அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்கிறோம்-புதின் மிரட்டல்

ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.
அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருக்கிறோம்-புதின் மிரட்டல்
Published on

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் பொதுமக்கள், வீரர்கள் பலர் கொல்லப்பட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி,இங்கிலாந்து போன்ற சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆயுத உதவியும் செய்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஷியா மீது உக்ரைன் திடீர் தாக்குதல் நடத்தியது.

இதில் ஜெர்மனி நாட்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரஷியா மீது தாக்குதல் நடத்த ஜெர்மனியின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தி இருப்பது ஆபத்தான நடவடிக்கை ஆகும். மேற்கு நாடுகளை தாக்க நீண்ட தொலைவு சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை வேறு சில நாடுகளுக்கு ரஷியா வழங்கும்.

எங்களுடைய நாட்டின் இயைாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால் ரஷியா தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து வழிகளையும் பின்பற்றும். அணு ஆயுதங்களை பயன் படுத்தவும் தயாராக இருக்கிறோம். ரஷியாவை எதிரி என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டாம்.

எதார்த்தத்தை சமாளிக்க வேண்டும் என நாங்கள் எப்போதும் நம்புகிறோம். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். தலிபான் அரசுடன் நாங்கள் உறவுகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு புதின் கூறினார்.

2003-ம் ஆண்டு தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என ரஷியா அறிவித்தது. தற்போது ரஷியா இந்த நிலைமாற்றத்தில் மனம் மாறி உள்ளது.

கடந்த வாரம் ரஷியா வெளியுறவு துறை மந்திரி செர்ஜிலால் ரோஸ் கூறும் போது தலிபான்களை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாஸ்கோ திட்டமிட்டுள்ளது என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com