search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயானம்"

    • வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.
    • புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஒடிசா:

    ஒடிசா மாநிலத்தில் இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புஜ்ஜி ஆம்மா (52) என்ற பெண் புதைப்பதற்கு முன்பு கண்விழித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பிப்ரவரி 1-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புஜ்ஜி, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலையில், புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மயானத்தில் புதைப்பதற்கு முன்பு அவர் எழுந்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அதே வாகனத்திலேயே மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள்.
    • தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னையில் உள்ள மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சமீபகாலமாக இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வழக்கமான சென்னையில் உள்ள மயானங்களில் ஒரு உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு 14 ஆண்டுகள் கழித்தே அந்த உடலை தோண்டி எடுத்து அதில் மற்றொரு உடலை மறு அடக்கம் செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

    மேலும் பலர் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து அதில் கல்லறையும் கட்டுகிறார்கள். இதுபோன்ற நடை முறைகளால் இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் புதைக்க இடப்பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு செய்துள்ளது. ஒரு உடலை தோண்டி எடுத்துவிட்டு மற்றொரு உடலை மறு அடக்கம் செய்வதற்கான நடைமுறையை 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நடைமுறையை அமல்படுத்திய பிறகு இன்னும் ஒரு வருடம் கழித்து பெரிதாக கட்டப்பட்டு இருக்கும் கல்லறையை சுற்றி கட்டியுள்ள இடங்களை சிறியதாக மாற்றவும் அவர்களின் உறவினர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மயானங்களில் அதிக இடவசதி கிடைக்கும், இறந்தவர்களின் உடல்களை எந்தவித சிரமமும் இல்லாமல் அடக்கம் செய்யலாம் என்று கருதப்படுகிறது.


    இது தொடர்பாக விவாதிக்க தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது வெளிநாடுகளில் உள்ள கல்லறைகளை போல கட்டிடக்கலையுடன் கூடிய கல்லறைகளுக்கு கவுன்சிலர்கள் இடவசதி கோரி வருகின்றனர். ஆனால் சென்னையில் 208 மயானங்கள் உள்ள நிலையில் அதில் பெரும்பாலான மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இடநெருக்கடி இருப்பதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

    சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மயானங்களில் இடநெருக்கடியை போக்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது. இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் மயானத்தில் மறு அடக்கம் செய்வது 14 ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாக குறையும். கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களில் மயானங்களில் ஒரு வருடத்திலேயே மறு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த நடைமுறை சென்னையிலும் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மயானத்திற்கு பாதை இல்லாததால் இறந்தவர் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
    • விளைநிலங்கள் வழியாக இறுதி ஊர்வலம் நடக்கிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மயான கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தப்பட வில்லை.

    இதனால் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயா னத்திற்கு தனியார் நிலங்கள் மற்றும் சிறு குறு, நீரோடை வழியாக இறந்தவர்களின் சடலங்களை கொண்டு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் சோளம் பயிரிட்டப்பட்டு உள்ளது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்தது உள்ளதால் சிறு குறு ஓடை களில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. சம்பவத்தன்று அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல்நல குறைவால் உயிரி ழந்த நிலையில் அவரது உடலை விவசாய நிலங்க ளில் சாகுபடி செய்யப் பட்டுள்ள பயிர்களை கடந்தும் சிறு குறு நீரோடை களை கடந்தும் ஆபத்தான முறையில் மூதாட்டியின் உடலை கொண்டு சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மயா னத்திற்கு செல்வதற்கு பாதை இல்லாததால் இறந்த வர்களின் உடலை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் நிலவுகிறது.

    அதுவும் மழை காலங்க ளில் ஆபத்தான முறையில் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மயானம் என்பதனால் மயான கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து உதிர்ந்து வருவதனால் கட்டிடத்தை சீரமைத்து, மயானத்திற்கு பாதுகாப்பான முறையில் சென்று வர சாலை வசதியும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும் உரிய அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக உடலை எடுத்து சென்றனர்.
    • மயானம் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பொண்ணு உடல் பாதிக்கப்பட்ட உயிர் இறந்தார்.

    இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இவரது சடலத்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல் வழியாக எடுத்து சென்றனர்.

    பல ஆண்டுகளாக இப்பகுதியில் இறப்பு நேரிட்டால் சுடுகாடு மயானம் இருக்கு இடத்திற்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை.

    எனவே சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர்.
    • உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள, ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில், 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த ஊருக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுடுகாட்டிற்கு, சாலை அமைப்பதாக கூறி, அதற்கான பணிகளை செய்துள்ளனர்.

    ஆனால் சுடுகாட்டை தாண்டி உள்ள நிலங்களை, வீட்டுமனையாக மாற்றி விற்பனை செய்யும் நோக்குடன், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு ஆதரவாக, சுடுகாட்டை மூடி மறைத்து, சவக்குழிகளின் மேல், சாலை அமைத்துள்ளதாக கூறி, இந்த ஊர் பொது மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர்.

    50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பெற்றோர்களின் சவக்குழிகள், காணாமல் போனதாக கூறி கதறி அழுதனர். மேலும் உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிதாக போடப்பட்ட சாலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் சிதறி கிடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே கோவில்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கைசமுத்திரம் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

    புல்பூண்டுகள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மயானத்தில் அடக்கம் செய்ய மூன்று சிறு வாய்க்கால்கள், பயிர் செய்யப்பட்டு உள்ள பயிர்களின் ஊடாக இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட பாடையை சுமந்து வரவேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு பெண்ணின் உடலை பாடையில் வைத்து உறவினர்கள் வளர்ந்த நெல் பயிரின் ஊடாக தடுமாறி சுமந்து வந்தனர்.

    மற்றவர்கள் வரப்புகளில் நடந்து வந்தனர்.

    மயானம் உள்ளதாககூறப்படும் இடத்திற்கு வந்ததும் பாடையை இறக்கி வைத்து அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வயல்களுக்கு நடுவில் உள்ள மயானத்துக்கு பதில் வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே இனியாவது மயானத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

    • அபிராமத்தில் உள்ள மயானத்தை சுற்றி காம்பவுண்டு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எல்லா சமூக மக்களும் வசித்து வந்தாலும் இந்து சமூகத்தினர் இறந்துவிட்டால் அடக்கம் செய்வதற்கு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மயானம் உள்ளது.

    20 ஆண்டு களுக்கு முன்பு இந்த மயானத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். காலப்போக்கில் கம்பிவேலி காணாமல் போய்விட்டது.

    அன்றில் இருந்து இன்று வரை மயானம் திறந்த வெளியில் இருக்கிறது. இதனால் மயானத்தை சமூக விரோதிகள் இரவு-பகல் பாராமல் மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் இதை பார்த்து முகம் சுழிக்கும் நிலை உள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வாசு மற்றும் பொதுமக்கள் கூறுகையில், மயானத்துக்கு சுற்றுசுவர் இல்லாததால் சிலர் சாததமாக பயன்படுத்தி க்கொண்டு வளாகத்தை மது அருந்தும் பார் ஆகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி உள்ளது. ஆங்காங்கே மதுபாட்டில் உடைந்து கிடக்கின்றன.

    இறுதி சடங்குக்கு வரும் பொதுமக்கள் இங்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். ஒருசில நேரங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்தபின்பும், இறந்த வர்களை எரிக்கும்போதும் கவனக்குறைவால் நாய் போன்ற விலங்குகள் இறந்தவர்களின் உடல்களை சிதைத்து பொதுமக்கள் நடமாட்டமுள்ள இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறது.இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் பொது மக்களும் பயப்படுகின்றனர்.

    உடலை எரியூட்டும் தகன மேடை திறந்தவெளியாக இருப்பதால் இன்றுவரை நவீன மயமாக்கப்பட்ட மின்மயானம் இல்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து மயானத்திற்கு சுற்றுசுவர் உட்பட அடிப்படை வசதி அமைக்க வேண்டும். இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மயானத்துக்கு செல்ல பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.
    • பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா இரும்புதலை கீழ ஆதிதிராவிடர்தெரு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பல ஆண்டுகளாக சாலை வசதி கிடையாது.

    இதனால் கிராமத்தில் ஒருவர் இறந்தால் வயல்வெளி வழியே உள்ள வயல்வரப்பு பாதையில் சேறும் சகதியுமாக உள்ள மண் சாலை வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும்.

    சாலை வசதி கேட்டு பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அவதியடைந்து வருகின்றனர்.

    பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. எனவே உடனடியாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • கிராம மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    கீழக்கரை

    பெரியபட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 77 ஏக்கரில் அமைந்துள்ள கப்பல்லாற்று நீர்பிடிப்பு பகுதி, 2,200 மீட்டர் நீளம் உள்ள மொரவாய்கால் ஓடை பகுதியை அப்பகுதி தென்னை விவசாய மக்களுக்காகவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், அப்பகுதியை பராமரிப்பு செய்வதற்கும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பெரியபட்டினம் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள் ஆதலால் பெரியபட்டினம் கடற்கரையில் மீன்பிடி தளம் கட்டுவதற்கு ராமநாதபுரம் உதவி இயக்குநர் (மீன்வளத்துறை தெற்கு) பரிந்துரை செய்ய வேண்டும்.

    தெற்கு புதுகுடியிருப்பு மற்றும் குருத்தமண்குண்டு ஆகிய கிராமங்களில் உள்ள பொது மயானத்திற்கு பாதை வசதி செய்ய இடம் தேர்வு செய்து தர கீழக்கரை வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    தங்கையா நகர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் அமைத்து தர வேண்டும். காயிதேமில்லத் நகர் கிழக்கு பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியை அகற்றி புதிய மின் கம்பி இணைப்பு அமைக்க வேண்டும். தெற்கு புதுகுடியிருப்பு கிராமம் செல்லும் வழியிலும், குறுத்த மண்குண்டு பகுதிக்கு தெற்கு புதுகுடியிருப்பு சாலையிலிருந்து தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

    பெரியபட்டினம் ஊராட்சி காயிதேமில்லத் நகர் மற்றும் மிலால் நகர் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கவுன்சிலர் பைரோஸ்கான் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

    ×