என் மலர்
கணினி
அமேசான் நிறுவனத்தின் பிரைம் மியூசிக் சேவை இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. இதே சேவை கடந்த ஆண்டு எக்கோ சாதனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
அமேசான் நிறுவனத்தின் பிரைம் மியூசிக் சேவை ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எக்கோ சாதனங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட அமேசான் மியூசிக் தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். சாதனங்களில் கிடைக்கிறது.
மேலும் வலைத்தளங்களில் music.amazon.in என்ற இணைய முகவரியிலும் அமேசான் மியூசிக் சேவை வழங்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போன்று அமேசான் மியூசிக் சேவை அந்நிறுவனத்தின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் விளம்பர இடைவெளியின்றி மியூசிக் சேவையும் அடங்கும்.
தமிழ், தெலுங்கி, கன்னடா, மலையாளம், மராத்தி, ஆங்கிலம், பஞ்சாபி, பெங்காலி, போஜ்பூரி, குஜராத்தி, ராஜஸ்தானி மற்றும் இந்தி போன்ற வெவ்வேறு மொழிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் இசையை கேட்டு அனுபவிக்க முடியும். இத்துடன் ஆஃப்லைன் மியூசிக் டவுன்லோடு, அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் போந்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் விரும்பும் இசையே தங்களது குரல் மூலமாகவே தேடவும், இயக்கவும் முடியும். தற்சமயம் அமேசான் மியூசிக் சேவையில் பல லட்சம் பாடல்கள் இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. இதில் இந்தியா மற்றும் சர்வதேச கலைஞர்களின் பிளேலிஸ்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் டெக்ஸ்பேட் அக்சஸரீக்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #MWC2018 #Samsung
பார்சிலோனா:
சாம்சங் அன்பேக்டு விழாவில் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் டெக்ஸ்பேட் அக்சஸரீயும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டெக்ஸ் ஸ்டேஷனின் மேம்படுத்தப்பட்ட சாதனம் ஆகும். இது கீபோர்டு மற்றும் டிராக்பேட் பயன்பாடுகளை நீக்குகிறது.
புதிய சாம்சங் டெக்ஸ்பேட் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது. இது உங்களது ஸ்மார்ட்போனினை டச் கீபோர்டு மற்றும் டச்பேட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. குறிப்பிட்ட கோணங்களில் ஸ்மார்ட்போனில் எழுதுவது கடினமான விஷயம் என்றாலும், பெரிய டிஸ்ப்ளே இருப்பதால் டிராக்பேட் போன்று பயன்படுத்துவது எளிமையாகிறது.
புதிய டெக்ஸ்பேட் கொண்டு அதிகபட்சம் 2560x1440 பிக்சல் திரை கொண்ட டிஸ்ப்ளேக்களில் பயன்படுத்த முடியும். முந்தைய டெக்ஸ் ஸ்டேஷனில் அதிகபட்சம் 1080 பிக்சல் டிஸ்ப்ளேக்களில் இணைத்து பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கனெக்டிவிட்டி அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அந்த வகையில் புதிய டெக்ஸ்பேட் இரண்டு யு.எஸ்.பி. போர்ட்கள் - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்டிருக்கிறது. முந்தைய டெக்ஸ் ஸ்டேஷனில் வழங்கப்பட்டிருந்த ஈத்தர்நெட் போர்ட் புதிய டெக்ஸ்பேடில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது.
சாம்சங் டெக்ஸ்பேட் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ் மற்றும் நோட் 8 ஸ்மார்ட்போன்களிலும் பயன்படுத்த முடியும். புதிய மென்பொருள் அப்டேட் மூலம் டசட் கீபோர்டு வசதி சேர்க்கப்படும் என சாம்சங் அறிவித்திருக்கிறது.
புதிய சாம்சங் டெக்ஸ்பேட் விலை மற்றும் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில், இவை சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட்புக் X ப்ரோ லேப்டாப் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பார்சிலோனா:
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட்புக் X ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் மாடலில் ஹூவாய் அதிநவீன சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.
ஹூவாய் மேட்புக் X ப்ரோ அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ஹூவாய் மேட்புக் X சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேட்புக் X லேப்டாப் ஏ4 காகிதத்தை விட சிறியதாக உருவாக்கப்பட்டிருந்தது. 13 இன்ச் அளவில் 4.4 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டிருந்தது.

ஹூவாய் மேட்புக் X ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 13.9 இன்ச், 3200x2000 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- மெட்டலி யுனிபாடி வடிவமைப்பு
- இன்டெல் i7 8550U / i5 8250U பிராசஸர்
- 2 ஜிபி GEFORCE MX 150 GPU
- 1 எம்பி பிரைமரி கேமரா
- யு.எஸ்.பி. டைப்-சிx2, யு.எஸ்.பி. டைப்-ஏx1
- ஹெட்போன் ஜாக்
- விண்டோஸ் 10 இயங்குதளம்
- 57.4 Wh பேட்டரி
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கும் ஹூவாய் மேட்புக் X ப்ரோ பல்வேறு வித மெமரிக்களில் கிடைக்கிறது.
இன்டெல் கோர் i5 + 8 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்.எஸ்.டி. மாடல் விலை 1499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,19,200), இன்டெல் கோர் i7 + 8 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்.எஸ்.டி. மாடல் விலை 1699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,35,200), இன்டெல் கோர் i7 + 16 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை 1899 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,51,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹூவாய் மேட்புக் X ப்ரோ ஸ்பேஸ் கிரே மற்றும் மிஸ்டிக் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பிய விலை மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதன் இந்திய விலை மற்றும் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ட்விட்டரில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் வாடிக்கையாளர்கள் டைரக்ட் மெசேஜ் அனுப்ப எளிய வழிமுறையை வழங்குகிறது.
கலிஃபோர்னியா:
ட்விட்டரில் வாடிக்கையாளர் சேவை மைய அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தனது விதிமுறைகளில் மாற்றம் செய்திருக்கிறது. வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு அனுப்பப்படும் டைரக்ட் மெசேஜ்களின் விதிமுறை மாற்றப்பட்டிருப்பது வியாபார நிறுவனங்கள் நேரடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப வழி செய்கிறது.
டைரக்ட் மெசேஜ் டீப் லின்க் மற்றும் டைரக்ட் மெசேஜ் கார்டு என்ற பெயரில் இரண்டு புதிய அம்சங்களும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வியாபார நிறுவனங்களுடன் உரையாடல்களை குறுந்தகவல் மூலம் துவங்கும் வசதியை வழங்குகிறது.
இத்துடன் மிக எளிமையாக உரையாடல்களை துவங்க வெல்கம் மெசேஜ்கள் (வரவேற்பு குறுந்தகவல்) மற்றும் குவிக் ரிப்ளை (உடனடி பதில்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் அடாப்டிவ் ரேட் லிமிட்கள் எனும் புதிய அம்சம் ஏ.பி.ஐ. (API) மூலம் டைரக்ட் மெசேஜ்களை அனுப்பும் டெவலப்பர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வியாபார நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுந்தகவல் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனுப்ப அடாப்டிவ் ரேட் லிமிட்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய மாற்றத்தின் படி நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அவர்கள் தரப்பில் இருந்து ஐந்து பதில்களை அனுப்ப முடியும். மற்றொரு குறுந்தகவல் அனுப்பும் போது, அவர்களுடன் தொடர்ந்து சாட் செய்ய முடியும் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அப்டேட் வீடியோ கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைக்கும் வசதியை வழங்குகிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் வீடியோ அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது நண்பர்களை உடன் இணைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
மெசன்ஜர் செயலியில் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள அனைத்து அழைப்புகளையும் துண்டித்து விட்டு பின் மீண்டும் இன்பாக்ஸ் மூலம் புதிய அழைப்பினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் புதிய அம்சம் வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால் செய்யும் போது இணைப்பை துண்டிக்காமல், நண்பர்களை இணைத்து க்ரூப் கால் செய்ய முடியும்.
வீடியோ அல்லது வாய்ஸ் கால் அழைப்பில் இருக்கும் போதே திரையை கிளிக் செய்து, "add person" ஐகானை தேர்வு செய்து நீங்கள் பேச வேண்டிய நபரை இணைத்துக் கொள்ளலாம். க்ரூப் கால் அம்சங்களில் இன்னமும் ஃபில்ட்டர்கள் மற்றும் எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன.
சாட் நிறைவுறும் போது தானாக உருவாக்கப்பட்ட க்ரூப் சாட் தொடர முடியும். ஃபேஸ்புக் வழங்கி இருக்கும் புதிய அம்சம் நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுடன் உரையாடும் போதே மெசன்ஜரில் உரையாட முடியும். ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1 லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சர்ஃபேஸ் ப்ரோ 2 இன் 1, லேப்டாப் மற்றும் டேப்லெட் என இருவித பயன்பாடுகளை வழங்குகிறது.
2016-ம் ஆண்டு அறிமுகம் மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்திருந்த சர்ஃபேஸ் ப்ரோ 4 சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய சர்ஃபேஸ் ப்ரோ உருவாகி இருக்கிறது. புதிய லேப்டாப்பிலும் 12.3 இன்ச் 2160x1440 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, இன்டெல் 7th Gen கேபி லேக் பிராசஸர்கள் கொண்டுள்ளது.
புதிய சர்ஃபேஸ் லேப்டாப் முந்தைய சர்ஃபேஸ் ப்ரோ 4 மற்றும் ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடல்களை விட முறையே 50% மற்றும் 35% கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இத்துடன் சர்ஃபேஸ் ப்ரோ 3 மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களை விட முறையே 2.5 மற்றும் 1.7 மடங்கு சிறப்பான கம்ப்யூட்டிங் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 சிறப்பம்சங்கள்:
- 12.3 இன்ச் 2736x1824 பிக்சல் 3:2 பிக்சல்சென்ஸ் 10 பாயிண்ட் மல்டி-டச் டிஸ்ப்ளே
- 7th Gen இன்டெல் கோர் m3 ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615
- i5 மற்றும் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 620, அல்லது i7 மற்றும் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் 640
- 4 ஜிபி, 8 ஜிபி, அல்லது 16 ஜிபி ரேம்
- 128 ஜிபி, 256 ஜிபி அல்லது 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஹார்டு டிரைவ்
- 8.0 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா
- 5.0 எம்பி செல்ஃபி கேமரா
- வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. 3.0, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர்
- மினி டிஸ்ப்ளே போர்ட், கவர் போர்ட், சர்ஃபேஸ் கணெக்ட்
- 1.6 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், ஸ்டீரியோ மைக்ரோபோன்
இந்தியாவில் ஆன்லைனில் மைக்ரோசாஃப்ட் ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான் மற்றும் க்ரோமா, ரிலையன்ஸ், மற்றும் இதர விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுக்க மொத்தம் 130க்கும் அதிகமான விற்பனையாளர்களிடம் புதிய சர்ஃபேஸ் ப்ரோ விற்பனை செய்யப்படுகிறது.

புதிய சர்ஃபேஸ் ப்ரோ விலை பட்டியல்
- சர்ஃபேஸ் ப்ரோ, இன்டெல் கோர் m3, இன்டெல் ஹெச்டி கிராஃபிக்ஸ் 615, 4 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை ரூ.64,999
- சர்ஃபேஸ் ப்ரோ, இன்டெல் கோர் i5, இன்டெல் ஹெச்டி கிராஃபிக்ஸ் 620, 4 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை ரூ.79,999
- சர்ஃபேஸ் ப்ரோ, இன்டெல் கோர் i5, இன்டெல் ஹெச்டி கிராஃபிக்ஸ் 620, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை ரூ.1,06,999
- சர்ஃபேஸ் ப்ரோ, இன்டெல் கோர் i7, இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் 640, 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை ரூ.1,33,999
- சர்ஃபேஸ் ப்ரோ, இன்டெல் கோர் i7, இன்டெல் ஐரிஸ் பிளஸ் கிராஃபிக்ஸ் 640, 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை ரூ.1,82,999

சர்ஃபேஸ் ப்ரோ அக்சஸரீக்கள்
சர்ஃபேஸ் ப்ரோ டைப் கவர் (கருப்பு நிறம்) விலை ரூ.10,999
சர்ஃபேஸ் பென் சிக்னேச்சர் டைப் கவர் (சில்வர் மற்றும் சார்கோல் நிறம்) விலை ரூ.12,999
சர்ஃபேஸ் பென் (சில்வர் மற்றும் சார்கோல் நிறம்) விலை ரூ.7,999
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஆர்க் மவுஸ் (லைட் கிரே நிறம்) ரூ.6,399
மைக்ரோசாஃப்ட் புதிய சர்ஃபேஸ் ப்ரோ லேப்டாப் அறிமுக வீடியோவை கீழே காணலாம்..,
ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமரா மற்றும் மைக்ரோபோன் பயன்படுத்த முடியாது என டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை பயன்படுத்த முடியாது என எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான குறியீடுகளை சமீபத்தில் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய முடிவு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இங்குதள பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் கூகுள் தீங்கு விளைவிக்கும் செயலிகள் மீது ஒவ்வொரு மாதமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் கோஸ்ட்கணட்ரோல் (GhostCtrl) என்ற ஆண்ட்ராய்டு மால்வேர் கண்டறியப்பட்டது. இந்த மால்வேர் ஆடியோ மற்றும் வீடியோக்களை சத்தமில்லாமல் ரெக்கார்டு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 19-ம் தேதி ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் திட்டத்தின் கமிட் குறியீடுகளில் ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சம் குறித்த குறியீடுகள் இடம்பெற்று இருந்தது.

இந்த அம்சம் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமராவை இயக்க முற்படும் பட்சத்தில் பிழை ஏற்படுத்தும் வகையில் கோடிங் செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சம் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், சில சமயங்களில் சீரழிவை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கேமரா சத்தமில்லாமல் இயங்குவதை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் செய்ய முடியும் பட்சத்தில், சில ஆண்டி தெஃப்ட் செயலிகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் போது ஸ்மார்ட்போனினை திருடுவோரின் புகைப்படங்களை செல்ஃபி கேமரா மூலம் படம் பிடித்து கொடுக்கின்றன. ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இதுபோன்ற ஆப்ஷன்களை பயனற்றதாக்கும்.
ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளத்தில் தெலுங்கு வார்த்தையால் ஏற்பட்ட பிழையை சரி செய்து புதிய மென்பொருள் அப்டேட்டை ஆப்பிள் வெளியிட்டுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ஆப்பிள் ஐபோன்களை கிராஷ் செய்த தெலுங்கு வார்த்தை பிழையை சரி செய்து ஆப்பிள் புதிய மென்பொருள் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 11.2.6 அப்டேட் ஐபோன்களை கிராஷ் செய்த தெலுங்கு வார்த்தையை மட்டும் சரி செய்துள்ளது. இதே அப்டேட் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் சில மூன்றாம் தரப்பு செயலிகள் எக்ஸ்டெர்னல் அக்சஸரீகளுடன் கணெக்ட் ஆகாமல் இருந்த பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது.
ஐபோன் மற்றும் ஐபேட்களுக்கு ஐ.ஓ.எஸ். அப்டேட் வழங்கப்பட்டிருப்பதோடு, ஆப்பிள் வாட்ச் (வாட்ச்ஓ.எஸ். 4.2.3), ஆப்பிள் டிவி (டிவிஓ.எஸ். 11.2.6), மேக்புக் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் (மேக் ஓ.எஸ். 10.13.3) சாதனங்களுக்கும் ஆப்பிள் புதிய மென்பொருள் அப்டேட்களை வெளியிட்டுள்ளது.

புதிய ஐ.ஓ.எஸ். பிழை சில சாதனங்களை கிராஷ் செய்வதாக கூறப்பட்டாலும், சில சாதனங்களில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட தெலுங்கு வார்த்தை நோட்டிபிகேஷன் வடிவில் வந்தாலும், ஐ.ஓ.எஸ். ஸ்ப்ரிங்போர்டினை ரீசெட் செய்ய வைக்கிறது. ஐ.ஓ.எஸ்.-இல் நோட்டிபிகேஷன்களை ஸ்ப்ரிங்போர்டு தான் கண்ட்ரோல் செய்கிறது.
சில சாதனங்களில் ஸ்ப்ரிங்போர்டு வெற்றிகரமாக ரீசெட் செய்யப்பட்டு தானாக ரீஸ்டார்ட் ஆவதாக கூறப்படுகிறது. சிலருக்கு ஐபோன்கள் தானாக பூட்லூப் வரை சென்று மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் ஐபோனினஎை டிவைஸ் ஃபர்ம்வேர் அப்டேட் மோட் மூலம் சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஐபோனின் டிவைஸ் ஃபர்ம்வேர் அப்டேட் மோட் போனில் உள்ள தகவல்களை முழுமையாக அழித்து, இயங்குதளத்தை மீண்டும் ரீஸ்டோர் செய்யும். ஐபோன்களை பேக்கப் செய்யாதவர்களின் தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்யாமல், முதலில் இருந்து ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பங்களுக்கான ரோட்மேப் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்திய டெலிகாம் துறை சார்பில் ஐந்தாம் தலைமுறை அல்லது 5ஜி தொழில்நுட்பங்களுக்கான ரோட்மேப் இந்த ஆண்டின் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டெலிகாம் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
"5ஜி தொழில்நுட்பங்களுக்கான புதிய டெலிகாம் செயல்திட்டம் (NTP 2018) குறித்து வரவேற்க்கக்கூடிய தகவல்களை மத்திய டெலிகாம் துறை பெற்றிருக்கிறது. புதிய டெலிகாம் செயல்திட்டத்திற்கான வரைவு இறுதி கட்டத்தை அடைந்திருப்பதோடு விரைவில் பொது மக்கள் பார்வைக்கும் வரும்," என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்துவதோடு 5ஜி தொழில்நுட்பத்திற்கும் ஏற்கனவே தயாராகி வருகின்றன என சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

கோப்பு படம்: 5ஜி
"அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் சில பகுதிகள் தவிர இந்தியா முழுக்க 4ஜி நெட்வொர்க் பரவலாகி இருக்கும். தற்போதைய செயல்திட்டம் கணெக்டெட் சாதனங்களுக்கான (Connected Devices) சூழலை மேம்படுத்தும் வகையில் உள்ளது," என தெரிவித்திருக்கிறார்.
கால் டிராப் விவகாரத்தில், டெலிகாம் நிறுவனங்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகளை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்து இருக்கிறது என சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
விமானங்களில் கணெக்டிவிட்டி வழங்குவது குறித்த கேள்விக்கு, "விமானங்களில் கணெக்டிவிட்டி வழங்குவதற்கான அனுமதியை வாங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனினும் இது நிறைவுறும் உறுதியான நேரம் குறித்து எவ்வித தகவலும் இல்லை." என அவர் தெரிவித்தார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால், தேசிய ரோமிங் (மும்பை, டெல்லி தவிர), தனிப்பட்ட ரிங் பேக் டோன் உள்ளிட்டவற்றை 26 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.99 எஸ்.டி.வி. சலுகை இந்தியா முழுக்க வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ.319 விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் எஸ்.டி.வி. இதே சலுகைகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது. இரண்டு திட்டங்களிலும் வேலிடிட்டி தவிர தனிப்பட்ட ரிங் பேக் டோன் மட்டுமே வேறுபடுகிறது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்த மேக்சிமம் பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகையில் பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 365 நாட்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்கள் 181 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்கள் வாய்ஸ் கால் மேற்கொள்ள நிமிடத்திற்கு 60 பைசா வரை செலுத்த வேண்டும்.

இதன் விலை ரூ.999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை வட-கிழக்கு பகுதிகள், ஜம்மு காஷ்மிர் மற்றும் அசாம் தவிர மற்ற வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. 182-வது நாள் முதல் 365 நாட்கள் வரை அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்திற்கு 60 பைசா செலுத்த வேண்டும்.
இதே கட்டணம் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கும் பொருந்தும். எஸ்.எம்.எஸ். ஒன்றிற்கு 25 பைசாவும், தேசிய எஸ்.எம்.எஸ். அனுப்ப 35 பைசா செலுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். உடன் ஒப்பிடும் போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நீண்ட வேலிடிட்டி கொண்ட சலுகைகளை வழங்குகிறது.
இந்த சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் ஜியோ திட்டங்களின் விலை ரூ.4,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஐபோன்களில் அந்த மொழியை சேர்ந்த வார்த்தை, குறியீடுகளை டைப் செய்தாலோ அல்லது அனுப்ப முயன்றாலோ ஐபோன்கள் கிராஷ் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் சில பதிப்புகளில் தெலுங்கு மொழி வார்த்தை, குறியீடுகளை டைப் செய்தாலோ அல்லது மற்றவர்களுக்கு அனுப்ப முயன்றாலோ ஐபோன்களை கிராஷ் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை ஆப்பிள் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐ.ஓ.எஸ். 11, மேக் ஓ.எஸ். ஹை சியெரா, வாட்ச் ஓ.எஸ். 4 மற்றும் டி.வி. ஓ.எஸ். 11 இயங்குதளத்தில் இந்த பிழை இருப்பதை ஆப்பிள் செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆப்பிள் பழைய இயங்குதளங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் புதிய இயங்குதளங்களின் பீட்டா செயலியில் பிழை ஏற்கனவே சரி செய்யப்பட்டு விட்டது.
ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் கொண்டிருக்கும் சாதனங்கள் புதிய பிழையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. திடீரென ஆப்பிள் ஐமெசேஜ், வாட்ஸ்அப், ஜிமெயில் மற்றும் ஃபேஸ்புக் மெசன்ஜர் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் வேலை செய்யாமல் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் டெலிகிராம் மற்றும் ஸ்கைப் போன்ற செயலிகள் இந்த பிழையில் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. பிழையை சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஆப்பிள் சார்பில் விரைவில் புதிய அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டி.வி. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் புதிய Mi டி.வி. 4 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கசர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. ஹெச்.டி.ஆர். தொழில்நுட்பம் கொண்டுள்ள புதிய டி.வி. 4K பேனல் மற்றும் 4.9 மில்லிமிட்டர் அளவு தடிமனாக இருக்கிறது.
இதன் ஃபிரேம்லெஸ் வடிவமைப்பு மற்றும் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் தொலைகாட்சியின் முக்கிய அம்சங்களில் முதன்மையானதாக இருக்கின்றன. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து உருவாகி இருக்கும் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை மூலம் இயங்குகிறது.
பேட்ச்வால் இருப்பதால், செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ஒற்றை ரிமோட் மூலம் பரிந்துரைகளுக்கு ஏற்ப தேர்வு செய்து பார்க்க முடியும். இவை அனைத்தும் டி.வி.யன் ஹோம்பேஜில இடம்பெற்றிருப்பது அனைவருக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

சியோமி Mi டி.வி. 4 ரிமோட் 11 பட்டன் மற்றும் ப்ளூடூத் கொண்டிருக்கிறது. இதனால் ரிமோட் மூலம் டி.வி.யை இயக்க ரிமோட்-ஐ டி.வி.யை நோக்கி காண்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஸ்மார்ட் டி.வி. மற்றும் செட்-டாப் பாகஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால் ஒவ்வொன்றிற்கும் தனி ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
இணைய தரவுகளை பயன்படுத்த ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், வூட், சோனி லிவ், ஹங்காமா மற்றும் பல்வேறு இதர நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. இவற்றில் 80%-க்கும் அதிகமான தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. எனினும் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சேவைக்கான சப்போர்ட் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi டிவி 4 சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC
- 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
- ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
- 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
- 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-HD
இந்தியாவில் சியோமி Mi டிவி 4 விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுய புதிய தொலைகாட்சியை வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட், Mi.காம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் வாங்கிட முடியும். Mi டி.வி. 4-ஐ வாங்குவோருக்கு சோனி லிவ் மற்றும் ஹங்காமா சேவைகளுக்கான மூன்று மாத இலவச சந்தா, Mi IR கேபிள், இலவச ஆன்-சைட் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.






