search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா
    X

    பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக வழங்கிய ஆனந்த் மஹிந்திரா

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார்.
    • ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஆர்.பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    உலகக்கோப்பை செஸ் போட்டி அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் - இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

    இருவருக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று போட்டிகளிலும் டிரா ஆன நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இளம் கிராண்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வியை தழுவினார்.

    பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்றார். இது செஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பாராட்டப்படுகிறது.

    இந்நிலையில், பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கார் ஒன்றை பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு பரிசளிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    குழந்தைகளுக்கு வீடியோ கேம்களை கொடுக்காமல், மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் பெற்றோர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். உங்களைப் போன்ற பலர் பிரக்ஞானந்தாவுக்கு ஒரு தார் (Thar) பரிசளிக்குமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எனக்கு வேறு யோசனை இருக்கிறது.

    பிரக்ஞானந்தாவின் பெற்றோர், நாகலட்சுமி மற்றும் ரமேஷ்பாபு ஆகியோருக்கு ஒரு எக்ஸ்யூவி 4 ஓஇவியை பரிசளிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×