search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎஸ்"

    • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
    • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

    • தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ் நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்பி சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ்-க்கு, விழுப்புரம் எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
    • உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.

    இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார். 

    உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
    உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மனைவியுடனான சண்டை காரணமாகவே விஷம் குடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நிலை தேறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஸ் பேசிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    உறவினர்கள் வந்து ஒன்று சேர்த்து வைத்தாலும், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் மனம் உடைந்த தாஸ் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    குஜராத் கலவரத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம் சாட்டி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாட், 22 ஆண்டுகால பழைய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். #SanjivBhatt
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் பாட் 1996-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடி முக்கிய உடந்தையாக இருந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    தொடர்ந்து பணிக்கு வராத காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பதவியில் இருந்து சஞ்சய் பாட் நீக்கப்பட்டார். இந்நிலையில், 22 ஆண்டுகால பழைய வழக்கில் பாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பாட் பனஸ்கந்தா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். வழக்கில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, 1996-இல் ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பாட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் போலீஸார், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் இந்த வழக்கில் தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்று விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்தது. மேலும், ராஜ்புரோஹித் அவரது இல்லத்தில் இருந்து பனஸ்கந்தா போலீஸாரால் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதற்கிடையில், ராஜ்புரோஹித் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக குஜராத் ஐகோர்ட் இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியும், விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த விசாரணையில் சஞ்சீவ் பாட்டுக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் உட்பட பலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐடியின் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.  
    உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சூர்ய குமார் சுக்லா, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அவர் கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற இருக்கும் சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுக்லா எழுதியுள்ள கடிதத்தில், “பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என கூறியுள்ளார்.

    ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் ஓ.பி.சவுத்தரி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள அம்மாநில சட்டசபை தேர்தலில் அவர் அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ×