என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் ரூ.13,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்
    X

    இந்தியாவில் ரூ.13,999 விலையில் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

    அசத்தல் அம்சங்களுடன் ரூ.13,999 விலையில் புதிய ஸ்மார்ட் டிவியை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    சியோமி நிறுவனத்தின் Mi டி.வி. 4A சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 32 இன்ச் ஹெச்.டி. ரெடி மற்றும் 43 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல்களில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவிக்களில் பேட்ச்வால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. 

    செட்-டாப் பாஸ் மற்றும் ஆன்லைன் என தரவுகளை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் செய்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்த்து ரசிக்கும் தகவல்களை நினைவில் கொண்டு அதற்கேற்றவாரு வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைகளை வழங்கும் என சியோமி தெரிவித்துள்ளது. 



    சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 32-இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்.டி. எல்இடி டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-SX கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-450 MP3  GPU
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட்
    - H.263, H.264, H.265, MPEG1 / 2/4, WMV3, VC-1 வசதி
    - 2 x 10W டோம் ஸ்பீக்கர்
    - ஸ்டீரியோ, DTS



    சியோமி Mi டி.வி. 4A 43-இன்ச் சிறப்பம்சங்கள்:

    - 43-இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T962- கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
    - மாலி-450 MP5  GPU
    - 2 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - MIUI டி.வி. சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - வைபை 802.11 a/b/g/n, 3 x HDMI , AV,  யு.எஸ்.பி. 2.0 x 2, ஈத்தர்நெட், SPDIF போர்ட்
    - HDR 10, HLG, H.265 4K @ 60 / 30 fps, H.265 1080P @ 60 fps வசதி 
    - H.263 1080P @ 30 fps, MPEG1 / 2/4 DivX4 வசதி
    - 2 x 10W டோம் ஸ்பீக்கர்
    - டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்டு, DTS மற்றும் பாஸ் பூஸ்ட்

    இந்தியாவில் சியோமி Mi டி.வி. 4A 32-இன்ச் மற்றும்  43-இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ.13,999 மற்றும் ரூ.22,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் பிளிப்கார்ட், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம், மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை மார்ச் 13-ம் தேதி முதல் துவங்குகிறது.

    ஒவ்வொரு வாரமும்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் புதிய Mi ஸ்மார்ட் டி.வி. வாங்கும் ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×