search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airports closed"

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுவதையடுத்து காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed
    ஸ்ரீநகர்:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இதையடுத்து காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்ககூடாது என கூறப்பட்டது. அத்துடன், காஷ்மீரின் ஸ்ரீநகர், லே, பதான்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



    இதற்கிடையே பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையடுத்து  பாதுகாப்பு காரணமாக காஷ்மீரின் எல்லையோரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காஷ்மீரின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. இதை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

    இதேபோன்று பாகிஸ்தானிலும் லாகூர், முல்தான், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்நாட்டு, சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால்  சர்வதேச விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IndianAirForce #KashmirSchoolsAirportsClosed

    ×