search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே கூலிப்படையை ஏவி மகனை கடத்திய தந்தை உள்பட 17 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
    X

    தக்கலை அருகே கூலிப்படையை ஏவி மகனை கடத்திய தந்தை உள்பட 17 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

    • தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
    • 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னி யாகுமரி மாவ ட்டம் மேக்காமண்டபம் பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது 2½ வயது மகன் ஆத்வீக், கடமலக்குன்று பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிரி.கேஜி. படித்து வருகிறான். இவன் நேற்று பள்ளி வாகனத்தில் சென்ற போது, காரில் வந்த கும்பல் வழிமறித்து கடத்திச் சென்றது.

    குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனை அவனது தந்தை விபின் பிரியன் தான் கூலிப்படை மூலம் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஈத்தா மொழி பகுதியில் ஒரு வீட்டில் சிறுவன் ஆத்வீக் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த வீட்டின் குளியலறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆத்வீக்கை மீட்டனர்.

    இது தொடர்பாக அவனது தாயார் பிரியா அளித்த புகாரின் பேரில், பிபின் பிரியன், அவரது தாயார் பூமதி, சகோதரி கமலா பிரித்தி, நண்பர் அஜித், சரண்,முகேஷ் உள்பட 17 பேர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 147,148, 294(பி),341,366 மற்றும் 506 (2) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதால் அவர்களை பிடிக்க தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் 3-தனிப்படையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×