அருணாசல பிரதேசத்தில் 600 அரசு பள்ளிகள் மூடல்

மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
அருணாசல பிரதேசத்தில் 600 அரசு பள்ளிகள் மூடல்
Published on

இடாநகர்:

அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.

அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com