என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் மேட்புக் X ப்ரோ அறிமுகம்
    X

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் மேட்புக் X ப்ரோ அறிமுகம்

    ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட்புக் X ப்ரோ லேப்டாப் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    பார்சிலோனா:

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய மேட்புக் X ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப் மாடலில் ஹூவாய் அதிநவீன சக்திவாய்ந்த சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது. 

    ஹூவாய் மேட்புக் X ப்ரோ அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ஹூவாய் மேட்புக் X சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். மேட்புக் X லேப்டாப் ஏ4 காகிதத்தை விட சிறியதாக உருவாக்கப்பட்டிருந்தது. 13 இன்ச் அளவில் 4.4 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்களை கொண்டிருந்தது.
     


    ஹூவாய் மேட்புக் X ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 13.9 இன்ச், 3200x2000 ரெசல்யூஷன் டிஸ்ப்ளே  
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - மெட்டலி யுனிபாடி வடிவமைப்பு
    - இன்டெல் i7 8550U / i5 8250U பிராசஸர்
    - 2 ஜிபி GEFORCE MX 150 GPU
    - 1 எம்பி பிரைமரி கேமரா
    - யு.எஸ்.பி. டைப்-சிx2, யு.எஸ்.பி. டைப்-ஏx1
    - ஹெட்போன் ஜாக்
    - விண்டோஸ் 10 இயங்குதளம்
    - 57.4 Wh பேட்டரி

    இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கும் ஹூவாய் மேட்புக் X ப்ரோ பல்வேறு வித மெமரிக்களில் கிடைக்கிறது. 

    இன்டெல் கோர் i5 + 8 ஜிபி ரேம் + 256 ஜிபி எஸ்.எஸ்.டி. மாடல் விலை 1499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,19,200), இன்டெல் கோர் i7 + 8 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்.எஸ்.டி. மாடல் விலை 1699 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,35,200), இன்டெல் கோர் i7 + 16 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்.எஸ்.டி. விலை 1899 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,51,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹூவாய் மேட்புக் X ப்ரோ ஸ்பேஸ் கிரே மற்றும் மிஸ்டிக் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பிய விலை மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதன் இந்திய விலை மற்றும் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    Next Story
    ×