என் மலர்
நீங்கள் தேடியது "4 பேர் பலி"
- போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே வாலிபரை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் ராமன் (23) இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டின் பின்பு உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் மிதந்த ராமன் உடலை போலீசார் மீட்டனர்.இதில் துர்நாற்றம் அதிகமாக வீசியது. போலீசாருக்கு அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் உறவினர்களே ராமனை கல்லால் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மொட்டமலைபட்டியை சேர்ந்த குணசேகரன், கார்த்திக் ராஜா, சின்னக் கரந்தி, அம்மணி உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோனர்பாளையம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கோழிகளை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெட்டிபாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் மணி,
வெள்ளிதிருப்பூரை சேர்ந்த செல்லீஸ்வரன் மகன் விக்னேஷ், நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த கோபால் மகன் கணபதி, மைக்கேல் பாளையம் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோழியை மீட்டனர். பின்னர் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் போலீசார் நேற்று காலை முத்தூர் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தூர் அருகே உள்ள வரட்டுகரை என்ற இடத்தில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த அவிநாசி பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 28) வெள்ளகோவில், கரூர் ரோட்டில் ஒரு தனியார் மது பார் அருகே மது பாட்டில்களை விற்பனை செய்த ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (31) ஓலப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடை அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 20 மது பாட்டில்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓலப்பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிகாட்டுவலசு என்ற இடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த மாரிமுத்து (60) என்பவரை கைது செய்து கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கஞ்சா விற்றதாக 4 பேரை கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.2,200 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
மாவட்டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடை பெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக மகராஜகடை அருகே உள்ள பூசாரிப்பட்டி கோவிந்த ராஜ் (21), ஓசூர் பழைய வசந்த நகர் பிரிதிவி மேனன் (25), அஞ்செட்டி அருகே பஞ்சல் துணையை சேர்ந்த கத்தாலப்பா (43), குருபரப்பள்ளி அருகே உள்ள தாண்டவராயன் கொட்டாய் பார்த்திபன் (32) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2,200 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் அந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 320 பணத்தை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சாவகாட்டுபாளையம் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நம்பியூர் பகுதியைச் சேர்ந்த பரமேஷ் மகன் ஆனந்தன் (வயது 38), அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் சரவண சுந்தரம் (46), ராமகிருஷ்ணன் மகன் கனகராஜ் (45), திருமூர்த்தி மகன் பிரசாந்த் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.1650-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி பிரதாப் (வயது 30), அன்பரசு(20), விக்னேஷ் (19), சசிகுமார் (21) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வின்னேஷ் தரப்பினர் பிரதாப்பை தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
- போலீசார் சட்ட விரோதமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாநிலம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி மதுபா னங்கள் ஏதேனும் விற்கப்ப டுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு தடையை மீறி சட்டவி ரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த ஆண்டிபாளையம் பிள்ளை யார் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது 58), பவானி பூலப்பா ளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் அஜய் (19) ஆகியோரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 12 மது பாட்டில்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்து 600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைப்போல் கவுந்த ப்பாடி, அங்கம்பாளையம் பகுதியில் தடையை மீறி மது விற்று கொண்டிருந்த கவுந்தப்பாடி பூபதி (53), அங்கம்பாளையம் ராசு மகன் விக்னேஷ் (28) ஆகி யோரை கவுந்தபாடி, சிறுவ லூர் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.680-ஐ போலீசார் பறிமு தல் செய்தனர். பின்னர் போலீசார் சட்ட விரோ தமாக மதுவிற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.
- 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இடையர்பாளையம் மாசாணி அம்மன் கோவில் அருகே ரோந்து வந்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக சேவல் வைத்து சூதாடி கொண்டு இருந்த போகம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 23), பல்லடம் தாலுகா சுக்கம்பாளையத்தை சேர்ந்த கோபால்(33), தேகாணியை சேர்ந்த சரண்(20), சதீஷ்குமார்(27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 சேவல்கள், ரூ.5 ஆயிரத்து 250 மற்றும் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கோபி, சித்தோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21),
சித்தோடு அம்மன் நகரை சேர்ந்த பாலநாதகுமார் (50), சென்னிமலை பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணி (57), சக்தி வடக்கு பேட்டையை சேர்ந்த இன்பராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
- 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோமீட்டர் தூரம் 4 வழி சாலையாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலையில் பெரிய காவனம் ரெயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள் பழமைவாய்ந்த 5 கோவில்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார், நில எடுப்பு தனி தாசில்தார் ரமேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம் செய்தனர்.