search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள் மூடல்"

    • பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது.
    • மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    லண்டன்:

    பிரிட்டனில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ளன.

    இந்தநிலையில் அங்கு பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனையடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    எனவே கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வேறு இடங்களில் அப்பள்ளிகள் செயல்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மந்திரி கில்லியன் கீகன் கூறினார்.

    • கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி
    • பள்ளி உரிமையாளர்கள் பாதுகாப்பு கேட்டு மனு

    வேலூர்:

    தமிழ்நாடு நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளி அமைப்பு சார்பில் இன்று காலை மாநில அமைப்பு செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு போலீசார் தாக்கப்பட்டதற்கும் மாணவியின் இறப்பிற்கும் ஆழ்ந்த அனுதாபங்களை எங்கள் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தி.மு‌.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளியை சூறையாடியும் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து தீய சக்திகள் ஒன்று கூடி கட்டவிழ்த்து நடத்திய வன்முறை சம்பவங்கள் மனதை பதை பதைக்க வைக்கிறது.

    தமிழ்நாட்டில் இதுபோன்ற தாக்குதல் நடத்தும் தீய சக்திகளுக்கு எதிராக குற்றம் பாயும் வண்ணம் சட்டங்கள் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் மற்றும் பள்ளி சொத்துகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் 89 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 21 சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகள் உட்பட 175 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் இன்று 40 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    • தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
    • மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆக உள்ளது.

    இம்பால் :

    மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது.

    மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

    ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூரில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    திருவண்ணாமலை, கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    ×