைகள் விவகாரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் இந்த விதிமுறைகள் பற்றி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ட்விட்டர் மத்திய அரசை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து இருக்கிறது.

    அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. இதற்கு பதில் அளித்து இருக்கும் மத்திய அரசு, ட்விட்டர் தனது சொந்த விதிகளை இந்தியா பின்பற்றி, நாட்டின் சட்டத்திட்டங்களை மீற முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.

     ட்விட்டர்

    இந்தியாவில் செயல்படும் பல்வேறு சமூக வலைதளம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில், புது விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ட்விட்டர் இருக்கிறது. புது விதிமுறைகளில், `குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும்.' 

    `அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது விதிமுறைகள் இந்திய குடிமக்களின் பேச்சுரிமையை குறைப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது. 

    கருத்து சுதந்திரம் ட்விட்டர் தளத்தில், ட்விட்டர் மூலமாகவே தடுக்கப்படுகிறது. ட்விட்டரின் வெளிப்படையற்ற விதிகள் மூலம் பயனர் அக்கவுண்ட் மற்றும் ட்வீட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×