search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

  நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

  இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

   

  வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

   

  முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
  • காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

  புதுடெல்லி:

  குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

  இச்சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனிடையே, இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

  குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகிய செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

  மத்திய கிழக்கில் உள்ள நமது தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது.

  இந்திய அரசு, அதன் சகாக்களுடன் இணைந்து, நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

  • ராகுல் காந்தி பிரச்சாரங்களில் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது.
  • ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்கப்பட்டுள்ளது.

  இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம்போல பரபரப்புக்கும் ஆரவாரத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத வகையில் நடந்து முடிந்துள்ளது. வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பிரச்சாரத்தின்போது மக்களை வசீகரிப்பதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மினி முதல் மெகா அரசியல் தலைவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பிரச்சாரத்தின்போது செய்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.

  இந்த மொத்த தேர்தலிலும் ராகுல் காந்தி பேட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த சிவப்பு அட்டையிடப்பட்ட பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் ராகுல் காந்தியின் மைக்கின் அருகே அந்த சட்டப் புத்தகம் இருந்தது.

   

  இந்நிலையில் ராகுல் காந்தியால் கவனம் பெற்ற இந்த சிறிய சைஸ் பாக்கெட் சட்டப்புத்தக எடிஷனை அதிகம் பேர் வாங்கிவருவதால் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த EBC புத்தக நிறுவனம் தயாரித்த இந்த 624 பக்கங்கள் கொண்ட சட்டப்புத்தக 16 வது எடிஷன் கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்பக்கட்டு மொத்தமாக தீர்ந்துள்ளது. கோபால் சங்கரநாராயணன் தொகுத்த இந்த புத்தகத்துக்கான முன்னுரையை முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

   

  • வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது.
  • வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார்.

  திருவனந்தபுரம்:

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார். தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதே நேரம் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

  எனவே 2-ல் ஒரு தொகுதி எம்.பி. பதவியை அவர் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார். இதில் வயநாடு தொகுதியை தான் ராகுல்காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை வயநாடு மாவட்ட மற்றும் கேரள காங்கிரசார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வலியுறுத்த ராகுல் காந்தியை சந்திப்பதற்காக 2 பேர் கொண்ட குழு டெல்லி சென்றுள்ளது.

  இந்த நிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக ராகுல்காந்தி இன்று வயநாடு செல்கிறார். இதற்காக காலை 10.30 மணிக்கு மலப்புரம் மாவட்டம் வந்த அவருக்கு எடவண்ணா பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வயநாடு தொகுதியை தக்க வைக்க அவரை வலியுறுத்த உள்ளதாக ராகுல்காந்தியின் தேர்தல் குழு ஓருங்கிணைப்பாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  வயநாடு தொகுதி ராகுலின் இதயத்திற்கு நெருக்கமானது. ரேபரேலி தொகுதி அவரது குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளது. நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அவர்கள் மத்தியில் தவறான எண்ணம் இருக்க கூடாது. எனவே ராகுல் காந்தி, வயநாடு தொகுதியை தக்க வைக்க வலியுறுத்துவோம். இல்லாத பட்சத்தில் அவருக்கு மாற்றாக பிரியங்கா போட்டியிடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

  வயநாடு தொகுதி மக்களுடன் ராகுல் காந்தி நெருங்கிய தொடர்பில் உள்ளார். வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் வீடுகளுக்கு, மாநில மந்திரிகள் செல்வதற்கு முன்பாகச் சென்று ஆறுதல் கூறினார். தற்போது அவர் ஒருபுறம் மேல்தட்டு பரம்பரைக்கும் மறுபுறம் முழுக்க முழுக்க பாசத்துக்கும் இடையில் சிக்கி இறுக்கமான இடத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியை தக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்போம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
  • ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வென்றார்.

  லக்னோ:

  பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யின் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வென்றார்.

  இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மூத்த தலைவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ரேபரேலி தொகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

  எங்களை வெற்றிபெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும், அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது. இந்த முறை சமாஜ்வாதி தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களுடன் ஒற்றுமையாக போராடினார்கள்.

  அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவையும், ரேபரேலியில் என்னையும், உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களையும் வெற்றிபெறச் செய்தீர்கள்.

  ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.

  பா.ஜ.க. அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என தெரிவித்தார்.

  • பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது.

  இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம்.

  அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன்.

  பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • தெலுங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாதவி லதா போட்டியிட்டார்.
  • இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்றார்.

  புதுடெல்லி:

  பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட மாதவி லதா தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி வெற்றி பெற்றார்.

  இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் மாதவி லதா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியால் நாடு சோர்ந்து போனதால்தான் மோடி மீண்டும் பிரதமர் ஆனார். விஸ்வ குரு பட்டத்தை அடையும் உயரத்திற்கு இந்தியாவை கொண்டு செல்ல மோடிஜி இந்த அமைச்சரவைக்கு முத்து மற்றும் வைரங்களை (அமைச்சர்களை) தேர்ந்தெடுத்துள்ளார் என தெரிவித்தார்.

  அப்போது அவரிடம், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது குறித்த கேள்விக்கு பதலளித்த மாதவி லதா, அவர் ஏதாவது கற்றுக் கொள்வார். மோடிக்கு எதிரே அமர, படித்துக் கற்றுக் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டார்.

  தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் மாதவி லதா என்பது குறிப்பிடத்தக்கது.

  • எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை.
  • எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் அதிகரித்துள்ளது.

  புதுடெல்லி:

  இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது.

  வெறும் பொழுது போக்கு தளமாக மட்டு மல்லாமல் சமூக வலைதளங்களை அரசியல் கட்சியினர் தங்களது பிரசார கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

  பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் பிரசாரம் மற்றும் கட்சி நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  கட்சி தலைவர்களின் வலைதள பக்கங்களை தொண்டர்கள் மட்டு மல்லாது இளைஞர்கள் உள்பட பலதரப்பட்டவர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

  அந்த வகையில் சமீப காலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது புள்ளி விபரங்களின் படி தெரியவந்துள்ளது.

  நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் பிரசாரம், அதற்கு முன்பாக அவர் நாடு முழுவதும் நடத்திய நடைபயணம் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டன.

  அவற்றை பல லட்சக்கணக்கானோர் லைக் செய்த நிலையில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் ஆகியவற்றில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான கால கட்டத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது.

  அதே நேரத்தில் இந்த தளங்களில் இதே கால கட்டத்தில் மோடியை பின் தொடர்பவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஓரளவு குறைந்திருப்பதும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.

  அதாவது இந்த கால கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 30 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில் சமூக வலை தளங்களில் மோடியை புதிதாக பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் மாதத்திற்கு சராசரியாக 5 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆட்டம் கிரே என்ற டிஜிட்டல் நிறுவன தரவுகளில் தெரியவந்துள்ளது.

  எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் மாதத்திற்கு சராசரியாக 61 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.

  அதே நேரம் எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. மேலும் யூடியூப்பிலும் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

  அதே நேரம் மோடியை பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 3 சதவீதம் குறைந்து உள்ளது. ஒட்டு மொத்தத்தில் சமூக வலைதளங்களில் மோடியை பின்பற்று பவர்களின் எண்ணிக்கையை விட ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் ஒவ்வொரு வலைதளத்திலும் மிகவும் அதிகமாக உயர்ந்தது.

  அதே நேரம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களை விட பாஜகவின் பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எக்ஸ் தளத்தில் பாஜகவை 2.2 கோடி பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு 1.6 கோடியாக உள்ளது.

  அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியை விட எக்ஸ் தளத்தில் பாஜகவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து வருகிறது.

  • வயநாடு தொகுதியை தான் விட்டுக் கொடுப்பார் என கூறப்படுகிறது.
  • ராகுலின் செயல் நெறிமுறைக்கு புறம்பானது.

  திருவனந்தபுரம்:

  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற அவர், விரைவில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளார்.

  இதில் அவர் வயநாடு தொகுதியை தான் விட்டுக் கொடுப்பார் என கூறப்படுகிறது. இந்த தொகுதியில் கடந்த முறை வென்ற அவர், 2-வது முறையாகவும் தனக்கு வெற்றியை கொடுத்த மக்களுக்கு துரோகம் செய்வதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி பெற்ற ஆனிராஜா, வயநாடு தொகுதி மக்களை ராகுல்காந்தி ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  ராகுலின் செயல் நெறிமுறைக்கு புறம்பானது. தேர்தலுக்கு பின்னர் தொகுதியை மாற்ற நினைக்கும் ராகுல்காந்தி, வயநாடு மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். 2 தொகுதிகளில் போட்டியிடும் சூழ்நிலையை வயநாட்டு மக்களிடம் ராகுல்காந்தி முன்பே சொல்லியிருக்க வேண்டும். இது அரசியல் தார்மீகப் பிரச்சனை. அவர் வயநாடு தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டார்.

  ராகுல்காந்தி ராஜினாமா செய்தபிறகு வரும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்பதை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும், இடது சாரிகளும் தான் முடிவு செய்வார்கள். அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பில் பெண்களின் இருப்பு வலுப்பெற வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.