என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சொத்துமதிப்பு"
- ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது
- மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பணக்கார வணிக குடும்பங்களின் சொத்துமதிப்பை பட்டியலிட்டு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.25.75 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானியின் குடும்பம் முதல் இடத்தில் உள்ளது. புனேவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனத்தை இயக்கி வரும் பஜாஜ் குடும்பம், ரூ.7.13 லட்சம் கோடி சொத்துமதிப்புடன் அம்பானி குடும்பத்துக்கு அடுத்த பெரிய வணிக குடும்பமாக உருவெடுத்துள்ளது.
குமார் மங்கலம் பிர்லா குடும்பம் ₹5.39 லட்சம் கோடி மதிப்பீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று குடும்பங்களின் மொத்த மதிப்பான ரூ.38.27 லட்சம் கோடி என்பது சிங்கப்பூரில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாகும் என்ற மலைக்கவைக்கும் உண்மையும் தெரியவந்துள்ளது.
- முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும்
- சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்கிறது
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று நடைபெறும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் முன்னணி இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனப் பெருமுதலாளிகள் பங்கேற்கின்றனர். பாடகி கிம் கர்தாஷியன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், முன்னாள் இங்கிலாந்து பிரதமர்களும் இதில் அடங்குவர்.
கடந்த நான்கு மாதங்களாக நடந்து வந்த நட்சத்திரங்கள் நிறைந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 29 வயதான ஆனந்த் அம்பானி, மருந்து அதிபர்களான வீரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை மணக்கவுள்ளார்.
ஆரம்பம் முதலே ஆடம்பரமாக நடைபெறும் அம்பானி வீட்டுத் திருமணம் குறித்து இந்தியாவின் அதிகம் உள்ள நடுத்தர மற்றும் ஏழை வர்க்க மக்களிடையே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் இருப்பதனால் அம்பானி கண்மண் தெரியாமல் காசை வாரி இரைத்து வருவதாக மக்கள் அங்கலாய்த்தனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ஆனந்த் அம்பானியின் மொத்த கல்யாண செலவு எவ்வளவு என்ற தகவல் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, ஏறக்குறைய ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை அம்பானி தனது மகனின் திருமணத்துக்காக செலவிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.65 லட்சம் கோடியாகும். அதில் மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவு செய்துள்ள தொகை அவரின் மொத்த சொத்துமதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்தியாவில் சராசரி குடும்பம் திருமணத்துக்கு செலவு செய்வதை விட அம்பானி குறைவாகவே செலவு செய்துள்ளார். சராசரி இந்திய குடும்பம் ஒன்று தங்களது சொத்துமதிப்பில் 10 முதல் 15 சதவீதம் வரை திருமணத்துக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.
- விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
- போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.
இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
- இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.
இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-
தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க.
பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்