பப்பு யாதவ் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: ராகுல் காந்தி

பீகாரின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை எம்.பி.யாக பப்பு யாதவ் உள்ளார். பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பப்பு யாதவ் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

பப்பு யாதவ் என்ற ராஜேஷ் ரஞ்சன், பீகார் மாநிலத்தின் பூர்ணியா தொகுதியின் சுயேட்சை மக்களவை உறுப்பினராக உள்ளார்.

பீகார் போலீசார் பப்பு யாதவை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர். 1995-ம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத்தகராறு வழக்கு தொடர்பாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.

இந்நிலையில், பப்பு யாதவ் கைதுக்கு காங்கிரஸ் எம்பியான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்..

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான முறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை வெளிப்படுத்தியது. அந்த மகளுக்கு நீதி கோரி குரல் கொடுத்த பப்பு யாதவ் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com