search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோயில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.
    • மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குள்ளாயூர் கிராமத்தில் அருளாளப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருளாளப்பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணிக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமையான கோவிலாகும்.

    ஒவ்வொரு அணைப்பகுதியிலும் ஒரு கோவில் என்ற சோழர்கால கோட்பாட்டின்படி காளியாத்தாள் கோவில் அணையை மையப்படுத்தி நொய்யல் ஆற்றின் தென்புறம் சிவன்கோவிலும், வடபுரம் பெருமாள் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு சோழ மன்னர்கள் தானம் வழங்கிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசை பூஜை மதியம் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் நடைபெறுகிறது. அன்னதானமும் நடக்கிறது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புரட்டாசி அமாவாசை தினத்தன்று பந்தசேவை பகல் 12 மணிக்கு மிக சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு தொடர்ச்சியாக 10 சனிக்கிழமைகளில் வந்து மனதார வேண்டுபவர்களுக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நீண்டநாள் நம்பிக்கையாக இருக்கிறது.

    • பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக மிளகாயை யாகத்தில் இட்டனர்

    அரியலூர்

    அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சன்னதியிலுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி அமாவாசயை முன்னிட்டு நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் கொண்டு வந்துள்ள புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது.
    • தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் சாலையோரம், கோயில் வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், பனை விதைகளைச் சேகரித்து, பனை விதைகள் விதைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தமிழா்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் 10,000 பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.

    இந்த பணியை துணைவேந்தா் திருவள்ளு வன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    தமிழ் பல்கலைக் கழகத்தில் 824 ஏக்கா் இடம் உள்ளது. இதில் பல வகையான மரங்கள் இருந்தாலும், பனை மரங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    இதை அதிகப்படுத்துவதற்காக 10,000 பனை விதைகளை விதைக்கிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில், பனை விதைகள் மண்ணில் புதைந்து வளருவதற்கு வாய்ப்பாக அமையும்.

    தேவையான பனை விதைகளை கிரீன் நீடா சுற்றுச்சூழல் இயக்கம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வில் கிரீன் நீடா சுற்றுச்சூழல்இயக்கத் தலைமை ஒருங்கிணை ப்பாளா் ராஜவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜானகிராமன், சிலம்பரசன், பசுமை எட்வின், சண்முகவடிவேல், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் முகமது ரபீக், பசுமை இயக்க ஆா்வலா்கள் தஞ்சாவூா் முரளி, நீடாமங்கலம் உஷா, ஆடிட்டா் சக்தி பெருமாள், தமிழ்ப்பல்கலைக்கழகச் சுவடிப் புல முதன்மையா் கண்ணன், ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் இந்து, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • மேயர் மகேஷ் தகவல்
    • 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில்கள் திருப்பணிக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் கோவில்கள் திருப்பணிகள் செய்வதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. 100 கோவில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில்களில் புரணைப்பு பணிகளை மேற் கொள்வது தொடர்பாக நாகர்கோவில் மேயரும் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான மகேஷ் கிழக்கு மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் உள்ள பல் வேறு கோவில்களில் நடை பெற்று வரும் பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் இன்று தெங்கம் புதூர் பகுதியில் உள்ள கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    தெங்கம் புதூர் தானு லிங்க சுவாமி கோவில், தெங்கம்புதூர் மறுகால் தலை கண்டம் சாஸ்தா கோயில்களில் அவர் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

    குமரி மாவட்டத்தில் கோயில்களை சீரமைக்க ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் கோவில்களில் புரணைப்ப பணிகள் நடந்து வருகிறது. தெங்கம் புதூர் தானூலிங்கசாமி கோவிலில் ரூ.20 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதே போல் மறுகால் தலை கண்டன் சாஸ்தா கோவிலில்ரூ. 15 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.

    கோவில்களில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்ட பிறகு புரணைப்பு பணிகள் அனைத்தும் நடைபெறும். இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×