என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பழைய கோர்ட்டு அருகே ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் பரமத்தி போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பரமத்தி பழைய கோர்ட்டு வீதி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 205 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஒருவர் கைது
அதேபோல் பிலிக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்த வள்ளியம்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பழனி (55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
- அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்ஸ்சில் அடையாளம் தெரியாத நபர் பலியானார். அதே சாலையில் திருச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். மாண்டூர் உர நிறுவனம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரி யாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்தி லேயே தலை நசுங்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணை நல்லூர் போலீசார் இவ்விரு விபத்துகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் வார ச்சந்தை, கோபி பஸ் ஸ்டாப் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வெள்ளி த்திருப்பூர், கோபி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளி திருப்பூர் பகுதி யைச் சேர்ந்த ராசு மகன் கண்ணன் (வயது 32), கோபி முடச்சூர் பகுதியை சேர்ந்த சிவனு மகன் பாலசுப்பி ரமணியம் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் பவானி கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவானியை சேர்ந்த மாணி க்கம் மகன் சவுந்தர்ராஜன்,
கருங்கல்பாளையம் கந்தசாமி மகன் குணசேகரன் (49), கருங்கல்பா ளையம் காவிரி ரோடு மாணிக்கம் மகன் தேவராஜ் (42) ஆகியோர் மீது கருங்க ல்பா ளையம், பவானி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
மேலும் அவர்களிடமி ருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
- சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது27), அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்கிற யுவராஜ் இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியலை கத்தியால் சேதப்படுத்தினர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் நாட்டாமை சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த நாட்டாமை சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாரி முத்து, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது.
தேனி:
ஆண்டிபட்டி அருகே குள்ளப்புரம் கோவில் புரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 54). இவர் தனது உறவினர் பழனிச்சாமி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஆண்டிபட்டி - தேனி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவர்கள் மீது மோதியது. இதில் காயமடைந்த 2 பேரும் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். நண்பர்கள் 8 பேருடன் தேனி மாவட்டம் போடி வந்தார். தேவாரம் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைகீழாக கவிழ்ந்ததில் பாலமுருகன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் அவருடன் வந்த 8 பேரும் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
- வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பழனி:
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி தனியார் மில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அந்தபெண் சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனாலும் அவர்கள் பைக்கில் சென்றபோது பொதுமக்கள் துரத்திச் சென்று மாவட்ட எல்லையான ெகாழுமத்தில் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.பின்னர் இது குறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த காதர் மகன் நியாஸ்தீன் (வயது33), காதர் அலி மகன் உமர்முக்தார் பாரூக் (26) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் இதற்கு முன் வேறு யாரிடமாவது வழிப்பறி செய்துள்ளார்களா? இக்கும்பலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது போதையில் வாலிபரின் தலையில் பீர்பாட்டிலால் அடித்ததால் படுகாயமடைந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி மகன் தினேஷ் (வயது 27). ஜோதிடர். இவரது மைத்துனர் மாரிமுத்து. இவர்கள் 2 பேரும் நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த சரவணன் மகன் முத்துமணி (வயது 25), முனியாண்டி மகன் அலெக்ஸ் குமார் (22) ஆகிேயார் மோட்டார் சைக்கிளில் மது போதையில் ஏறி தகராறு செய்தனர். அப்போது அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துமணி ஆத்திரத்தில் மாரிமுத்து தலையில் அடித்தார். இதில் மாரிமுத்து மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.
இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே முத்துமணி, அலெக்ஸ்குமார் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இதனைத் தொடர்ந்து மாரிமுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து தினேஷ் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜிடம் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து முத்துமணி, அலெக்ஸ் குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
- ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
- கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சேலம்:
சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- வீடு புகுந்து பணத்தை திருடியவர்கள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
- சிசிடிவி காமிரா காட்சிகள் மூலம் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம், கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு 3 வது தெருவை சேர்ந்தவர் சரண்யா.(வயது 37).இவரது வீட்டில் கடந்த 12ந் தேதி இரவு வீட்டின் கதவை உடைத்து பணம் ரூ 1,50,000 த்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில்,நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில்,சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி,நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்டு,தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகம்மது அலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர்.அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் மணிகண்டன்,சக்திவேல் ஆகியோர் உதவியுடன் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் சீலப்பாடியைச் சேர்ந்த முகமது பிலால் (வயது 30),கோபால் நகரைச் சேர்ந்த நாகேந்திரன் (24)ஆகிய 2 பேர் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,25,000 பணம்,கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் முகமது பிலால்,நாகேந்திரன் ஆகிய 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உடல்நலக்குறைவு மற்றும் குடும்ப பிரச்சினைகாரணமாக 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி வேணி (வயது 25). இவர்களது மகள் பூஜா (5). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாகராஜிடம் கோபித்துக் கொண்டு பூஜா தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் வேணிதிடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 36). இவருக்கு துர்கா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நாகேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.