search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலிப்படை"

    சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்,ராதா. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவரது மனைவி சுமதிதனது மகனுடன் அதே பகுதியில் வசித்துவந்தார்.சரவணனுக்கும் சுமதிக்குமிடையே வீட்டு மனை பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சரவணன் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் தனது அடியாட்கள் 10-க்கும் மேற்பட்டோரை அனுப்பி தடி, கத்தி, கடப்பாறை, சுத்தி ஆகிய ஆயுதங்களை கொண்டு சுமதியின் வீட்டு சுவரை இடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுமதி இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும்போலீசார் சுமதி வீட்டில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை வைத்துவீட்டினை இடித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.

    இதற்கிடையில்கூலிப் படையாக செயல்பட்ட பண்ருட்டி போலீஸ் லைன் 3- வது தெரு ரவி மகன் கோகுல் (வயது 19) ,தேவராஜ் மகன்பாலாஜி என்ற அருண்பாலாஜி (வயது 26),ராதாகிருஷ்ணன்மகன் பாலாஜி (வயது 27),பாலமுருகன் மகன்மணிகண்டன் (வயது 20) ஆகி ய 4பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
    • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னி யாகுமரி மாவ ட்டம் மேக்காமண்டபம் பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது 2½ வயது மகன் ஆத்வீக், கடமலக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரி.கேஜி. படித்து வருகிறான். இவன் நேற்று பள்ளி வாகனத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது.

    குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனை அவனது தந்தை விபின் பிரியன் தான் கூலிப்படை மூலம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஈத்தா மொழி பகுதியில் ஒரு வீட்டில் சிறுவன் ஆத்வீக் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டின் குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆத்வீக்கை மீட்டனர்.

    இது தொடர்பாக அவனது தாயார் பிரியா அளித்த புகாரின் பேரில், பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித், சரண்,முகேஷ் உள்பட 17 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147,148, 294(பி),341,366 மற்றும் 506 (2) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களை பிடிக்க தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் 3-தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர்
    • கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி சுப்புராய நகரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 வயது மகனும் உள்ளனர். இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடையை முடிவிட்டு வீடு திரும்பிய இவரை கடந்த 27-ந்தேதி இரவு மர்மக்கும்பல் வழிமறித்து கத்தியால் சராமாரியாக வெட்டினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். 

    மேலும், அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரித்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மகும்பலை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.   இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மளிகை கடைக்காரருக்கும் சுந்தரமூர்த்திக்கும் முன் விரோதம் இருந்தது. மளிகை கடைக் காரரின் மனைவிக்கு சுந்தரமூர்த்தி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை வெளியில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மளிகை கடைக்காரரின் மனைவி கடந்த ஆண்டு இறந்து போனார். இதனால் ஆத்திரமடைந்த மளிகை கடைக்காரர் கூலிப் படையை வைத்து ஸ்டூடியோ உரிமையாளர் சுந்தரமூர்த்தியை கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மளிகை கடைக்காரரை பிடித்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி கூலிப்படையை சேர்ந்த மர்மக்கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் அனைவரும் இன்று மாலை அல்லது நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

    • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

    ×