என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் 29-வது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி துவங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனம் 29-வது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8 வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மெக் எனர்ஜி கன்வென்ஷன் மையத்திலேயே இந்த ஆண்டும் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். மற்றும் ஓ.எஸ். X குறித்த தகவல்களும், ஐ.ஓ.எஸ். 12, மேக் ஓ.எஸ். 10.14, வாட்ச் ஓ.எஸ். 5 மற்றும் டி.வி. ஓ.எஸ். 12 அப்டேட்கள் குறித்த தகவல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் அனிமோஜி அம்சம் ஃபேஸ்டைமில் சேர்க்கப்பட்டு, ஐபேட் செயலிகளில் டேப்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக வெளியான தகவல்களில் பெரும்பாலான முக்கிய அம்சங்களை தள்ளி வைத்து அவற்றை 2019-ம் ஆண்டு வழங்கியும் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் அதிக கவனம் செலுத்தலாம் என கூறப்பட்டது. இத்துடன் குறைந்த விலை ரெட்டினா மேக்புக், மேம்படுத்தப்பட்ட என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்களை ஆப்பிள் இம்முறை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியானது.
2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கான நுழைவு சீட்டு விற்பனை இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் நுழைவு சீட்டு கட்டணம் 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,04,006) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் காரணத்தால், கலந்து கொள்வோர் பட்டியல் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாதோர், விழாவை ஆப்பிள் ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் டி.வி.க்கான WWDC செயலி மூலம் நேரலையில் பார்க்க முடியும். ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டின் சிறப்புரை ஜூன் 5-ம் தேதி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் குறுந்தகவல்களை அழிப்பது குறித்த முக்கிய அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் அதிக எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட டெலீட் அம்சம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.31 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை 1 மணி நேரம் 8 நிமிடங்கள், 16 நொடிகளில் அழிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய ஸ்டேபிள் பில்டு பதிப்புகளில் இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அதனை அழிக்க வழி செய்தது. வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை செய்யப்பட்ட புதிய அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ்-இல் வழங்கப்படும் புதிய அப்டேட், பயனர் வரவேற்பை பொருத்து ஆண்ட்ராய்டில் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்கும் வசதி முதல்முறையாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் ஜிமெயிலின் அன்டூ சென்ட் (Undo Send) அம்சம் போன்றே வேலை செய்கிறது, எனினும் வாட்ஸ்அப்பில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை அழிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.

அனைவருக்கும் அழிக்கும் வசதி என்றாலும், குறுந்தகவல்களை அனுப்புவோருக்கு மட்டும் அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் பிளாக் ரிவோக் ரிக்வஸ்ட் (Block revoke request) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் பயனர் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்க முயலும் போது குறுந்தகவல் அனுப்பும்.
இந்த அம்சம் அனைவருக்கும் அழிக்கப்படும் குறுந்தகவல்கள் 24 மணி நேரத்திற்குள் இருப்பதை உறுதி செய்யும். அந்த வகையில் 24 மணி நேரத்திற்கு பின் அனைவருக்கும் அனுப்பப்படும் குறுந்தகவல்களை சட்ட விரோதமாக அழிக்க முடியாது.
முன்னதாக வாட்ஸ்அப்பில் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கக் கோரும் அம்சமானது ரிக்வஸ்ட் ஐடி மற்றும் மெசேஜ் ஐடி ஒன்றாக இருப்பதை உறுதி செய்து குறிப்பிட்ட குறுந்தகவல்களை அழிக்கும். புதிய வெர்ஷன்களில் ரிவோக் ரிக்வஸ்ட்களுக்கான நேரம் 24 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் குறுந்தகவல்களை அழிக்கும் முன் ரிக்வஸ்ட் ஐடியுடன் மெசேஜ் தேதியை உறுதி செய்கிறது.
இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருந்த மிகமுக்கிய அம்சம் திடீரென நீக்கப்பட்டு இருக்கிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
உலகின் முக்கிய சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ஜிஃபி (GIF) அம்சம் நீக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் பதிவிடும் புகைப்படங்களுக்கு இனவெறியை தூண்டும் வகையிலான ஜிஃப் இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த அம்சம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'எங்களை மன்னித்து விடுங்கள். இதுபோன்ற ஜிஃப் ஸ்னாப்சாட்டில் இடம்பெற்றிருக்க கூடாது. ஜிஃபியுடன் இணைந்து இந்த ஜிஃப் நீக்கப்படுவதற்கான பணிகளை எங்களது குழுவினர் துவங்கியுள்ளனர்.' என ஸ்னாப்சாட் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 'குறிப்பிட்ட ஜிஃப் செயலியில் இருந்து நீக்கப்படும் வரை ஜிஃப் வசதியை நீக்குகிறோம்.' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜிஃப் அனிமேஷன் லைப்ரரியில் இனவெறியை தூண்டும் ஜிஃப் முதலில் இங்கிலாந்தை சேர்ந்த 21 வயது ஸ்னாப்சாட் பயனர் கண்டறிந்திருக்கிறார். குறிப்பிட்ட ஜிஃப் கருப்பு இன மக்கள் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கானோர் இறப்பதற்கு காரணமாக அமைகின்றனர் என்ற வாக்கில் அமைந்திருக்கிறது.
இதேபோன்ற ஜிஃப் முன்னதாக ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலியிலும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. 'இதுபோன்ற தகவல்களுக்கு இன்ஸ்டாகிராமில் இடமில்லை. இந்த விவகாரம் குறித்த விசாரணை நிறைவுறும் வரை ஜிஃபியுடனான எங்களது கூட்டணியை நிறுத்திக் கொள்கிறோம்.' என இன்ஸ்டாகிராம் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியில் ஜிஃபி சேவை மூலம் ஜிஃப் பயன்படுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரிமாற்றத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தும் அனிமேஷன் ஜிஃப் இரண்டு முக்கிய செயலிகளில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது அதன் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சியோமி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் Mi டிவி 4 மாடலுக்கு போட்டியாக வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனம் கடந்த மாதம் Mi டிவி 4 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, பின் சில தினங்களுக்கு முன் Mi டிவி 4A மாடலையும் அறிமுகம் செய்தது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் Mi ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு போட்டியாக வு டெலிவிஷன்ஸ் தனது டிவி மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது.
மார்ச் 13-ம் தேதி வு டெலிவிஷன்ஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி சார்ந்த புதிய தொலைகாட்சியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பெங்களூருவில் நடைபெற இருக்கும் அறிமுக விழாவுக்கான அழைப்பிதழ்களை வு டெலிவிஷன்ஸ் வெளியிட்டிருக்கிறது.
அழைப்பிதழில் ஓ.கே கூகுள், லெட்ஸ் வு (Okay Google, Let’s Vu) என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதால் புதிய தொலைகாட்சி ஆண்ட்ராய்டு சார்ந்தது என தெரியவந்துள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட் தொலைகாட்சியை வு டெலிவிஷன் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய வு ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை சியோமி டிவி மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பு படம்: Mi TV4
பிப்ரவரி 14-ம் தேதி சியோமி நிறுவனம் 55 இன்ச் 4K HDR Mi டிவி மாடலை ரூ.39,999 விலையில் அறிமுகம் செய்தது. முன்னதாக இதே வாரத்தில் மலிவு விலையில் இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது. Mi டிவி 4 மற்றும் Mi டிவி 4A பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல்கள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.22,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இரண்டு ஸ்மார்ட் டிவி மாடல்களிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த யூசர் இன்டர்ஃபேஸ் பேட்ச்வால் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை 43 இன்ச் Mi டிவி 4A மாடலில் வைபை, 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 3 யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் ஒரு AV கம்போனன்ட் போர்ட், ஒரு S/PDIF ஆடியோ போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
32 இன்ச் மாடலில் இரண்டு யு.எஸ்.பி. 2.0 போர்ட், வைபை, 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், 3 யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஈத்தர்நெட் போர்ட் ஒரு AV கம்போனன்ட் போர்ட் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. Mi டிவி 4A மாடலில் 11 பட்டன் கொண்ட Mi ரிமோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு செட்டாப் பாக்ஸ் மற்றும் தொலைகாட்சி உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும்.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் வெரிஃபைடு சேவையை வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ட்விட்டர் தளத்தில் அனைவருக்கும் வெரிஃபைடு சேவையை வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார். எனினும் இதற்கான வழிமுறையை தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் சில ட்விட்டர் கணக்குகளை வெரிஃபை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ட்விட்டர் வெரிஃபை விண்ணப்பங்கள் ஏற்பதை நிறுத்தி விட்டது. சமீபத்திய அறிவிப்பின் படி விரைவில் இந்த சேவையை மீண்டும் வழங்க ட்விட்டர் முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
2016-ம் ஆண்டு விண்ணப்பித்த அனைவரின் கோரிக்கைகளையும் ட்விட்டர் உறுதி செய்து, வாடிக்கையாளர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டறிந்தது. பிரபல எழுத்தாளர்கள், கிரியேட்டர்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்துவோர் தவிர மற்ற கோரிக்கைகளை நிராகரித்து வந்தது.

ட்விட்டரில் வெரிஃபைடு சேவை வாடிக்கையாளர்களுக்கு அடையாளத்தை வழங்க பயன்படுத்தப்படுகிறது. துவக்கத்தில் பிரபலங்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே வெரிஃபைடு சேவை வழங்கப்பட்டது. ட்விட்டரில் வாடிக்கையாளர்களுக்கு வெரிஃபைடு சேவை வழங்க புதிய வழிமுறைகளை நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
முன்னதாக ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை பின்னர் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை சேமித்து வைக்க புதிய வசதியை அறிமுகம் செய்தது. புக்மார்க்ஸ் (Bookmarks) என அழைக்கப்படும் புதிய அம்சம் சேமித்து வைக்கப்படும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் பின்னர் இயக்க வழி செய்கிறது.
இதேபோன்று ட்விட்களை மிக எளிமையாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள 'ஷேர்' எனும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. ட்விட்டர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஷேர் ஐகானை கிளிக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
விண்டோஸ் 10 எடிஷன் இயங்குதளத்திற்கான எஸ் மோட் வெளியீட்டு தேதியை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்டோஸ் 10 எடிஷன் எஸ் மோட் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் தற்போதைய இயங்குதளம் போன்றதாகும். எனினும் எஸ் மோட் இயங்குதளம் மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் செயலிகளை மட்டும் இயக்கும் படி இயங்குதளத்தை லாக் செய்யும் என தெரிவித்துள்ளது. புதிய இயங்குதளம் விண்டோஸ் 10 எஸ் போன்றே வேலை செய்யும்.
விண்டோஸ் 10 ஹோம், என்டர்பிரைஸ் மற்றும் ப்ரோ வெர்ஷன்களில் எஸ் மோட் அப்டேட் வழங்க மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. விண்டோஸ் 10 எஸ் முன்னதாக சர்ஃபேஸ் லேப்டாப் சாதனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு, பெரும்பாலான பயனர்கள் இதனை பயன்படுத்த துவங்கினர்.
எஸ் மோட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எஸ் மோட்-ஐ விட்டு வெளியேற நினைத்தால் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் வெளியேற முடியும். எனினும் எஸ் மோட் எனேபிள் செய்திருக்கும் விண்டோஸ் 10 ப்ரோ வாடிக்கையாளர்கள் 49 டாலர்கள் செலுத்தி விண்டோஸ் 10 ப்ரோ முழு வெர்ஷனை வாங்க வேண்டும்.
வரும் மாதங்களில் எஸ் மோட் கொண்ட விண்டோஸ் 10 சாதனங்கள் விற்பனைக்கு வரலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 ஹோம் அல்லது விண்டோஸ் 10 ப்ரோ பி.சி. இணைப்புகளை எஸ் மோட் எனேபிள் செய்யப்பட்டு புதிதாய் வாங்க முடியும். வணிக ரீதியிலான வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 என்டர்பிரைஸ் மாடலில் எஸ் மோட் எனேபிள் செய்ய வேண்டும்.
அசத்தல் அம்சங்களுடன் ரூ.13,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவியை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4A சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 32 இன்ச் ஹெச்.டி. ரெடி மற்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல்களில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்களில் பேட்ச்வால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.
செட்-டாப் பாஸ் மற்றும் ஆன்லைன் என தரவுகளை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் தகவல்களை நினைவில் கொண்டு அதற்கேற்றவாரு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் என சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:
- 32-இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-450 MP3 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV, யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட்
- H.263, H.264, H.265, MPEG1 / 2/4, WMV3, VC-1 வசதி
- 2 x 10W டோம் ஸ்பீக்கர்
- ஸ்டீரியோ, DTS

சியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:
- 43-இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962- கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-450 MP5 GPU
- 2 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV, யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், SPDIF போர்ட்
- HDR 10, HLG, H.265 4K @ 60 / 30 fps, H.265 1080P @ 60 fps வசதி
- H.263 1080P @ 30 fps, MPEG1 / 2/4 DivX4 வசதி
- 2 x 10W டோம் ஸ்பீக்கர்
- டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டு, DTS மற்றும் பாஸ் பூஸ்ட்
இந்தியாவில் சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பிளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மார்ச் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய Mi ஸ்மார்ட் டி.வி. வாங்கும் ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் ஏர் சாதனத்தை தயாரித்து வருவதாகவும், இந்த சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் மேக்புக் ஏர் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியூ தெரிவித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு வாக்கில் மேக்புக் மாடல்களின் விநியோகம் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
குறைந்த விலை மேக்புக் ஏர் வெளியாவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள போதும், புதிய சாதனங்களின் முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் மேக்புக் ஏர் அப்டேட் செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் மேக்புக் ஏர் சாதனத்தின் ஹார்டுவேர் அம்சங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கோப்பு படம்: மேக்புக் ஏர்
கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் 13 இன்ச் மேக்புக் மாடலில் பிராசஸர் மட்டும் மாற்றப்பட்டது, எனினும் இதுவும் 2014-15 ஆண்டின் பிராட்வெல் சிப் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்டுவேர் மட்டுமின்றி புதிய மாடலின் டிஸ்ப்ளே அதிகளவு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மேக்புக் ஏர் மாடலில் 1440x900 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப்-சி, தண்டர்போல்ட் 3 அப்கிரேடு மற்றும் முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ஏப்ரல் - ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்களை இந்த ஆண்டு வெளியிடலாம் என்றும், இதில் வாட்டர் ரெசிஸ்டண்ட், சிரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் உயர் ரக ஓவர்-இயர் ஹெட்போன் சாதனத்தையும் ஆப்பிள் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் ஆப்பிள் சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் வழங்கப்படல்லை.
கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் திடீரென டிரெண்ட் ஆன சராஹா செயலி தற்சமயம் இரண்டு பிளே ஸ்டோர்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டது.
புதுடெல்லி:
சவுதி அரேபியாவை சேர்ந்த சராஹா என்ற செயலி கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமானது. உலகம் முழுக்க வேகமாக டிரெண்ட் ஆன சராஹா செயலி உடனடியாக ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் முதலிடம் பிடித்தது.
மக்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடம் சொல்ல விரும்பும் தகவல்களை ரகசியமாக தெரிவிக்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மககள் தங்களிடம் இருக்கும் குறைகளை திருத்தி கொள்ள முடியும் என செயலியை உருவாக்கிய தௌஃபிக் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் சராஹா செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சராஹா செயலி நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கத்ரினா கொலின்ஸ் தனது 13 வயது மகளுக்கு சராஹா செயலியில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களை கண்டு அதிர்ந்து போனார். மகளுக்கு சராஹா செயலியில் இருந்து எக்கச்சக்கமான அவதூறு குறுந்தகவல்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டதாக அவர் ஆன்லைனில் புகார் அளித்திருந்தார். குறுந்தகவல்களில் மிகவும் அறுவருக்கத்தக்க வார்த்தைகள் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
செயலியில் மிகவும் மோசமான வழக்கம் பின்பற்றப்படுவதை கண்டு அதிர்ந்து போன கத்ரினா ஆன்லைனில் இது குறித்த புகாரை பதிவு செய்தார். இவர் அளித்த புகார் செயலியில் மக்களை இழவு படுத்தும் மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைனில் கத்ரினா பதிவு செய்த புகார் படிவத்திற்கு 4,70,000 பேர் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் சராஹா செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் கூகுள் மற்றும் ஆப்பிள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. எனினும் கூகுள் மற்றும் ஆப்பிளுடன் இணைந்து சுமூக முடிவை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செயலியில் தீங்கு விளைவிக்கும் குறுந்தகவல்களை கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற வழிமுறைகள் பின்பற்றப்படும்.
அந்த வகையில் கண்டனத்திற்குரிய குறுந்தகவல்கள் செயலியில் பகி்ர்ந்து கொள்ளப்படுவதை முற்றிலும் தடுக்க முடியும். என சராஹா செயலியை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான செயின்-அலாப்தின் தௌஃபிக் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ராய்டின் கூகுள் பிளே, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் தேடல்களிலும் சராஹா செயலியை கண்டறிய முடியாது. எனினும் ஏற்கனவே செயலியை பயன்படுத்துவோர் அதனை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த செயலி அடுத்தக்கட்ட அம்சங்களை வழங்க தயாராகி விட்டது.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.
கால் ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள், வீடியோ கால் சார்ந்த விவரங்களும் இந்த செயலியில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக பிரைவேட் சாட் விண்டோவில் நேவிகேஷன் பாரில் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் இன்ஸ்டாகிராம் செயலி ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஐ.ஓ.எஸ். பதிப்பில் வீடியோ கால்களுக்கான ஆப்ஷன்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கும் நிலையில் நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இருக்காது.
ஃபேஸ்புக்கின் பல்வேறு செயலிகளில் ஏற்கனவே வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சங்கள் வெளியாகும் காலம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஐ.ஓ.எஸ். தளத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு புதிய அப்டேட் மூலம் அசத்தும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். 2.18.30 வெர்ஷன் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 154.9 எம்.பி. அளவு கொண்ட புதிய அப்டேட் ஐ.ஓ.எஸ். 7.0 அல்லது அதற்கும் புதிய அப்டேட்களில் வழங்கப்படுகிறது.
புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் புகைப்படம் அல்லது வீடியோக்களில் நேரம் மற்றும் இருக்கும் இடத்தை ஸ்டிக்கர் வடிவில் சேர்க்க முடியும். இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்படிருக்கிறது.
புகைப்படம் அல்லது வீடியோக்களில் ஸ்டிக்கர் சேர்க்க கீபோர்டில் இருக்கும் + ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் போட்டோ அல்லது வீடியோ லைப்ரரி ஆப்ஷன் திரையில் தெரியும், இதில் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படம் அல்லது வீடியோவினை தேர்வு செய்ய வேண்டும்.

இனி மீடியா பிரீவியூவில் எமோடிக்கான் ஐகானை கிளிக் செய்து நேரம் அல்லது இருக்கும் இடத்தை குறிக்கும் ஸ்டிக்கரை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. ஸ்டிக்கர்களை எடுக்க அவற்றை டிராக் செய்து குப்பை தொட்டி ஐகானில் வைக்க வேண்டும். இந்த ஐகான் திரையின் இடது புறத்தின் மேல் காணப்படும்.
இத்துடன் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட நபரை க்ரூப் இன்ஃபோ திரையில் இருந்தபடியே தேடவும் முடியும். இதன் மூலம் க்ரூப்களில் இருக்கும் குறிப்பிட்ட சிலருடன் மிக எளிமையாக நேரடியாக சாட் செய்ய முடியும்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், கூகுள் மற்றும் ஸ்னாப்சாட் போன்று வாட்ஸ்அப் செயலியிலும் விளம்பர தகவல்களை காட்சிப்படுத்துவது குறித்து வாட்ஸ்அப் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் விதிமுறைகளில் வாட்ஸ்அப் பயனர் தகவல்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிஸ்னஸ் கணக்குகளில் விளம்பர தகவல்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை சேமித்து வைக்க புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ட்விட்டரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் ட்விட்களை பின்னர் படிப்பதற்கு ஏதுவாக அவற்றை சேமித்து வைக்க புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புக்மார்க்ஸ் (Bookmarks) என அழைக்கப்படும் புதிய அம்சம் சேமித்து வைக்கப்படும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் பின்னர் இயக்க வழி செய்கிறது.
இத்துடன் ட்விட்களை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள ஷேர் எனும் புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஷேர் ஐகானை கிளிக் செய்து ட்விட்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளவோ, அவற்றை புக்மார்க் செய்யவோ முடியும்.
அந்த வகையில் ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இரண்டு புதிய அம்சங்களும் ஷேர் எனும் ஒற்றை பட்டனில் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக ட்விட்களை ஷேர் செய்யவோ அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ முடியும்.

புக்மார்க் செய்யப்பட்ட ட்விட்களை அக்கவுண்ட் ஹோம் பேஜ் சென்று பார்க்க முடியும். ட்விட்டரில் புதிய புக்மார்க் அம்சம் மொமண்ட்ஸ் மற்றும் ட்விட்டர் ஆட்ஸ் ஆப்ஷன்களுக்கு இடையில் காணப்படுகிறது. புக்மார்க் செய்த ட்விட்களை படித்து முடித்ததும் அவற்றை புக்மார்க் பகுதியில் இருந்து எடுத்து விட முடியும்.
வாடிக்கையாளர் சேமித்து வைத்திருக்கும் ட்விட்களை மற்றவர்களால் பார்க்க முடியாது. இதேபோன்று மற்றவர்கள் பதிவிடும் ட்விட்களை வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல், டெக்ஸ்ட் மெசேஜ் அல்லது டைரக்ட் மெசேஜ் மூலம் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும்.
ட்விட்டர் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., ட்விட்டர் லைட் மற்றும் ட்விட்டர் மொபைல் வலைத்தளங்களில் புக்மார்க்ஸ் ஆப்ஷன் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.






