அவினாசி பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை

அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார்
 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்ட காட்சி.
 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்ட காட்சி.
Published on

அவினாசி :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவினாசி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அவினாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை தாங்கி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 170 பேருக்கு சீருடை மற்றும் இனிப்பு வழங்கினார். நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகி ரவிக்குமார், துளிர்கள் அமைப்பு ஸ்ரீகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இவர்களுக்கான புத்தாடைகள் எச்.பி., பங்க் உரிமையாளர் ராஜ் மற்றும் அவரது துணைவியார் கீதா ராஜ் வழங்கினர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com