search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - துப்புரவு பணியாளர் கைது
    X
    கோப்புபடம்

    உடுமலை அருகே ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் - துப்புரவு பணியாளர் கைது

    • போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக துப்புரவு பணியாளர் மீது புகார் வந்துள்ளது.
    • ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர் தான் வைத்திருந்த மதுபாட்டிலால் ஊராட்சி மன்ற தலைவர் தலையில் அடித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாமிநாதன். இவர் தினைகுளம் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகனுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர் சங்கிலி வந்தார். அவரிடம் சாமிநாதன், போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக உன் மீது புகார் வந்துள்ளது. இனி அது போல் செயல்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலி தான் வைத்திருந்த மதுபாட்டிலால் சாமிநாதனின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சங்கிலி மதுபாட்டிலால் சாமிநாதனை குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி சங்கிலியை கைது செய்தனர்.

    Next Story
    ×