என் மலர்

  நீங்கள் தேடியது "நோக்கியா 6.2"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokiamobile #smartphone  ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. வரும் நாட்களில் ஹெச்.எம்.டி. குளோபல் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஐந்து கேமரா கொண்ட நோக்கியா 9, டிஸ்ப்ளேவில் துளை கொண்ட நோக்கியா 8.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனும் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. நோக்கியா 8.1 பிளஸ் போன்றே நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனிலும் டிஸ்ப்ளேவினுள் கேமரா வழங்கப்படுகிறது.  நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம் என இருவித வேரியன்ட்களில் வெளியாக இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் லென்ஸ், OZO ஆடியோ வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

  ஆண்ட்ராய்டு ஒன் சாதனமாக வெளியாகும் நோக்கியா 6.2 (2019) ஸ்மார்ட்போனின் விவரங்கள் முதல் முறையாக வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை பொருத்த வரை சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நடைபெறலாம் என தெரிகிறது.

  முன்னதாக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப்பட்டு, கூடுதலாக தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. #Sarkar #ARMurugadoss
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

  படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன. 

  இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

  இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  அரசு தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேவராஜனிடம் பிரபலமானவர்கள் செய்தால் அது தவறு; பிரபலம் இல்லாதவர்கள் செய்தால் அது தவறில்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். #Sarkar #ARMurugadoss
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் பட விவகாரம் தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். #Sarkar #ARMurugadoss
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு பின்னர் வெளியானது. 

  படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்பட்டன.  இந்த நிலையில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று பிற்பகலில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. #Sarkar #ARMurugadoss

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் `சர்கார்' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வெற்றியை மிக்ஸி, கிரைண்டருடனான கேக் வெட்டி படக்குழு வெற்றியை கொண்டாடியுள்ளனர். #Sarkar #SarkarSuccessParty
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் `சர்கார்'. 
  படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொழுத்துவது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்ததால் எதிரிப்பு கிளம்பியது.

  அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

  இதையடுத்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியதை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், 6 நாட்களில் சர்கார் படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளது.  இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழு கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். அந்த கேக்கில் மிக்ஸி, கிரைண்டர் வடிவம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. #Sarkar #SarkarSuccessParty #SarkarSuccessMeet

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளனர். #ARMurugadoss #Sarkar
  விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

  மேலும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. 

  அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 

  இந்த நிலையில், படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.   இதற்கிடையே படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டின் கதவை தட்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

  இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ARMurugadoss #Sarkar #Vijay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியில் சர்கார் படத்தின் டிக்கெட் வாங்க விஜய் ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த வந்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #Sarkar #Vijay
  கூடுவாஞ்சேரி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடேஷ்வரா தியேட்டர் உள்ளது.

  இங்கு தீபாவளியையொட்டி நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் நாளை ரிலீஸ் செய்யப்படுகிறது.

  படத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று நடந்தது. டிக்கெட் எடுப்பதற்காக விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இன்று அதிகாலை முதலே தியேட்டர் முன்பு குவிந்தனர்.

  இதனால் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் உருவானது.

  இதுபற்றி அறிந்ததும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர்.

  ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரால் அவர்களை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

  இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் டிக்கெட் எடுக்க வந்திருந்தவர்கள் அலறியடித்து சுவர் ஏறிக் குதித்து ஓட்டம் பிடித்தனர். போலீசாரின் தடியடியில் ரசிகர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் தடியடி காரணமாக தியேட்டரில் சிறிது நேரம் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. #Sarkar #Vijay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Sarkar #Vijay
  விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது.

  இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மகேந்திர பாண்டி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். 

  அதில் கூறியிருப்பதாவது:-

  மதுரையில் சர்கார் படத்துக்கு ரூபாய் 500 முதல் 1,000 வரை ஆன்லைனில் வசூலித்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். இதனால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பும் நடைபெறுகிறது. எனவே, மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் 2017-ல் உள்துறை செயலர் (சினிமா) வெளியிடபட்ட அரசாணைப்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  நேற்று இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்துவைத்தனர். #Sarkar #Vijay 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படம் சிறப்பு காட்சிக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
  விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் கதைக் கரு தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ஆம் தேதி ரிலீஸாகிறது.

  தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார்.

  இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டது.  தேவராஜ் இதுபற்றி கூறும் போது, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும், கூடுதல் காட்சி அனுமதி இன்றி ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம். அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்’ என்றார். #Sarkar #SarlarSpecialShows #Vijay

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் `சர்கார்' படத்தின் முன்னோட்டம். #Sarkar #Vijay #KeerthySuresh
  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `சர்கார்'.

  விஜய் - கீர்த்தி சுரேஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி, பிரேம்குமார், துளசி சிவமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  இசை - ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - கிரிஸ் கங்காதரன், கலை இயக்குனர் - டி.சந்தானம், சண்டைப்பயிற்சி - ராம், லக்‌ஷ்மன், நடனம் - பிருந்தா, ஷோபி பால்ராஜ், தயாரிப்பு - கலாநிதி மாறன், தயாரிப்பு நிறுவனம் - சன் பிக்சர்ஸ், எழுத்து - ஏ.ஆர்.முருகதாஸ், ஜெமோகன், இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்.  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது,

  விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். முதல் படம் துப்பாக்கி பண்ணும் போது, அவருடைய படங்களை முதலில் பார்துவிட்டு நான் ஒரு கணக்கில் இருந்தேன். என்னுடைய கதையை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் விஜய். அவருடைய திறமைக்கு ஏற்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கத்தி படம் பண்ணோம். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து சர்கார் படம் பண்ணியிருக்கிறேன்.  இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி என்னால் பெரியதாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். உங்களுக்கும் அது தோன்றும். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது. விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன். என்று கூறியிருந்தார்.

  தீபாவளி பண்டிகை நாளான வருகிற நவம்பர் 6-ஆம் தேதி சர்கார் வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh

  சர்கார் டீசர் பார்க்க:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதால் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Sarkar #Vijay
  நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள `சர்கார்' என்ற திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை, திரைக்கதை தன்னுடையது என்றும், சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

  திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜும் சர்கார் கதையும், வருண் ராஜேந்திரன் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.  இந்த நிலையில், சர்கார் படத்தின் மீதான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடந்தது. இந்த நிலையில், வழக்கு விசாரணையை காண இயக்குநர் பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை விவகாரத்தில் வருணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக முருகதாஸ் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இந்த வழக்கில் படத்தின் டைட்டில் கார்டில் தனது பெயருடன் நன்றி மற்றும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வருண் ராஜேந்திரன் மனுவில் கூறியிருந்தார்.   இந்த நிலையில், வருணின் கோரிக்கையை சர்கார் படக்குழு ஏற்றுக் கொண்டதால், இரு தரப்பினரும் சமரச முடிவுக்கு வந்தனர். இதையடுத்து வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார். மேலும் சர்கார் படத்தை ரிலீஸ் செய்ய தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

  சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த நிலையில், வருண் ராஜேந்திரனின் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பித்தக்கது. #Sarkar #Vijay #ARMurugadoss

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print