search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மனித உரிமை ஆணையம்"

    • இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் 19-வது நாளாக நீடித்து வருகிறது.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுக்கும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மத்திய விளையாட்டுத்துறை, இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.
    • ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி. இவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தி வந்தார்.

    இதனை அனுமதியின்றி நடத்தியதாகவும், அங்கு தங்கி உள்ள பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், அடைத்து வைத்து துன்புறுத்தல், பலர் மாயமானது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

    இது தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா, ஊழியர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர்.

    இதில் வயது முதிர்வு காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சுனில் குமார் மீனா தலைமையில் மோனியோ உப்பல், சந்தோஷ் குமார், பிஜூவ் ஆகியோர் அடங்கிய 4 பேர் குழுவினர் இன்று விக்கிரவாண்டி வந்தனர்.

    அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கலெக்டர் பழனி உடன் இருந்தார்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய மேற்கொண்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.


    நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர்.

    அதே வேளையில் மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு குழுவினர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களுக்கு மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

    விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித விசாரணை ஆணையத்தின் 4 அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த தூத்துக்குடி வர உள்ளனர். #ThoothukudiShooting #NHRC
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு நேற்று அரசாரணை பிறப்பித்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என டிஜிபி இன்று அறிவித்துள்ளார்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை எனவும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



    இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் 4 அதிகாரிகள் தூத்துக்குடி வருகை தந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரடியாக விசாரணை நடத்த உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை சந்தித்து அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் கவர்னர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். #SterliteProtest #Kamalhaasan
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டுள்ளதாவது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மையம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இரண்டு பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் பொதுமக்கள் தெரிவித்த புகார்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு குறித்து உரிய விசாரணை நடத்தவும் அதில் கோரப்பட்டுள்ளது. 
    ×