search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணு ஆயுதங்கள்"

    அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை.

    இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியது.

    அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத  நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.



    இந்நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும் ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    நாட்டுக்கு நன்மை தராத அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஈரான் அரசு முடிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் ஆளும்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். #Khamenei #nucleardeal
    டெஹ்ரான்:

    மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் புகார் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கச் செய்தது. 

    ஆனால், ஈரான், தங்களிடம் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இருந்தபோதிலும், அணு ஆயுதங்கள் எதையும் தயாரிக்கவில்லை என்றது. 

    இருப்பினும், உலக நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டைன், சீனா, பிரான்ஸ், ரஷியா, ஜெர்மனி) விதித்த பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அணு ஆயுதப் பரவல் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக, ஈரான் அறிவித்தது. இதையடுத்து, ஈரானுக்கும், வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் 14-7-2015 அன்று அணு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

    ஈரானில் யுரேனியத்தை செறியூட்டி, அணு குண்டாக மாற்ற பயன்படும் ‘சென்ட்ரிபியூஸ்’ எண்ணிக்கை மூன்றில் இரு பங்குக்கும் கீழாக குறைக்கப்படும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3.67 சதவீதத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. 

    இந்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக ஈரானில் சேமித்து வைக்கப்பட்டுள்ள யுரேனியத்தை கப்பலில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் ஈரான் சம்மதித்தது. அதன்படி, அதிகப்படியான இருப்பில் இருந்த யுரேனியம் கப்பல்களில் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதைதொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்ட பல்வேறு தடைகளை அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகள் விலக்கி கொண்டன.

    ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு பின்னரும் ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக சமீபத்தில் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு வீடியோ ஆதாரத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதைதொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்திருப்பதால் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஈரான் சந்தித்து  வரும் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவு, விலைவாசி உயர்வு தொடர்பாக அதிபரின் பதில் திருப்தியளிக்காததால்  நீதி விசாரணைக்கு பாராளுமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் பேசிய ஆளும்கட்சி தலைவர் அயாத்துல்லா கமேனி, ‘நமது நாட்டின் நன்மைக்கு உதவாவிட்டால், அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற நாம் தயாராக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். #Khamenei #nucleardeal 
    வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

    இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அதில் மெத்தனம் காட்டியது வடகொரியா.

    இந்நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்து ஆறு வார காலமாகியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழிக்கவில்லை.

    வடகொரியா அரசு இன்னும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. கிம் ஜாங் அன் கொடுத்த வாக்குறுதியால் அந்த பகுதியில் நிலவிய பதட்டம் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #MikePompeo
    இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் இருப்பதாக சர்வதேச அமைதி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    ஸ்டாக்கோல்ம்:

    ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு மைய நிறுவனம் உலக நாடுகளில் உள்ள அணுஆயுதங்கள் குறித்த பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவை விட பாகிஸ்தானிடம் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது.

    அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தங்கள் அணு ஆயுதங்களை பெருக்கி வருகின்றன. தரைவழி, கடல்வழி மற்றும் விண்வெளியில் தாக்கும் திறனுடைய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் வைத்துள்ளன.

    பாகிஸ்தானில் இந்த ஆண்டு 140 முதல் 150 அணு ஆயுதங்கள் உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் இந்தியாவில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    2018-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் வடகொரியாவில் மொத்தம் 14,465 அணு ஆயுதங்கள் இருந்தன. 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் 14,935 ஏவுகணைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2010-ம் ஆண்டில் அமெரிக்கா, ரஷியாவில் அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால் தான் அணு ஆயுதம் உற்பத்தி குறைந்தது என்றும் ஸ்டாக்கோல்ம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
    வடகொரியா நாடு அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    வாஷிங்டன்:

    தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

    கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



    இதற்கிடையே, ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடக்கவுள்ளது

    இந்நிலையில், வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மைக் பாம்ப்யோ கூறுகையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    ×