என் மலர்
நீங்கள் தேடியது "4 பேர் பலி"
- சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.
- கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் கருணாநிதி வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஊராட்சி மாநில நிதிக்குழு மானியத் திட்டம் மற்றும் 15-வது மத்திய நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கி மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 53 ஆயிரத்து 615 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் மாநில நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் வரப்பெற்றுள்ள ரூ. 2 கோடியே 48 லட்சம் நிதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து ஒப்புதல் அளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறுகையில், தருமபுரி-அரூர் இடையே புதிய 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மழை நீர் வடிகால் முறையாக அமைக்கப்படுகிறதா? என்பதும் தெரியவில்லை.
மேலும் சிறுபாலம் அமைக்கும் பணிகளில் அனுமதிக்கப்பட்ட கம்பிகள் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்று தொடர்ந்து 3 முறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக இந்த சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி-அரூர் இடையே 4 வழிச்சாலை பணிகள் ஆய்வு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மீண்டும் கடிதம் அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.
- அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பீதி
- வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.
கன்னியாகுமரி :
காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை 4 வழிச் சாலை பணிகள் முடிந்து உள்ளது.
இதனால் காவல்கிணறில் இருந்து நாகர்கோவில் வரும் பல கனரக வாகனங்கள் அனைத்தும் தற்போது இந்த வழியாகவே வருகிறது.
அதிக பாரம் ஏற்றியபடி வரும் இந்த வாகனங்கள் சாலையில் அதிவேகமாக செல்கிறது. இவ்வாறு செல்லும் போது அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதற்கிடையே இந்த 4 வழிச்சாலையை பயன்படுத்தும் கார், வேன் மற்றும் பஸ்கள் வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.
இதுபோல ஆரல்வாய் மொழி, குமாரபுரம் சாலை யிலும், திருப்பதிசாரம், வெள்ளமடம் சாலை வழியாகவும் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.
இவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதோடு, இணைப்பு சாலைகளில் திரும்பும் போது அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுகிறது.
இதுபோல வெள்ள மடம்-குலசேகரன்புதூர் ரோட்டில் 4 வழிச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை செங்குத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாககனங்களும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கிறது.
இப்படி விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளுக்கு செல் வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சாைலையில் விபத் துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சாலை போக்கு வரத்து துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.
மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாலுகா போலீசார் ரோந்து சென்றனர்.
- அப்போது சட்டவிரோதமாக மது விற்ற விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு சட்டவிரோதமாக மது விற்ற திங்களூா் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சோலார் டாஸ்மாக் கடை அருகே நின்றுகொண்டு சட்டவிரோதமாக மது விற்ற சாஸ்திரி நகரை சேர்ந்த சிவக்குமாரை தாலுகா போலீசாரும்,
ஈரோடு ரெயில்நிலையம் அருகில் மதுவிற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த பாண்டியராஜூவை (31) சூரம்பட்டி போலீசாரும்,
சூளை குப்புக்காடு பகுதியில் மது விற்ற சுக்கிரமணியன் வலசை சேர்ந்த சொக்கலிங்கம் (47) என்பவரை வீரப்பன்சத்திரம் போலீசாரும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
- அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- இளநீர் வாங்குவது போல் நடித்து மாணவரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
- இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிதாகபட்டியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மகன் மரம்பதி(வயது17). பிளஸ்-2 மாணவர். இவர் கோடை விடுமுறையில் இளநீர் விற்பனை செய்து வருகிறார். அவர் மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் உள்ள வல்லாளபட்டி பகுதியில் நேற்று இளநீர் விற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இளநீர் வாங்குவது போல் நடித்து மரம்பதி சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் இளநீர் விற்ற பணம் ரூ.3 ஆயிரத்து 220 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதுபற்றி முத்தழகன் மேலவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாணவரிடம் பணம் பறித்த மேலூரைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டி கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தினேஷ் குமார் (வயது 24), மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் என்.புதுப்பட்டியிலிருந்து லத்துவாடி செல்லும் சாலையில் அவரது அண்ணன் சதீஷ் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குரும்பர் தெரு வேகத்தடை அருகே வந்தபோது எதிரே வந்தவர்கள் இவர்களைப் பார்த்து தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்ட தினேஷ்குமாரை, சதீஷ் ஆகியோரை எதிர் தரப்பினர் அடித்து, உதைத்து, காயப்படுத்தினர்.
வலி தாங்க முடியாமல் அவர்கள் இருவரும் சத்தம் போட்டனர். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து, இருவரையும் தாக்கியவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர் காயமடைந்த தினேஷ்குமார், சதீஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தினேஷ்குமார் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் தினேஷ்குமார், சதீஷை தாக்கிய வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த உதயசூரியன் மகன் சரவணன் (29), குமார் மகன் விஜய் (20), லோகநாதன் மகன் சதீஷ்குமார் (29), கருப்பையா மகன் சத்தியசீலன் (28), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- மாயவன் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
- கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே ராவுத்தநல்லூரில் கோவில் திருவிழா நடைபெற்றது. தொடர்ந்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே ஊரைச் சேர்ந்தவர் மாயவன் (வயது50). அவர் அனைவரும் வரிசையாக நின்று கூழ் வாங்கிச் செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடை ந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அரிவாள், உருட்டு கட்டையுடன் மாயவனை தாக்கினார். பதிலுக்கு மாயவன் தரப்பினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிரவன், சக்திவேல், எம்.ஜி., சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலை மறைவான தனஞ்செழியன், பிரகலாதன், வீரமணி, மணி, சவுந்தர், தனுசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே பாதுகாப்புக்காக போ லீசார் குவிக்கப்ப ட்டுள்ளனர்.
- லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி இருக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாலிபர்கள் திருஞானசண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிராஜிஸ் (21), சிஜி (25), ராஜேஷ் (30), திணேஷ் (25) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மதுரை அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது.
மதுரை
மதுரை திலகர் திடல் போலீசார் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. விசாரணையில் அவர்கள் வழிப்பறி செய்யும் நோகத்தில் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்த பாசிங்காபுரம் காளியம்மன் கோவில் தெரு, பழனிவேல் மகன் பிரதீப் என்ற சுருட்டை (21), விளாங்குடி, டெம்சி காலனி மணி (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம், பெரிய ரத வீதியைச் சேர்ந்த செல்வம் மகன் தமிழரசன் என்ற தமிழ் (வயது21). திருநகர், இலகுவனார் தெருவை சேர்ந்தவர் சிவா என்ற சிவபிரியன் (28). இவர்கள் 2பேர் மீதும் கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் அவர்கள் மீண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்தது. எனவே அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி தமிழரசன் என்ற தமிழ், சிவா என்ற சிவப்ரியன் ஆகிய 2பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் அவர்களை மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி துடியலூரில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் வட மாநில அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து சரவணம்ப ட்டி போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனை யில் மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர்கள் புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 33), திருப்பூர் மங்கலத்தை சேர்ந்த முகமது ஆசிப் (24), திண்டுக்கல் முத்து நகரை சேர்ந்த மதன்தாஸ் (25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த ராஞ்சியை சேர்ந்த 25 வயது அழகி, பெங்களூரை சேர்ந்த 33 வயது அழகி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 21 வயது அழகி, குஜராத்தை சேர்ந்த 27 வயது அழகி, டெல்லியை சேர்ந்த 33 வயது அழகி உள்பட 5 வடமாநில அழகிகளை போலீசார் மீட்டனர்.
அவர்கள் 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படை த்தனர். கைது செய்யப்பட்ட 3 புரோக்கர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதேபோல காட்டூர் அலமு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்த போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புதுச்சேரியை சேர்ந்த புரோக்கர் சூர்ய பிரகாஷ் (19) என்பவரை கைது செய்தனர். பின்னர் வீட்டில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த குஜராத்தை சேர்ந்த 20 வயது அழகியை போலீசார் மீட்டனர்.
அவரை ஒண்டிப்புதூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் சூர்ய பிரகாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.