ஒடிசா: மயானத்தில் புதைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த பெண்

வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒடிசா: மயானத்தில் புதைப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் உயிருடன் எழுந்த பெண்
Published on

ஒடிசா:

ஒடிசா மாநிலத்தில் இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புஜ்ஜி ஆம்மா (52) என்ற பெண் புதைப்பதற்கு முன்பு கண்விழித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிப்ரவரி 1-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புஜ்ஜி, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலையில், புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மயானத்தில் புதைப்பதற்கு முன்பு அவர் எழுந்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அதே வாகனத்திலேயே மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com