search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணியாளர்"

    • கமுதியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று பேரூ–ராட்சி துப்புரவு பணியாளர் கள், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 200 பேருக்கு பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    5 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டன. மேலும் அரசு மருத்து–வமனையில் நோயாளிக–ளுக்கு பழம் மற்றும் பிரட் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச் சியில், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு–தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், நகரச் செயலாளர் பாலமுரு–கன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, காங்கிரஸ் கட்சியின் வடக்கு வட்டார தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, மாரிமுத்து,

    உதயகுமார், முதுகுளத் தூர் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள் சத்திேயந் திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் உள்பட ஏராளமான துப்புரவு பணியாளர்கள் திரண்டனர். மாநில தலைவர் விஜய குமார் தலைமையில் கோ ரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்ற அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களை அரசு ஊழியராக அங்கீகரிக்க வேண்டும்.

    மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவ லர்களுக்கு அரசா ணைப்படி ஊதியம் கொடுக்க வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஒரே மாதிரியான பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். வார விடுமுறை, அரசு விடுமு றையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

    • காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • பகலில் கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார்.
    • மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜமகேந்திராவரத்தை சேர்ந்தவர் ஆர்ஜித பாலகிருஷ்ணா. இவர் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    மும்பையில் நடந்த தேசிய சீனியர்ஸ் மற்றும் மாஸ்டர்ஸ் கிளாசிக் வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    பகலில், ராஜ மகேந்திர வரம் நகரில் உள்ள கழிவு நீர் கால்வாய்களை சுத்தம் செய்கிறார். மாலையில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெறுகிறார். துப்புரவு பணியாளர் ஆர்ஜித பாலகிருஷ்ணா மாவட்ட மற்றும் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.

    "நான் வேலைக்குச் செல்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறேன். நான் ஒப்பந்தத் தொழிலாளி, மாதச் சம்பளம் ரூ.15,000. வலுதூக்கும் போட்டி ஒரு விலையுயர்ந்த விளையாட்டு. என்னிடம் ஒரு பைசா கூட மீதம் இல்லாத நாட்கள் உண்டு.

    ஆனால் எனது நண்பர்கள் கடினமான காலங்களில் எனக்கு ஆதரவளித்துள்ளனர். சுமார் 22,000 ரூபாய்க்கு ஆடைகளை வாங்குவதற்கு அவர்கள் எனக்கு கடன் கொடுத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியவில்லை எனது தந்தை கூலி தொழிலாளி, எனது சகோதரர் ஆட்டோ ஓட்டுகிறார். என் மனைவி, மகன் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயை நான் ஆதரிக்க வேண்டும். இதனால், என்னால் சத்தான உணவை உட்கொள்ள முடியவில்லை.

    துப்புரவு பணிகளை முடித்துவிட்டு ஜிம்மிற்கு சென்று பயிற்சி எடுத்து வருகிறேன். சாய் பவர் ஜிம்மில் எனது பயிற்சியாளர் சத்யநாராயணா மற்றும் வாலிபால் பயிற்சியாளர் சதீஷ் ஆகியோர் எனக்கு ஆதரவாக நின்று நிதி சிக்கல்களை சமாளிக்க உதவினார்கள்.

    மாநில அரசு நிதியுதவி அளித்து விளையாட்டில் அதிக இலக்குகளை அடைய உதவ வேண்டும் என்றார்.

    • பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
    • வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசுகையில் வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை சீரமைப்பு பணிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக தலைவர் உறுதிகூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரன் (பொறுப்பு) நன்றி கூறினார்.

    • அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
    • 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்

    அவினாசி :

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இவர்களுக்கான புத்தாடைகள் எச்.பி., பங்க் உரிமையாளர் ராஜ் மற்றும் அவரது துணைவியார் கீதா ராஜ் வழங்கினர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.

    • 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.

    இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அனுப்பர்பாளையம் :

    திருமுருகன்பூண்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருமுருகன் பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்களை ஒன்று திரட்டி இன்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி நடராஜ், புறநகர் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் நகராட்சி ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எதிர்வரும் மாதங்களில் 5-ந்தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    • போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக துப்புரவு பணியாளர் மீது புகார் வந்துள்ளது.
    • ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர் தான் வைத்திருந்த மதுபாட்டிலால் ஊராட்சி மன்ற தலைவர் தலையில் அடித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாமிநாதன். இவர் தினைகுளம் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகனுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர் சங்கிலி வந்தார். அவரிடம் சாமிநாதன், போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக உன் மீது புகார் வந்துள்ளது. இனி அது போல் செயல்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலி தான் வைத்திருந்த மதுபாட்டிலால் சாமிநாதனின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சங்கிலி மதுபாட்டிலால் சாமிநாதனை குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி சங்கிலியை கைது செய்தனர்.  

    ×