search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனந்த் மஹிந்திரா"

    • எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்
    • ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது

    3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் வீடியோவை தனது X பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

    அதில், "புதிய தொழிட்நுட்பங்களை எப்போதும் ஆதரிப்பவன் நான். ஆனாலும் 3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி தயாரிக்கும் இந்த வீடியோவை பார்க்கையில், எனக்குள் பலவித உணர்வுகள் தோன்றுகின்றன. எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை, கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், "ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    • சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
    • சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது.

    தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.

    இந்நிலையில் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் குழந்தை ஒன்று உணவை போன் என தவறாக நினைத்து காதில் வைக்கும் காட்சி உள்ளது.

    டிஜிட்டல் யுகத்தில் நமது முன்னுரிமைகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது என்பதை அப்பட்டமாக நினைவூட்டுவதாகவும், நமது நடத்தை மற்றும் வளர்ச்சியில் இத்தகைய சாதனங்களின் தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    • சிறுவனின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.

    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரை 700 ரூபாய்க்கு வாங்க முடியுமா? என்று சிறுவன் ஒருவன் தந்தையிடம் கேட்கும் க்யூட்டான பேச்சு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.

    ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறுவனின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் காரை விற்கவேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கை ஏற்றுக் கொண்டால் ரொம்ப சீக்கிரமாகவே நாங்கள் திவாலாகிவிடுவோம் என கூறியுள்ளார்.

    • பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
    • ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது நம் நாட்டில் அடிக்கடி நடக்கிறது.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிரந்திரா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். தனது 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்காக டிரெண்டிங் தலைப்புகள் மற்றும் ஈர்க்கும் கதைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

    இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிப்லியா ரசோடா கிராமத்தில் உள்ள ராஜ்கர் என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 5 வயது சிறுமியின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த சம்பவம் அதிக கவனம் பெறவில்லை என்றாலும் கூட, சிறுமியின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே இருண்டதாகி இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இந்த சம்பவம் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு போன்ற கவனத்தை ஈர்த்திருக்காது. ஆனால் இந்த குழந்தையின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே மறைந்திருக்கும்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சில பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை, நமது நாட்டின் பேரிடர் மீட்புப் படைகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

    நம் ராணுவ வீரர்களைப் போலவே, அவர்களும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க பகலும், இரவுமாக போராடுகிறார்கள்" என்றார்.

    இருப்பினும், இன்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமி சில மணிநேரங்களுக்குப் பிறகு, போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை வயலில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் மஹி என்கிற 5 வயது சிறுமி விழுந்தார். அவர் 22 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிர முயற்சிக்கு பிறகு இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு, பச்சோரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    பின்னர் 70 கிமீ தொலைவில் உள்ள போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார் என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் வாடியா தெரிவித்தார்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    • மும்பையில் இந்திய நுழைவாயில் அருகே குப்பைகள் கொட்டப்படுவது போன்ற வீடியோ பதிவு.
    • இந்த வீடியோ தனக்கு வலியை தருகிறது என ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

    தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர். சாதனைகள் செய்யும் நபர்களின் வீடியோ, உத்வேகம் அளிக்கும் வீடியோ போன்றவற்றை ஷேர் செய்து உலகிற்கு அதை வெளிக்காட்டும் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி இதுபோன்று பல்வேறு வீடியோக்களை ஷேர் செய்வதால், இவரை டுவிட்டரில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் ஒருவர் பதிவிட்ட வீடியோ, இவரை காயப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கியமான நகரம் மும்பை. மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயில் அருகே இரு நபர்கள், சாக்குப்பைகளில் உள்ள குப்பைகளை தண்ணீரில் கொட்டுவது போன்று அந்த வீடியோ காட்சி உள்ளது.

    அந்த வீடியோவுடன் மும்பையின் சிறந்த குடிமகன்கள். இந்திய நுழைவாயில் பகுதியில் காலை நேரத்தில் எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோதான் தன்னை காயப்படுத்தியதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

    மேலும், பொதுமக்களின் அணுகுமுறை மாற்றம் அடையாவிட்டால், நகரின் சிறந்த வாழ்க்கைக்கு மனித அளவிலான எந்த கட்டமைப்பு முன்னேற்றமும் முன்னேற்றத்தை கொடுக்காது எனத் தெரிவித்ததுடன், மும்பை போலீஸ் அதிகாரி, மாநகர கவுன்சிலர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

    இந்தியாவை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அரசு "தூய்மை இந்தியா" திட்டத்தை அறிமுகப்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் இதற்காக செலவிட்டு வருகிறது. அப்படி இருந்தும் இதுபோன்று குப்பைகள் கொட்டப்பட்டுதான் வருகிறது.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார்.
    • ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

    இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.

    பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.

    இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல், மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.

    பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார்.
    • 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.

    புதிய கார் வாங்க வேண்டும் என்பது சிலருக்கு கனவாக இருக்கும். அந்த கனவு நிறைவேறிய மகிழ்ச்சியை ஆனந்தமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள டுவிட்டில், ஒரு வீடியோ பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு குடும்பத்தினர் புதிய கார் வாங்கிய மகிழ்ச்சியை ஷோரூமிலேயே நடனமாடி கொண்டாடிய காட்சிகள் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதன்படி தினாநாத்சாகு என்பவர் தனது குடும்பத்தினருடன் கார் டெலிவரி பெற சென்றுள்ளார். அவரது 23-வது திருமண நாளன்று கார் டெலிவரி கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த சாகு தனது மனைவி, மகன், மகளுடன் சேர்ந்து அந்த கார் முன்பு நடனமாடி மகிழ்கிறார்கள்.

    இந்த வீடியோவை ஆட்டோ மொபைல் டீலர்கள் சங்க தலைவர் டுவிட் செய்ய அதனை ஆனந்த் மஹிந்திரா ரீ-டுவிட் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய தலைவர்கள் 15 பேரின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து அசத்திய நூர்ஜஹான் என்ற சிறுமியை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார். இது எப்படி சாத்தியமாகும் என்றும் அவர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "இது எப்படி சாத்தியமாகும். இதன் மூலம் இவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலையை விட மேலானது- இது அசாத்தியமான ஒன்று! சிறுமி வசிக்கும் இடம் அருகில் உள்ள யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? இது உண்மை என்றால், அவள் கண்டிப்பாக ஊக்குவிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவித்தொகை மற்றும் பிற வகையான ஆதரவை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவிய ஷு டாக்டர் நர்ஸி ராமின், மேலாண்மை திறனை கண்டு வியந்த ஆனந்த் மஹிந்திரா புது கடையை அமைத்து கொடுத்துள்ளார். #AnandMahindra
    சண்டிகர்:

    சமீபத்தில் அரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரின் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கும் இந்த படம் வந்திருந்தது. இந்த படத்தை பார்த்த ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியத்தில் மூழ்கினார். காரணம், அந்த புகைப்படத்தில் தொழிலாளி  அவரின் கடையில் எழுதியிருந்த வசனம்.

    ‘செருப்புகளின் காயங்களை போக்கும் மருத்துவமனை .. டாக்டர் நர்ஸி ராம்’. இதை பார்த்த ஆனந்த் இந்தப் படத்தில் இருக்கும் தொழிலாளி இந்திய மேலாண்மை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பாடம் நடத்துவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டு,  அவரின் முழு விவரம் குறித்து யாருக்கேனும் தெரிந்திருந்தால் தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கூறியிருந்தார்.



    சில மாத தேடலுக்கு பின்னர் செருப்பு தொழிலாளி நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.பின்பு அவர்கள் நரசிம்மனிடம்  பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ  உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பணியிடத்தை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, அந்த பணியிடத்தின் வடிவமைப்பை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு உதவியதற்காக பலரும் ஆனந்த் மஹிந்திராவுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
    ×